ஆர். பி. உலகநம்பி
ஆர். பி. உலகநம்பி (R. P. Ulaganambi) என்பவர்(10 ஜூன் 1938 - 7 ஜனவரி 2020) தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தார் .
ஆர். பி. உலகநம்பி | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1971–1977 | |
முன்னையவர் | குசேலர் |
பின்னவர் | வி. தண்டாயுதபாணி |
தொகுதி | வேலூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சூன் 1938 |
இறப்பு | 7 சனவரி 2020 | (அகவை 81)
வாழ்க்கை வரலாறு
தொகுஉலகநம்பி 1938ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி இராணிப்பேட்டையில் பிறந்தார்.[1] இவர் தான் போசுகோ உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் கல்வி பயின்றார் . இவர் 1971-ல் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர், கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக விலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
உலகநம்பி 7 ஜனவரி 2020 அன்று தனது 81வது வயதில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ULAGANAMBI, SHRI R. P." Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.
- ↑ "Fifth Lok Sabha". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.
- ↑ "Former Vellore MP Ulaganambi dead". The Hindu. 8 January 2020. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.