அப்துல் லத்தீப் (அரசியல்வாதி)
அப்துல் லத்தீப் (பிறப்பு:-சூலை 1, 1936 இறப்பு:- திசம்பர் 17, 2001) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மஞ்சவல்லியில் பிறந்தார். இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். நான்கு முறை வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினராகவும், ஒருமுறை சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினராகவும்,[1][2][3][4][5][1][2] ஒருமுறை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், பின்னர் இந்திய தேசிய லீக் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமது இறுதிகாலம் வரை பணியாற்றினார்.
1980 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 47.64% வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவினார்.
சட்டமன்ற உறுப்பினராகதொகு
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
1971 | வாணியம்பாடி | சுயேட்சை | 27899 | 56.13 |
1977 | வாணியம்பாடி | சுயேட்சை | 26,620 | 42.86 |
1989 | சேப்பாக்கம் | திமுக | 33,104 | 50.21 |
1996 | வாணியம்பாடி | திமுக | 74,223 | 67.36 |
2001 | வாணியம்பாடி | சுயேட்சை | 54,218 | 48.26 |
மேற்கோள்கள்தொகு
- ↑ 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India