தமிழ்நாடு வக்பு வாரியம்

இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத (மார்க்க) சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிப்பதே வக்பு ஆகும். தமிழ்நாடு அரசு பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்படுகிறது.[1]

TAMIL NADU WAKF BOARD
தமிழ்நாடு வக்பு வாரியம்
துறை மேலோட்டம்
அமைப்பு1954
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்சென்னை
வலைத்தளம்http://www.tnwakfboard.com/

இஸ்லாமியரின் மத (மார்க்க), சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் அடக்க தளங்கள் (தர்கா)களுக்கும் வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன.

அமைப்பு

தொகு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வக்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்புக்கள் அங்கீகாரம் பெற்று உள்ளன. வக்பு வாரிய சொத்துக்களை திறமையாக நிர்வாகம் செய்ய அறக்கட்டளை நிர்வாகிகளின் அதிகாரத்தை சட்டம் கட்டுப்படுத்துகிறது.

வக்பு சட்டம் மாநில அரசுகளின் மூலமாக வக்பு வாரியங்கள் செயல்படுவதற்கும் வக்பு சொத்துக்கள் திறமையான முறையில் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சம்பத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 1954 ஆம் ஆண்டு வக்பு சட்டம் நாடளுமன்றதால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் சில குறைப்பாடுகள் இருந்த காரணத்தால் 1959,1964 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1995 இல் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பேரில் பரவலான அம்சங்களை உள்ளடக்கிய புதிய சட்டம் இயற்றப்பட்டது. எனவே இல் இயற்றப்பட்ட வக்பு சட்டம் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்ப்படுதப்பட்டு வருகிறது.

மாநில அரசுகள் வக்பு வாரியங்களை அமைக்க வேண்டும் என்பது வக்ப் சட்ட நெறிமுறை வகுத்து உள்ளது. வக்பு சொத்துகளை ஆய்வு செய்வதுடன், வக்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண வக்பு நடுவர் மன்றங்களை ஏற்படுத்தவும் இந்த பணிகளுக்காக ஆய்வு ஆணையர்களையும் நியமிக்க வேண்டும் என்றும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. இதுவரை தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, அஸ்ஸாம், பிஹார், குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், பஞ்சாப்,மகாராஷ்டிரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் வக்ப் வாரியங்களை அம்மாநில அரசுகள் அமைத்துள்ளன.

புதுச்சேரி, சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய மத்திய ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் வக்ப் வாரியங்களை அமைத்து உள்ளன.

அருணாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் தாமன், தியு யூனியன் பிரதேசத்திலும் வக்பு வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை.1995 வக்பு சட்டத்தில் 83 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வக்பு நடுவர் மன்றங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

வக்பு நெறிமுறைகளை 14 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவிக்கை செய்துள்ளன. இதர ஆறு மாநிலங்கள் வெறும் நெறிமுறைகளை மட்டும் இயற்றி உள்ளன.எஞ்சியுள்ள மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மாநிலத்தில் சியா பிரிவு வக்பு சொத்துக்கள் இருந்து அவர்களுக்கு தனியே வாரியம் இல்லாத பட்சத்தில் வக்பு வாரியத்தில் சியா பிரிவை சேர்ந்த ஒருவர் இடம்பெற வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது.

பணியமைப்பு

தொகு

வாரியத்தின் நிர்வாக அலுவலர் முதன்மை செயல்அலுவலர் ஆவார். நிர்வாக மேன்மைக்காக வாரியம் தன்னகத்தே 11 சரக அலுவலகங்களைக் கொண்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், பண்ருட்டி, சேலம்,கோயமுத்தூர்,தஞ்சாவூர்,திருச்சி, மதுரை,இராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன. ஒவ்வொரு சரகமும் ஒரு கண்காணிப்பாளரால் நிர்வகிக்கப்படுகிறது. 31 மாவட்டங்களுக்கு 33 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேரடி நிர்வாகத்தில் உள்ள வக்புகளுக்கு நிர்வாக அலுவலராக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வக்பு வாரியத்தின் பணிகள்

தொகு
 • ஒவ்வொரு வக்பின் தோற்றம், வருவாய், நோக்கம், பயனாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் அடங்கிய பதிவுரு பேணுதல்.
 • வக்பு சொத்துக்களும், அதன் வருமானமும் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணித்தல்.
 • வக்பு நிர்வாகத்திற்காக கட்டளை இடுதல்
 • வக்புகளின் நிர்வாகத்திற்காக திட்டம் தீட்டிகொடுத்தல்
 • வக்புகளின் கணக்கை தணிக்கை செய்வதற்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முத்தவல்லிகள் சமர்ப்பிக்கும் வரவு-செலவை ஆய்வுசெய்து அங்கீகரித்தல்
 • வக்பு சட்டப்படி முத்தவல்லிகளை நியமித்தல் மற்றும் நீக்குதல்
 • இழந்த வக்ப் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்த்தல்
 • வக்பு மற்றும் வக்பு சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நடததுதல்
 • வக்பு சட்டத்திற்கு உட்பட்டு வக்பு சொத்துக்கள் விற்பனை, குத்தகை, ஒத்தி, பரிமாற்றம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்குதல்
 • வக்பு நிதியை நிர்மாணித்தல்
 • வக்பு சொத்துக்கள் சம்பந்தமாக வாரியத்திற்கு அவ்வப்போது தேவைப்படும் தகவல்களை முத்தவல்லிகளிடம் கேட்டல்
 • வக்பு சொத்துக்களின் தன்மை பரப்பளவு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவு செய்தல் மற்றும் அளவை செய்தல்

இவற்றை தவிர அரசு வழங்கும் மானியதொகை மூலம் நலிவுற்ற வக்ப் நிறுவனங்களை பழுதுபார்ப்பதற்கும், மையவாடிகளில் சுற்றுசுவர் எழுப்புவதற்கும், உலமாக்கள் ஓய்வூதியம் வழங்குதல், 1986ஆம்ஆண்டு முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்டப்படி மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்குதல் போன்ற பணிகள் வாரியம் செய்து வருகிறது.

கணக்கீட்டிற்குள் வரும் வக்புகள் மற்றும் கணக்கீட்டிற்குள் வராத வக்புகள்

தொகு

வக்பு சட்டம் 1995ன் பிரிவு 72(1)ன்படி ஒரு வக்பின் நிகர வருமானம் ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் ஐந்தாயிரத்திற்கு மேல் இருந்தால் அந்த வக்பு, வாரியத்திற்கு சகாயத் தொகை செலுத்த வேண்டும் இவை கணக்கீட்டிற்குள் வரும் வக்புகள் ஆகும். நிகர வருமானம் ரூபாய் ஐந்தாயிரத்திற்கு குறைவான வக்புகள் வாரியத்திற்கு சகாயத் தொகை செலுத்த வேண்டியதில்லை இவை கணக்கீட்டிற்குள் வராத வக்புகள் ஆகும். தமிழகம் முழுவதும் கணக்கீட்டிற்குள் வரும் வக்புகள் 2194 உள்ளன. கணக்கீட்டிற்குள் வராத வக்புகள் 4507 உள்ளன. வக்பு சட்டம் 1995ன் பிரிவு 72ன்படி வக்ப் சொத்துக்களின் வருமானத்தில் ஆண்டுதோறும் ஏழு சதவிகிதத்தை, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வரியாக செலுத்தி, முறையான கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க ஒவ்வொரு வக்பும் கடமைப்பட்டுள்ளது. இதிலிருந்து தவறுகிற வக்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வக்பு வாரியத்திற்கு அதிகாரம் உண்டு. கடந்த இரு ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட சகாயத் தொகை விபரம்

 • 2007-08 -ரூபாய் 1.86 கோடி
 • 2008-09 -ரூபாய் 2.31 கோடி

வக்பு சொத்துக்களின் மேம்பாடு

தொகு

காலியாக கிடக்கும் வக்ப் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் இந்த இடங்களை வர்த்தக ரீதியாக மேம்படுத்தி, இதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை பல நல்ல நடவடிக்கைகளுகென்று பயன்படுத்தவும் மதிய வக்பு குழு மத்திய அரசிடமிருந்து ஆண்டுதோறும் உதவி பெறுகிறது. திட்டமல்லாத பணிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

1974-75 ஆம் ஆண்டுகளில் இருந்து இத்திட்டம் செயல்ப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநில வக்பு வாரியங்கள் வக்ப் நிறுவனங்களுக்கென்று கடன் உதவி அளித்து வருகின்றன.

வக்பு நிலங்களில் திருமணக் கூடங்கள், மருத்துவமனைகள், குளிர்சாதன கூடங்கள், வர்த்தகக் கட்டடங்கள் போன்றவற்றை அமைக்கவும், 2004 ஆம் ஆண்டு மார்ச் ஆம் 31 தேதி வரை ரூ.2540 கோடியே இரண்டு லட்சம் நிதி உதவியாக மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதுவரை 168 வர்த்தக வளாகங்களை கட்டுவதற்கு இக்குழு உதவி உள்ளது. வட்டி இல்லா இலவச கடனாக இக்கடனுதவி மாநில வக்பு வாரியங்களுக்கு வழங்கப்படுகிறது. திருப்பி செலுத்திய கடன்கள் நிதி மூலதனமாக கணக்கிடப்படுகிறது. இந்த மூலதனத் தொகை மறுப்படியும் சிறிய திட்டங்களுக்கு முன் கடனாக வழங்கப்படுகிறது. அதிகப் பட்சம் ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. இதுப்போன்று 83 திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வக்பு - கல்வித் திட்டம்

தொகு

வக்பு குழு கடன் வழங்கும்போது இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறது. அதன்படி கடன் பெரும் வக்பு நிறுவனங்கள் கடன் உதவியில் ஆறு சதவிகிதத் தொகையை கல்விக்கு நன்கொடையாக வழங்கவேண்டும். இந்தத் தொகை ஏழை இஸ்லாமியரின் கல்விக்காக செலவழிக்கப்படும்.

இரண்டாவதாக கடனை திருப்பி செலுத்தியப் பிறகு கிடைத்த கூடுதல் வருவாயில் 40 சதவிகிதத்தை கல்விக்காக செலவழிக்க வேண்டும்.

கடன் பெரும் வக்பு அமைப்புகளிடம் இருந்து பெறப்படும் ஆறு சதவிகித நன்கொடையும், சுழல் நிதிக்கு கிடைக்கும் வங்கி வட்டியும் சேர்த்து குழுவின் கல்வி நிதியம் அமைக்கப்படுகிறது.

இந்த நிதி ஏழை மாணவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி பயிலுவதற்கு உதவி தொகையாக வழங்கப்படும். ஓராண்டுக்கு RS. 6000/- வரை தொழில்நுட்ப, தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், இதர பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் RS. 3000/- வரை உதவித் தொகையாக வழங்கப்படும்.

பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இஸ்லாமியப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் தொழில் நுட்பம் மற்றும் தொழில் கல்வி, பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கு உதவி தொகை வழங்க மாநில வக்ப் வாரியத்திற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தொழிற்பயிற்சி மையங்களை அமைப்பதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்பது மையங்களை ஏற்படுத்த மதிய வக்ப் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.

வக்பு வாரியக் கல்லூரி

தொகு

இந்தியாவில் வக்பு வாரியக் கல்லூரி மதுரையில் மட்டுமே உள்ளது. முகையத் ஷா சிர்குரோ வக்பு வாரியக் கல்லூரி, இது 1964 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்கள் வரிசைகிரமம்

தொகு
வக்பு வாரிய தலைவர்கள் வரிசைகிரமம்
வ.எண் பெயர் அமைப்பு காலம்
1 திரு.S.K.அகமது மீரான் முதல் ஐந்தாண்டு 18.2.58 முதல் 10.5.63 வரை
2 திரு.P.சர்புதீன் 2ஆம் ஐந்தாண்டு 11.5.63 முதல் 13.9.66 வரை
3 திரு.M.S.அப்துல் மஜீது 14.9.66 முதல் 19.11.67 வரை
4 திரு.H.K.காஜி,இ.ஆ.ப.(சிறப்பு அலுவலர்) 20.9.67 முதல் 8.4.69 வரை
5 திரு.F.அகமது இ.ஆ.ப.(சிறப்பு அலுவலர்) 9.4.69 முதல் 23.5.71 வரை
6 திரு.Dr.T.அமீருதீன்அகமது 3ஆம் ஐந்தாண்டு 24.5.71 முதல் 31.10.76 வரை
7 திரு.A.முகம்மது உபைத்துல்லா 4-ஆம் ஐந்தாண்டு 1.11.76 முதல் 6.7.78 வரை
8 திரு.S.H.சையதுயூசுப் 5-ஆம் ஐந்தாண்டு 7.7.78 முதல் 1.12.83 வரை
9 திரு.A.J.அப்துல்ரஜாக் ,B.A.,B.L., 6-ஆம் ஐந்தாண்டு 2.12.83 முதல் 28.5.89 வரை
10 திரு.M.அப்துல் லத்தீப் M.A,M.L.,M.L.A 7-ஆம் ஐந்தாண்டு 29.5.89 முதல் 15.3.92 வரை
11 திரு.S.அன்சார்அலி, இ.ஆ.ப.(சிறப்பு அலுவலர்) 16.3.92 முதல் 22.3.93 வரை
12 திரு.முகம்மது ஆசிப்,முன்னாள் அமைச்சர் 8-ஆம் ஐந்தாண்டு 23.3.93 முதல் 24.6.97 வரை
13 திரு M.அப்துல் லத்தீப் M.A,M.L.,M.L.A 9-ஆம் ஐந்தாண்டு 25.6.97 முதல் 16.7.99 வரை
14 திரு.நாகூர் E.M.ஹனீபா,Ex.M.L.C. 17.7.99 முதல் 3.1.02
15 திருமதி.பதர் சயீத், BA BL 10-ஆம் ஐந்தாண்டு 4.01.02 முதல் 26.3.07 வரை
16 திரு.செ.ஹைதர்அலி 11-ஆம் ஐந்தாண்டு 27.3.07 முதல் 09.06.09 வரை
17 திரு. கவிக்கோ அப்துல்ரகுமான் 10.06.09 முதல் 09.09.12 வரை
18 திரு. அ. தமிழ் மகன் உசேன் 12-ஆம் ஐந்தாண்டு 10.09.2012 முதல் 13.04.2016 வரை
19 திரு. அன்வர் ராஜா 14-ஆம் ஐந்தாண்டு 30.04.2018 முதல் 23.05.2019 வரை
20 திரு. ஏ. முகம்மது ஜான் 19.09.2020 முதல் 23.03.2021 வரை
21 எம். அப்துல் ரஹ்மான் 15-ஆம் ஐந்தாண்டு 23.07.2021 முதல்

தற்போதைய வாரிய உறுப்பினர்கள்

தொகு

முந்தைய வாரிய உறுப்பினர்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_வக்பு_வாரியம்&oldid=3819932" இலிருந்து மீள்விக்கப்பட்டது