பதர் சயீத்
தமிழக அரசியல்வாதி
பதர் சயீத் (Bader Sayeed 24 ஆகஸ்ட் 1946) ஓர் வழக்கறிஞர், தமிழக அரசியல்வாதி, இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பள்ளித் தோழி ஆவார்.
பிறப்பு
தொகுரஷீத் அகமது சயீத் மற்றும் அஜீமா சயீத் தம்பதியருக்கு மகளாக 24 ஆகஸ்ட் 1946 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.
கல்வி
தொகு- இளங்கலை கலை பி.ஏ. (பொருளாதாரம்) 1966 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
- இளங்கலை சட்டம் - பி.எல். 1982 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
மேலும் சில
தொகு- 1991 - 1996 மாநில சிறுபான்மையினர் ஆணையம் - தமிழ்நாடு அரசு
- 2001 ஆண்டு வக்பு வாரிய தலைவர்.
- 2004 ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
- 2004 ஆண்டு வக்பு வாரிய தலைவர்.
- 2005 கூடுதல் அட்வகேட் ஜெனரல்
- மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்
- எஸ்.ஐ.இ.டி கல்லூரி இணைச் செயலாளர்
- 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.[1]