முத்தவல்லி

முத்தவல்லி, வக்ஃபாக வழங்கப்பட்ட சொத்துக்களை வழங்கியவரோ அல்லது வழித்தோன்றல்களோ பரம்பரையாக நிர்வகிப்பவர்களை குறிக்கும். ஒருவர் தன்னுடைய சொத்துக்களை வக்ஃபு செய்துவிட்ட பிறகு அவரோ, அவருடைய வழித்தோன்றல்களோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, உரிமையாளர்களாக இருக்க முடியாது.

வக்ஃபு சொத்துக்களின் நிர்வாகம் தொகு

வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பவர்களை முத்தவல்லி என்பர்.[1]வக்ஃபு சொத்துகளான பள்ளிவாசல்கள், தர்காக்கள், சமயக் கல்வி நிலையங்களான (மதராசாகள்), பொதுக் கல்வி நிறுவனங்களான பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் போன்றவைகளை நிர்வகிப்பதற்கு, அவைகளை கொடையாக கொடுத்தவர்களையே அல்லது அவரது வழித்தோன்றல்களை முத்தவல்லிகளாக வக்ஃபு வாரியம் நியமனம் செய்யும். கொடையாளர்களின் வாரிசுகள் இல்லாது போனால், வக்ஃபு வாரியம் பொறுப்பானவர்களை முத்தவல்லியாக நியமிக்கலாம். முத்தவல்லி நியமனத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுக்கும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தவல்லி&oldid=3523303" இருந்து மீள்விக்கப்பட்டது