தமனும் தியூவும்

இந்தியாவின் ஒன்றியப் பகுதி
(தாமன், தியு இலிருந்து வழிமாற்றப்பட்டது)


தமன் & தியு இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். 26 சனவரி 2020 அன்று இது தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியப் பகுதியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.

தாமன் & தியு
—  ஒன்றியப் பகுதி  —
தமன்
அமைவிடம்: தாமன் & தியு
ஆள்கூறு 20°25′N 72°50′E / 20.42°N 72.83°E / 20.42; 72.83
நாடு  இந்தியா
மாவட்டங்கள் 2
தலைநகரம் தமன்
மக்களவைத் தொகுதி தாமன் & தியு
மக்கள் தொகை

அடர்த்தி

2,43,247

1,411/km2 (3,654/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 122 சதுர கிலோமீட்டர்கள் (47 sq mi)
ஐ. எசு. ஓ.3166-2 IN-DD

மொழிகள்

தொகு

இங்குள்ள மக்கள் தமனியர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் குஜராத்தி மொழியில் பேசுகின்றனர். அருகிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் மொழியான மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3] இங்கு கொங்கணி மொழியும் பேசுவோரும் வாழ்கின்றனர். இவர்களைத் தவிர போர்த்துக்கேய மொழி பேசுபவர்களும் உள்ளனர். இந்த மொழியின் பயன்பாடு நாள்தோறும் குறைந்துவருகின்றது. அரசுப் பள்ளிகளிலும், ஊடகத்திலும் இந்த மொழி பயன்படுத்தப்படுவதில்லை. இந்த மொழியை கிட்டத்தட்ட 10,000–12,000 பேர் பேசக்கூடும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

மாவட்டங்கள்

தொகு

பொது

தொகு

தமன் தியு ஒன்றியப் பகுதிகளில் தமன் மற்றும் தியூ என இரண்டு முக்கிய நகரங்கள் கொண்டுள்ளது. தமன் தியூ மக்களவைத் தொகுதி என்ற ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. தமன் நகரத்தில் தமன் கங்கா ஆறு பாய்கிறது. தியூ நகரத்தில் தொன்மையான உரோமைக் கிறித்தவ சமயத்தின் புனித பவுல் தேவாலயம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமன் மற்றும் தியு ஒன்றியப் பகுதிகளின் மொத்த மக்கள் தொகை 2,43,247 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 24.83% மக்களும், நகரப்புறங்களில் 75.17% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 53.76% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 150,301 ஆண்களும் மற்றும் 92,946 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 618 வீதம் உள்ளனர். 111 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,191 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 87.10 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.54 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 79.55 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26,934 ஆக உள்ளது. [5]

சமயம்

தொகு

இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 220,150 (90.50 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 19,277 (7.92 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,820 (1.16 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 287 (0.12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 217 (0.09 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 172 ஆகவும் (0.07 %) பிற சமயத்து மக்கள் தொகை 79 (0.03 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 245 (0.10 %) ஆகவும் உள்ளது.

போக்குவரத்து

தொகு

இந்த பகுதியில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளை சென்றடைய சாலை வசதி உண்டு. தமன் & தியூ ஒன்றியப் பகுதி வாப்பியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், சூரத்தில் இருந்து 125 கி.மீ தொலைவிலும், மும்பையில் இருந்து 150 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வாப்பி தொடர்வண்டி நிலையத்தை அடைந்து, அங்கிருந்து தொடர்வண்டிகளில் பயணித்து நாட்டின் மற்ற நகரங்களை அடையலாம். தியூவில் தியூ விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து மும்பைக்கு பயணிக்க விமானம் இயக்கப்படுகின்றது. தமன் விமான நிலையத்தில் இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


  1. Notification. india.gov.in
  2. Daman and Diu. Tourism of India. Retrieved on 2014-05-08.
  3. Daman & Diu பரணிடப்பட்டது 2015-02-28 at the வந்தவழி இயந்திரம். Whereincity.com (1961-12-16). Retrieved on 2014-05-08.
  4. "Census Population" (PDF). Census of India. Ministry of Finance India. Archived from the original (PDF) on 2008-12-19. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  5. Daman and Diu Population Census data 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமனும்_தியூவும்&oldid=3666128" இலிருந்து மீள்விக்கப்பட்டது