அண்ணாமலை குப்புசாமி

இந்திய அரசியல்வாதி, முன்னாள் காவல்துறை அதிகாரி, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர்

அண்ணாமலை குப்புசாமி (Aṇṇāmalai kuppusāmy)[5][6] ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 சூலை, 2021 அன்று நியமிக்கப்பட்டார்.[7]

உயர் திரு
அண்ணாமலை குப்புசாமி
அண்ணாமலை கு
Annamalai K
மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 சூலை 2021
முன்னவர் எல். முருகன்
தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர்
பதவியில்
29 அகத்து 2020 – 7 சூலை 2021
தனிநபர் தகவல்
பிறப்பு அண்ணாமலை கவுண்டர்
சூன் 4, 1984 (1984-06-04) (அகவை 38)[1]
தொட்டம்பட்டி, சின்னதாராபுரம், கரூர், தமிழ்நாடு, இந்தியா[2][3]
குடியுரிமை இந்தியர்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அகிலா சுவாமிநாதன்
பிள்ளைகள் 2
பெற்றோர் குப்புசாமி கவுண்டர்
பரமேஸ்வரி
இருப்பிடம் கரூர், தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, இந்திய மேலாண்மை கழகம் லக்னோ
பணி அரசியல்வாதி
தொழில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி
விவசாயி
சமயம் இந்து
பட்டப்பெயர்(கள்) கர்நாடக சிங்கம் [4]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டி என்ற கிராமத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தில் விவசாயக் குடும்பத்தில் 4 சூன் 1984 ஆம் நாள் பிறந்தார்.[8] இவரது பெற்றோர் குப்புசாமி கவுண்டர் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் ஆவர். இவர் அகிலா சுவாமிநாதன் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[9] அண்ணாமலை லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் படிக்கும் போது ஒரு தொழிலதிபராக ஆசைப்பட்டார். ஆனால் பின்னர் சாமானியர்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு எழுதியதாக நேர்காணலில் கூறியுள்ளார்.[10]

கல்வி

அண்ணாமலை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் தமிழ்நாடு கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, த்னது முதல் முயற்சியிலேயே ஐஐஎம் சிஏடி தேர்வில் சிறந்து விளங்கியதால் அண்ணாமலை முதுநிலை வணிக நிர்வாகம் படிப்பை உத்தரப்பிரதேசம், லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் முடித்தார்.[11] பின்னர் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் முதல் முயற்சியிலேயே 2011 வகுப்பில் முதலிடம் பெற்றார். அவர் தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.[12]

காவல்துறை பங்களிப்பு

அண்ணாமலை கர்நாடக காவல்துறை அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். மேலும் "கர்நாடக சிங்கம்" என்றும் அழைக்கப்படுகிறார்.[13] அவர் 2011 ஆண்டு இந்தியக் காவல் பணி சேர்ந்தவர்.

உதவி காவல் கண்காணிப்பாளராக

அவர் செப்டம்பர் 2013 இல் கர்நாடகாவின், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கார்கலா துணைப்பிரிவின் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது போலீஸ் வாழ்க்கையைத் தொடங்கினார்.

அண்ணாமலை உடுப்பியில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, ​​பணியின் போது ஒருமுறை அங்கு உள்ள ஓர் உணவுக் கடைக்குச் சென்று சிகரெட், குட்கா மற்றும் பீடிகளைக் கேட்டார். கடைக்காரர் அவரிடம் பொருட்களைக் கொடுத்தபோது, ​​​​பொதுக் கடைகளில் விற்க தடை விதிக்கப்பட்டிருந்தும் பொருட்களை விற்றதற்காக அண்ணாமலை உடனடியாக அவருக்கு ரூ.30,000 அபராதம் விதித்தார். "இந்த தொகையை இன்றே செலுத்துங்கள் அல்லது நாளை நீங்கள் ஒரு லட்சத்தை செலுத்துவீர்கள்," என்று அவர் எச்சரித்தார்.[சான்று தேவை]

காவல் கண்காணிப்பாளர்

பின்னர் அவர் ஜனவரி 1, 2015 அன்று அதே இடத்தில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஆகஸ்ட், 2016 வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியாற்றினார். இந்தச் சமயத்தில்தான் அவர் 17 வயது மாணவி தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து அவரது நல்ல பணிக்காக பாராட்டப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில், பைந்தூர் தாலுகாவில் 10 ஆம் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் சிறுமிக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.10,000 உதவித்தொகை அளிக்கும் தொண்டு நிறுவனத்தை அண்ணாமலை நிறுவினார்.[சான்று தேவை]

இஸ்லாம் படித்தார்

அண்டை மாவட்டமான உத்தர கன்னடத்தில் அமைந்துள்ள உடுப்பியில் அண்ணாமலை தனது பணிக்காலத்தில் இஸ்லாத்தில் ஆழ்ந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பட்கல் இஸ்லாமிய தீவிரமயமாக்கலின் மையமாகவும் இந்திய முஜாஹிதீன்களின் பிறப்பிடமாகவும் உள்ளது. "மத நூல்களின் தவறான விளக்கத்திற்கு வழிவகுத்தது மற்றும் பரவலான தீவிரமயமாக்கலை ஏற்படுத்தியது என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்காக" அண்ணாமலை இஸ்லாமிய மதத்தைப் படிக்க முடிவு செய்தார் என்று பெரும்பாலான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார். இந்தியன் முஜாஹிதீன், எஸ்ஐபிஐ மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் உள்ள சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள மற்றும் விசாரிக்க இது அவருக்கு உதவியது.[10]

மாவட்ட தலைமை காவல் கண்காணிப்பாளர்

பின்னர் அவர் கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு அக்டோபர் 2018 வரை மாவட்ட தலைமை காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்தார். 2018 இல் பெங்களூர் தெற்கு காவல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.[13]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

அவர் உடுப்பி மற்றும் சிக்மகளூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது, மக்கள் வீதிகளில் இறங்கி அழுது அவர்களைத் தடுக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.[14] அவரது காவல்துறை பணியின் போது, ​​அவர் தனது உயர் அதிகாரிகள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களிடமிருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[10] வட ஆப்பிரிக்காவின், மொரோக்கோ நாட்டில் பதுங்கியிருந்த பன்னஞ்சே ராஜா என்ற பயங்கரவாத குற்றவாளியை மொரோக்கோ காவல்துறையின் உதவியுடன் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வர அவர் தனது குழுவுடன் இணைந்து கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் காரணமாக அவர் புகழ் பெற்று விருதுகளையும் பெற்றார்.[15][16]

பாபா புதன்கிரி கலவரத்திற்கு எதிரான நடவடிக்கையால் அவர் புகழ் பெற்றார். கர்நாடகாவில் கற்பழிப்பு வழக்குகள் மற்றும் மதக் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் அவர் சிறப்பாக பணியாற்றினார். அவரது நேர்மை மற்றும் தைரியத்திற்காக அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டது.[14][17]

போதைக்கு எதிரான நடவடிக்கை

அவரது காவல் பணியின் போது, போதைப்பொருள் மற்றும் புகையிலை விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார், பல சட்டவிரோத மதுபானக் கடைகளை மூடினார். போதைப் பழக்கத்திற்கு எதிராக கல்லூரிகளில் கருத்தரங்குகளை நடத்தினார், மேலும் மாணவர்கள் சட்டவிரோத செயல்கள் குறித்த அநாமதேய குறிப்புகளை பதிவு செய்ய புகார் பெட்டிகளை அமைத்தார். அவரும் ஒரு TED பேச்சாளர்.

திடீர் பதவி விலகல்

கடந்த 2019 ஆண்டு அவர் தனது காவல் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான தமிழ்நாடு திரும்பினார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர், இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். பல மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவரிடம் கேட்ட பின்பும் அவர் தனது முடிவை மாற்றவில்லை.[18]

கைலாஷ் மானசரோவர் பயணம் அவரை தனது வாழ்க்கையை சுயபரிசோதனை செய்ய வைத்ததாக அவர் தனது ராஜினாமாவுக்கு காரணம் கூறுகிறார். மேலும், 2018 டிசம்பரில் 47 வயதான ஐபிஎஸ் அதிகாரி மதுகர் ஷெட்டியின் மரணம் அவரது வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்ததாகவும் அவர் கூறினார்.[10]

சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்

அவர் ராஜினாமா செய்த பிறகு, அவர் ஒரு பேச்சாளராக, இயற்கை விவசாயியாக ஆர்வம் காட்டினார். அவர் ஐஏஎஸ் பயிற்சி மையம், தலைவர்கள் அறக்கட்டளை மற்றும் பல இலாப நோக்கற்ற அறக்கட்டளைகளையும் தொடங்கினார்.[10][19] ஊழல், அரசியல் அமைப்பு, பொருளாதாரம், போலீஸ் வேலை போன்ற பல்வேறு தலைப்புகளில் அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[20]

அரசியல் பங்களிப்பு

அண்ணாமலை அவர் அடிப்படையில் அரசியல் சாராத பின்னணியில் இருந்து வந்தவர். ராஜினாமா செய்த பிறகு, அண்ணாமலை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்(RSS) சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார்.[18][21][22] அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் சா ஆகியோரை சந்தித்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் மீது எவ்வளவு ஈர்க்கப்பட்டார் மற்றும் வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினார் என்பதை வெளிப்படுத்தினார்.[23][24] 25 ஆகத்து 2020 அன்று, காவல்துறையை விட்டு ஒரு வருடம் கழித்து, அவர் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ், அவரது நீண்ட நாள் நண்பரும் கர்நாடக பாஜக அமைச்சரான சி. டி. ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[25]

அவர் தமிழ்நாடு 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 24,816 வாக்கு வித்தியாசத்தில் திமுகவில் போட்டியிட்ட ஆர். இளங்கோவிடம் தோற்றார்.[26][27] எல். முருகன் மத்திய அமைச்சரான பிறகு, இவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் இதுவரை இருந்த மாநிலத் தலைவர்களில் மிகவும் இளையவர் ஆவர்.[28][29][30]

மேற்கோள்கள்

 1. T Muruganandham (8 july 2021). It's official: Former IPS officer Annamalai Kuppusamy is new chief of Tamil Nadu BJP. The New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/jul/08/its-official-former-ips-officer-annamalai-kuppusamy-is-new-chief-of-tamil-nadu-bjp-2327372.html. 
 2. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம். இந்து தமிழ் திசை. 8 சூலை 2021. https://www.hindutamil.in/news/tamilnadu/690794-annamalai-appointed-bjp-leader.html. 
 3. https://mobile.twitter.com/annamalai_k/status/1558382537013006337
 4. https://www.indiatoday.in/india/story/former-ips-annamalai-singham-of-karnataka-will-join-bjp-today-1714817-2020-08-25
 5. "Ex-IPS officer Annamalai Kuppusamy appointed Karnataka BJP vice president". ANI news. 29 அகத்து 2020. Check date values in: |date= (உதவி)
 6. "Ex-IPS Officer Annamalai Kuppusamy Appointed Karnataka BJP Vice President". businessworld. 29 அகத்து 2020. Check date values in: |date= (உதவி)
 7. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம். தினமணி. 8 சூலை 2021. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/jul/08/annamalai-appointed-tamil-nadu-bjp-leader-3656394.html. 
 8. "Why Annamalai was chosen over senior leaders to lead BJP in Tamil Nadu". The News Minute (ஆங்கிலம்). 2021-07-16. 2021-09-26 அன்று பார்க்கப்பட்டது.
 9. Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever. livemint. 8 july 2021. https://www.livemint.com/news/india/meet-k-annamalai-the-youngest-president-tamil-nadu-bjp-ever-11625761349905.html. 
 10. 10.0 10.1 10.2 10.3 10.4 Swamy, Rohini (2020-08-26). "'Singham' Annamalai — the IPS officer, engineer & MBA who studied Islam to fight terror". ThePrint (ஆங்கிலம்). 2021-12-17 அன்று பார்க்கப்பட்டது.
 11. "B'luru DCP 'Singam' Annamalai quits, says IPS officer's death made him 're-examine' life". The News Minute (ஆங்கிலம்). 2019-05-28. 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Annamalai Kuppusamy: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More - Oneindia". www.oneindia.com (ஆங்கிலம்). 2022-01-10 அன்று பார்க்கப்பட்டது.
 13. 13.0 13.1 "Bengaluru's 'Singham' IPS Officer Quits Police Force After Senior's Death". Moneycontrol (ஆங்கிலம்). 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 14. 14.0 14.1 Choudhary, Vijendra. "Annamalai IPS Wiki - Lifestyle, Biography, Birth Place, House" (ஆங்கிலம்). 2021-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 15. Aug 13, Hemanth KashyapHemanth Kashyap / Updated:; 2015; Ist, 04:00. "Spl team to bring back Bannanje Raja". Bangalore Mirror (ஆங்கிலம்). 2022-01-24 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link)
 16. User, Super (2020-09-04). "Annamalai: A former top cop now 'sharing stage' with criminals". The Federal (ஆங்கிலம்). 2022-01-24 அன்று பார்க்கப்பட்டது.
 17. Criminalisation of politics should end, says former IPS officer & BJP leader K Annamalai, 2021-12-17 அன்று பார்க்கப்பட்டது
 18. 18.0 18.1 "Bengaluru DCP K Annamalai, 'Singham' of Karnataka, quits IPS; likely to join politics". DNA India (ஆங்கிலம்). 2019-05-28. 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 19. Tamil Nadu News: Former IPS Officer K Annamalai Appointed BJP Tamil Nadu Chief, 2021-12-17 அன்று பார்க்கப்பட்டது
 20. "Annamalai K book on corruption".
 21. chaitanyesh.dr. "'Karnataka's Singham' Annamalai to join RSS and start 'shakha' in Coimbatore?". Asianet News Network Pvt Ltd (ஆங்கிலம்). 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 22. "Political plunge? No plans, says Annamalai". Deccan Herald (ஆங்கிலம்). 2019-05-22. 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 23. Upadhyaya, Prakash (2020-05-18). "Ex-IPS officer K Annamalai announces his entry to politics, to contest next election from Tamil Nadu". www.ibtimes.co.in (ஆங்கிலம்). 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 24. Ex-Super cop Annamalai hints at joining politics : 'I am a big fan of Modi'│Daijiworld Television, 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது
 25. "முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பிஜேபியில் இணைந்தார்". இந்து தமிழ் திசை. 25 அகத்து 2020. Check date values in: |date= (உதவி)
 26. அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
 27. Ex-IPS Officer Annamalai Contest Tamil Nadu Polls In BJP Ticket From Aravakurichi, 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது
 28. "Ex-IPS officer Annamalai sweats it out in Aravakurichi". Deccan Herald (ஆங்கிலம்). 2021-03-26. 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 29. "Ex-IPS officer, 'Singham' Annamalai, is BJP's new chief in Tamil Nadu". Hindustan Times (ஆங்கிலம்). 2021-07-08. 2021-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 30. Livemint (2021-07-08). "Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever". mint (ஆங்கிலம்). 2021-10-26 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாமலை_குப்புசாமி&oldid=3695016" இருந்து மீள்விக்கப்பட்டது