என். கயல்விழி செல்வராஜ்
இந்திய அரசியல்வாதி
என். கயல்விழி செல்வராஜ் (N. Kayalvizhi Selvaraj) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த தமிழக அமைச்சரும் ஆவார்.
என். கயல்விழி செல்வராஜ் | |
---|---|
ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
தொகுதி | தாராபுரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | வி. எச். மணியம்மை நகர், தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம் |
கயல்விழி எம்.காம்., பி.எட்., படித்துள்ளார். இவரது கணவர் கே. செல்வராஜ் ஒரு வழக்கறிஞராவார். இந்த இணையருக்கு எஸ். திலீபன், வழக்கறிஞருக்கு படித்த எஸ். கே. உதயசூரியன் ஆகிய மகன்கள் உள்ளனர்.[1]
இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுயில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை (ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்) அமைச்சசராக பதவியேற்றார்.[2]