பிரதாப் சந்திர சாரங்கி
பிரதாப் சந்திர சாரங்கி (ஆங்கில மொழி: Pratap Chandra Sarangi) (பிறப்பு: 4 ஜன 1955), என்பவர் ஒடிசா பாலேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை இணை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஒடிசா சட்டமன்றத்தில் 2004 மற்றும் 2009 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீள்கிரி தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார்.[2] 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[3] மீண்டும் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் அதே பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டு 12956 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த ரபீந்திர குமார் ஜெனாவை வென்றார்.[4] பின்னர் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிஜு ஜனதா தளம் கட்சியின் லேகாசிறீ சமாந்சிந்கார் என்பவரை 1,47,156 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பிரதாப் சந்திர சாரங்கி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் பாலேஸ்வர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2024 | |
நாடாளுமன்ற உறுப்பினர் பாலேஸ்வர் | |
பதவியில் 23 மே 2024 – மே 29 | |
முன்னையவர் | ரபீந்திர குமார் ஜெனா |
உறுப்பினர்: ஒடிசாவின் சட்டமன்றம்நீள்கிரி சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 2004–2014 | |
முன்னையவர் | பிரதிப்தா பாண்டா |
பின்னவர் | சுகந்தா குமார் நாயக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 சனவரி 1955 கோபிநாதபூர், பாலேஸ்வர், ஒடிசா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
முன்னாள் கல்லூரி | உட்கல் பல்கலைக்கழகம் |
இந்திய அரசின் இணையமைச்சராக
தொகுஇவர் 31 மே 2019 அன்று நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு & மீன் வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5]
இளமைக் காலமும் கல்வியும்
தொகு1955 ஜனவரி மாதம் நான்காம் தேதி பாலேஸ்வர் மாவட்ட கோபிநாதபூரில் பிரதாப் சாரங்கி ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். 1975 இல் உட்கல் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பாலேஸ்வர் பகீர் மோகன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[6].
சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு ராமகிருஷ்ண மடத்தில் சன்னியாசம் பெறவிரும்பினார். ஆனால் இவரின் தாயாரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கல்கத்தாவிலுள்ள ராமகிருஷ்ண மடம் இவரைத் திருப்பி அனுப்பியது. அதன்பின்னர் கிராமத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகிறார்.[7]
சமூகச் செயல்பாடு
தொகுபாலேஸ்வர் மற்றும் மயூர்பஞ்சு மாவட்டங்களிலுள்ள பழங்குடியினர் கிராமங்களில் சமர் கரா கேந்திரா என்ற பெயரில் பல பள்ளிகளைத் திறந்துள்ளார்.[8]
சர்ச்சைகள்
தொகுஅம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் சாவின் நாடாளுமன்ற உரை இருந்ததாகக் கூறி 19 திசம்பர் 2024 அன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த முயன்றன.[9] [10] இதனை தடுக்கும் விதமாக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும் போராட்டம் நடத்ததாகவும் இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பிரதாப் சந்திர சாரங்கியை எதிர்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தள்ளியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.[11] [12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ministers and their Ministries of India
- ↑ "Shri Pratap Chandra Sarangi Profile". Naveen Patnaik, Chief Minister of Odisha website. Archived from the original on 2012-11-18. பார்க்கப்பட்ட நாள் 2014-05-25.
- ↑ "'No clash between Modi wave and my image': Pratap Sarangi". The Times of India. May 23, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-23.
- ↑ "'Balasore Lok Sabha election results 2019 Odisha: BJP's Pratap Sarangi defeats BJD's Rabindra Jena': Pratap Sarangi". DNA India. April 12, 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-25.
- ↑ "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
- ↑ "Shri Pratap Chandra Sarangi Profile". My neta info. பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.
- ↑ "people-are-fed-up-with-the-bjd-hot-seat-pratap-chandra-sarangi-bjp-leader". The Telegraph. October 7, 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
- ↑ "Shri Pratap Chandra Sarangi Profile". Naveen Patnaik, Chief Minister of Odisha website. Archived from the original on 2012-11-18. பார்க்கப்பட்ட நாள் 2014-05-25.
- ↑ https://www.dailythanthi.com/news/india/arvind-kejriwals-sit-in-protest-at-bjp-office-over-amit-shahs-ambedkar-remarks-1135579
- ↑ https://tamil.oneindia.com/news/chennai/dmk-demands-apology-and-cabinet-removal-of-amit-shah-over-ambedkar-remark-664217.html
- ↑ https://tamil.samayam.com/latest-news/india-news/ambedkar-insult-issue-who-is-bjp-mp-pratap-chandra-sarangi/articleshow/116465487.cms
- ↑ https://www.hindutamil.in/news/india/1343882-injured-by-rahul-gandhi-bjp-mp-pratap-chandra-sarangi-alleges.html