அனைத்திந்திய வானொலி கண்காணிப்பு பணியகம்

அனைத்திந்திய வானொலி கண்காணிப்பு பணியகம் (All India Radio Monitoring Service (AIRMS) இந்தியத் தகவல் மற்றும் ஒலி பரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஒலி & ஒளி பரப்புகளையும், இந்தியாவிற்காக ஒலி பரப்பபடும் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட அனைத்து தெற்காசியா நாடுகளின் ஒலி & ஒளி பரப்புகளையும் கண்காணிக்கும் மத்திய அமைப்பாகும்.[1] அனைத்திந்திய வானொலி கண்காணிப்பு பணியகத்தின் தலைமையகம் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரத்தில் உள்ளது.[2] இந்தப் பணியகம் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் இராணுவப் புலனாய்வு இயக்குநரகம் ஆகிய புலனாய்வு அமைப்புகளுடன் உளவுத் தகவல்களை பகர்ந்து கொள்ளும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sandeep Balakrishna. "Intel agencies: Fact & Fiction". Niti Central. Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2013-01-31.
  2. Ball, Desmond (1996). Signals intelligence (SIGINT) in South Asia : India, Pakistan, Sri Lanka (Ceylon). Canberra, Australia: Strategic and Defence Studies Centre, Research School of Pacific Studies, Australian National University. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0731524837.