பத்திரிகை தகவல் பணியகம்

பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau சுருக்கமாக:PIB),[2]இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு ஒருங்கிணைப்பு முகமையாகும். இப்பணியகம் புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செயல்படுகிறது.[3]பத்திரிகை தகவல் பணியகம், இந்திய அரசு தொடர்பான செய்திகளை ஆங்கிலம் உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் அச்சு, தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.

பத்திரிகை தகவல் பணியகம்
पत्र सूचना कार्यालय
அரசு முகமை மேலோட்டம்
அமைப்புசூன் 1919; 105 ஆண்டுகளுக்கு முன்னர் (1919-06)
தலைமையகம்தேசிய ஊடக மையம், புது தில்லி
அமைச்சர்
அரசு முகமை தலைமை
  • இராஜேஷ் மல்கோத்ரா[1], முதன்மை தலைமை இயக்குநர்
வலைத்தளம்pib.nic.in

இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. இது நாடு முழுவதும் 8 மண்டல அலுவலகங்களும், 34 கிளைகளும் கொண்டது.[4]

இப்பணியகம் தற்போது 2500 செய்தி ஆசிரியர்கள், புகைப்படக்காரர்கள், அச்சு, வானொலி, தொலைக்காட்சி மற்றும் வலைத்தள தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டுள்ளது.

2023ல் இந்திய அரசு அச்சு, காட்சி மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிய பத்திரிகை தகவல் பணியகத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Satyendra Prakash named new PIB DG". PIB. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1846982. 
  2. "PIB Home Page". PIB official Portal.
  3. "Sonia, PM to launch Rs 60 cr media centre". The Hindustan Times. 24 August 2013 இம் மூலத்தில் இருந்து 24 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130824204551/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Sonia-PM-to-launch-Rs-60-cr-media-centre/Article1-1112100.aspx. 
  4. "About PIB". PIB Mumbai official Portal.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரிகை_தகவல்_பணியகம்&oldid=3733677" இலிருந்து மீள்விக்கப்பட்டது