ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்)

கே. பி. ஜெகன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராமன் தேடிய சீதை 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சேரன், பசுபதி, மற்றும் மணிவண்ணன் ஆகியோருடன் ஐந்து கதாநாயகிகள் இணைந்து நடித்துள்ளார்கள்.

ராமன் தேடிய சீதை
இயக்கம்கே. ஜெகன்நாத், சேரன்
தயாரிப்புமோசர் பாய்ர் எண்டர்டெயின்மெண்ட்
இசைவித்யாசாகர்
நடிப்புசேரன்
பசுபதி
நிதின் சத்யா
ரம்யா நபீஷன்
விமலா ராமன்
கார்த்திகா
நவ்யா நாயர்
கஜலா
மணிவண்ணன்
வெளியீடுசெப்டம்பர் 19, 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மாணவராக வரும் சேரனுக்கு மேற்கொண்டு படிப்பை தொடர முடியாதபடி மனநோய். சிகிச்சைக்கு பிறகு சொந்தமாக தொழில் தொடங்கி வளமாக வாழும் இவருக்கு பெண் பார்க்கிறார்கள். தனக்கு சிறுவயதில் வந்த மன நோயை மறைக்காமல் எடுத்துச் சொல்லும் சேரனுக்கு கிடைப்பது பெண் அல்ல, மனசு நிறைய புண்! ஏராளமான பெண்கள் இவரை வேண்டாம் என்று மறுக்க, ஒரே ஒருவர் மட்டும் ஆம் என்கிறார். திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓடிப்போய்விடுகிறார். அந்த பழியை தன் மேல் போட்டுக் கொள்ளும் சேரனை தனது சொந்த மகனாகவே நினைக்கிறார் ஒடிப்போன பெண்ணின் அப்பா மணிவண்ணன்.

உனது திருமணம் எனது பொறுப்பு என்று கிளம்பும் இவர், சேரனை பெண் பார்க்க அழைத்துச் செல்வதும், அங்கே நடக்கும் சம்பவங்களும்தான் மீதி கதை.

வெளி இணைப்புகள்

தொகு
விமரிசனங்கள்