டெல்லி குமார்

இந்திய நடிகர்

டெல்லி குமார் (9 மே 1942) என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1997ஆம் ஆண்டு முதல் பிரேமி, காசளவு நேசம் (1999), சித்தி (1999-2001), மெட்டி ஒலி (2002-2005), ஆனந்தம் (2003-2009), பொம்மலாட்டம் (2012-2016), தலையணைப் பூக்கள் (2016-2018) போன்ற பல தொலைக்காட்ச்சி தொடர்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

டெல்லி குமார்
பிறப்பு9 மே 1942 (1942-05-09) (அகவை 82)
சென்னை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிதொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997-தற்போது வரை
உறவினர்கள்அரவிந்த்சாமி (மகன்)

இவர் டும் டும் டும் (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), சிங்கம் (2010) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மற்றும் இவர் பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் தந்தை ஆவார்

தொடர்கள்

தொகு
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
1997 நிம்மதி உங்கள் சாய்ஸ்- 2 சன் தொலைக்காட்சி
1999 பிரேமி சன், விஜய் தொலைக்காட்சி
காசளவு நேசம் சுந்தரம் சன், ராஜ் தொலைக்காட்சி
1999-2001 சித்தி மகாலிங்கம் சன் தொலைக்காட்சி
2002-2005 மெட்டி ஒலி சிதம்பரம்
2003-2005 அண்ணாமலை
2003 கோபுர வாசல்
2003-2009 ஆனந்தம் ஆர் கே
2005-2007 மலர்கள்
2008-2009 கோகுலத்தில் சீதை கலைஞர் தொலைக்காட்சி
2009-2011 விளக்கு வச்ச நேரத்துலே
2009-2010 எங்கே பிராமணன் ஜெயா தொலைக்காட்சி
2010-2015 முந்தானை முடிச்சு கந்தசாமி சன் தொலைக்காட்சி
2012 மை நேம் இஸ் மங்கம்மா கே எம் ஆர் ஜீ தமிழ்
2012-2014 புகுந்த வீடு ராமநாதன்
பார்த்த ஞாபகம் இல்லையோ கலைஞர் தொலைக்காட்சி
2012-2016 பொம்மலாட்டம் சிதம்பரம் பெரியசாமி சன் தொலைக்காட்சி
2013-2014 ரெங்கவிலாஸ் ஜெயா தொலைக்காட்சி
2016-2018 தலையணைப் பூக்கள் ராமநாதன் ஜீ தமிழ்
2017-2019 மகாலட்சுமி சுப்பிரமணி சன் தொலைக்காட்சி
2018–2020 லட்சுமி ஸ்டோர்ஸ் தில்லைநாதன்
2019 – ஒளிபரப்பில் பாண்டவர் இல்லம் பெரிய சுந்தரம்

விருதுகள்

தொகு
  • 2012- சன் குடும்ப விருதுகள்: சாதனையாளர் விருது
  • 2018- சிறந்த மாமனார்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்லி_குமார்&oldid=4120447" இலிருந்து மீள்விக்கப்பட்டது