பாண்டவர் இல்லம்
பாண்டவர் இல்லம் என்பது சன் தொலைக்காட்சியில் சூலை 15, 2019 முதல் ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ் மற்றும் குகன் சண்முகம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 28 அக்டோபர் 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 1216 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
பாண்டவர் இல்லம் | |
---|---|
வகை | குடும்பம் காதல் நகைச்சுவை நாடகம் |
எழுத்து | செல்வம் சுப்பையா |
திரைக்கதை | செல்வம் சுப்பையா |
கதை | செல்வம் சுப்பையா |
இயக்கம் | செல்வம் சுப்பையா (1-20) ஓ.என் ரத்னம் (21-) |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 1216[1] |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | மதுமலர் குருபரன் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 15 சூலை 2019 28 அக்டோபர் 2023 | –
கதைசுச்ருக்கம்
தொகுபரம்பரை பாரம்பரியத்தை பின் பற்றி வாழும் இரு குடும்பங்களின் கதை. பாண்டவர் இல்லம் முதலாவது பாரம்பரிய குடும்பம் மற்றும் ரெண்டாவது பாரம்பரிய குடும்பம் ஜமீன் குடும்பம். பாண்டவர் குடும்பத்தின் பெரிய சுந்தரத்துக்கு ம் மற்றும் ஜமீன் குடும்பத்தின் வேதநாயகி க்கும் திருமணம் நடக்கின்றது. சில காரணங்ககளால் சுந்தரம் இறக்க, வேதநாயகி பாண்டவர் இல்லத்திற்கு எதிராக வில்லியாக மாறி பாண்டவர் குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறாங்க. பாண்டவர் குடும்பத்தில் வேதநாயகி வாழாமல் போனதில் இருந்து, அந்த குடும்பத்துக்கு பெண்களே வேண்டாம் என்று ஐந்து வளர்ந்த பேரப் பிள்ளைகளுடன் தாத்தா வாழ்ந்து வருகிறார். இதை அறிந்த மல்லிகா பாண்டவர் இல்லத்தின் நான்காவது பேரன் அழகு சுந்தரத்தை துரத்தி துரத்தி காதலித்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்கின்றார், திருமணத்திற்கு பிறகு வேதநாயகியிடமிருந்து பாண்டவர் இல்லத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த தொடரின் கதை.
நடிகர்கள்
தொகுமுதன்மை கதாபாத்திரம்
தொகு- பாப்ரி கோஷ் - கயல் குட்டி சுந்தரம்
- நரேஷ் ஈஸ்வர் - குட்டி சுந்தர
- குகன் சண்முகம் - அன்பு சுந்தர
- ஆர்த்தி சுபாஷ் - மல்லிகா அன்பு சுந்தரம்
- டெல்லி குமார் - பெரிய சுந்தர பாண்டவர்
- அப்சர் - நல்ல சுந்தரம்
- நேசன் - ராஜ சுந்தரம்
- சுரேந்தர் - அழகு சுந்தரம்
- அனு சுலாஷ் - ரோஷினி நல்ல சுந்தரம்
- கிருத்திகா - ரேவதி ராஜசுந்தரம்
கயல் குடும்பத்தினர்
தொகு- சோனியா - முல்லைக்கொடி ஆதி வீரபாண்டியன்
- பாரதி கண்ணன் - ஆதி வீரபாண்டியன்
ஆர்த்தி குடும்பத்தினர்
தொகு- கே. எஸ். ஜெயலட்சுமி - வள்ளி வேலன்
- விஜய் கிருஷ்ணராஜ் - வேலன்
- சுவப்னா - செண்பகம் சண்முகம்
- சரத் சந்திரா - சண்முகம்
துணைக்கதாபாத்திரங்கள்
தொகு- ராணி - வேதநாயகி
- ராஜா செந்தில்
- சுதா - செல்வி
- ஆலம்
- ஆலோயா
- ரேவதி சங்கர்
மதிப்பீடுகள்
தொகுகீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2019 | 3.7% | 4.6% |
2020 | 3.8% | 4.4% |
4.5% | 4.9% |
மறு ஆக்கம்
தொகு- இந்த தொடர் தெலுங்கு மொழியில் 'ஆ ஒக்காடி அடக்கு' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்சியில் 13 செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிறது.
மொழி | அலைவரிசை | தலைப்பு | ஒளிபரப்பு |
---|---|---|---|
தெலுங்கு | ஜெமினி தொலைக்காட்சி | ஆ ஒக்காடி அடக்கு | 13 செப்டம்பர் 2021 - ஒளிபரப்பில் |
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
- இந்த தொடர் இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான வசந்தம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Popular TV show 'Pandavar Illam' completes 1000 episodes; here's what actors Papri Ghosh and Naresh Eswar have to say" (in en). The Times of India. 17 February 2023. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/popular-tv-show-pandavar-illam-completes-1000-episodes-heres-what-actors-papri-ghosh-and-naresh-eswar-have-to-say/articleshow/98002936.cms.
- ↑ "பாண்டவர் இல்லத்தில் பெண்களே இல்லையாமே!". tamil.oneindia.com. https://tamil.filmibeat.com/television/no-women-power-in-pandavar-illam/articlecontent-pf100688-061156.html.