காயத்ரி (தொலைக்காட்சித் தொடர்)
காயத்திரி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 20 சனவரி 2014 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.
காயத்ரி | |
---|---|
வகை | |
இயக்கம் | ஆர். பாலாஜி யாதேவ் ஏ.பி.ராஜந்திரன் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 201 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
தொகுப்பு | |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 20 சனவரி 2014 7 நவம்பர் 2014 | –
இந்த தொடர் ஆர். பாலாஜி யாதேவ் மற்றும் ஏ.பி.ராஜந்திரன் ஆகியோர் இயக்கத்தில், நீமா, ஸ்ரீசா, வீணு, விஜய், அகிலா, ராகவி, வரலட்சுமி போன்ற பலர் நடித்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் 7 நவம்பர் 2014 ஆம் ஆண்டு அன்று 201 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
நடிகர்கள்
தொகு- நிமா (1-127) → ஸ்ரீசா (128-201) - காயத்ரி
- வேணு -
- விஜய் - அருள்மணி
- அனுராதா கிருஷ்ணமூர்த்தி - ஜெயலட்சுமி
- ராமச்சந்திரன் - ஜெகன்
- வரலட்சுமி - வரலட்சுமி ஜெகன்
- அகிலா - பூஜா
- பரந்தா
- மூர்த்தி
- சௌந்தரம்
- காவேரி
- மலர்
பாடல் மற்றும் இசை
தொகுஇந்த தொடருக்கு கிருதியா பாடல் எழுதி உள்ளார். ராமு பாடல் பாடியுள்ளார். செல்வம் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். கிரன் பின்னணி இசை அமைத்துள்ளார்.
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
தொகுஇந்த தொடர் முதலில் 20 சனவரி முதல் 11 ஏப்ரல் 2014 வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 14 ஏப்ரல் முதல் 7 நவம்பர் 2014 வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரபப்பானது.
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.