வைகாசி பொறந்தாச்சு

ராதா பாரதி இயக்கிய 1990 ஆண்டு திரைப்படம்

வைகாசி பொறந்தாச்சு (Vaigasi Poranthachu) 1990 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். ராதா பாரதி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் பிரசாந் மற்றும் புதுமுக நடிகை காவேரி ஆகியோர் நடித்திருந்தனர். கே. பிரபாகரன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் நவம்பர் 16 , 1990இல் இது வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் புதுமுக நடிகரும் தியாகராஜனின் மகனுமான பிரசாந்திற்கு பெரும் திருப்பத்தை தந்தது. வர்த்தக ரீதியில் வெற்றிப் படமாக அமைந்தது.[1] இத்திரைப்படம் இந்தி மொழியில் "ஐ லவ் யூ" எனும் பெயரில் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்திலும் நாயகனாக பிரசாந் நடித்திருக்க நாயகியாக சபா நடித்திருந்தார்.[2][3][4][5]

வைகாசி பொறந்தாச்சு
இயக்கம்ராதா பாரதி
தயாரிப்புகே. பிரபாகரன்
கதைராதா பாரதி
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புலன்சி
மோகன்
கலையகம்அன்பாலயா பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 16, 1990 (1990-11-16)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

குமரேசன் (பிரசாந்) ஏழை இந்து குடும்பத்தை சேர்ந்தவன். குமரேசன் அவனின் தாயான லக்ஷ்மி (சுலக்சனா) மற்றும் பாட்டியுடனும் (கலா) வசித்து வந்தான். குமரேசன் பாடசாலையில் மிகவும் புத்திசாலியாகவும் குறும்புகாரனாகவும் இருந்தான். ஒருமுறை குமரேசன் அவனது நண்பர்களுடன் இணைந்து ரஞ்சிதாவை (காவேரி) கேலி செய்தான். காவேரி ஊர்த்தலைவர் பாண்டித்துரையின் (கே. பிரபாகரன்) மகளாவாள். சில மாதங்களுக்கு பிறகு ரஞ்சிதாவிற்கு குமரேசனின் அறிவையும் குறும்புத்தனத்தையும் பார்த்து அவனின் மேல் காதல் கொள்கின்றாள். பாண்டித்துரையின் அடியாள் குமரேசனை பாண்டித்துரையின் வீட்டில் பூட்டிவைப்பதுடன் அவனுக்கு சாட்டையாலும் அடிக்கின்றனர். இதனால் குமரேசன் நடக்க முடியாமல் அவஸ்தைபடுகிறான். ரஞ்சிதாவின் தாயான பார்வதி (கே. ஆர். விஜயா) குமரேசனுடன் தனது மகள் காவேரி சேர்வதற்கு உதவி செய்து கொடுக்கின்றார்.

நடிகர்கள் தொகு

  • பிரசாந் - குமரேசன்
  • காவேரி - ரஞ்சிதா
  • சுலக்சனா - லக்ஷ்மி, குமரேசனின் தாய்
  • சங்கீதா - ரஞ்சிதாவின் தாய்
  • கே. பிரபாகரன் - பாண்டித்துரை, ரஞ்சிதாவின் தந்தை
  • கே. ஆர். விஜயா - பார்வதி , பாண்டித்துரையின் முதல் மனைவி
  • ஜனகராஜ் - சின்னராசு
  • சார்லி - ஆசிரியர்
  • சின்னி ஜெயந்த் - தலமை ஆசிரியர்
  • குமரிமுத்து - வையாபுரி
  • கொச்சின் ஹனிபா - மல்லையப்பன் (குமரேசனின் தந்தை)

இசை தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். மேலும் 1990 ம் ஆண்டு இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 9 பாடல்களுக்குமான பாடல்வரிகளை காளிதாசன் எழுதியுள்ளார்.[6][7][8][9]

விருதுகள் தொகு

1. 1990 ம் ஆண்டு தமிழ் நாடு திரைப்பட விருதுகள் சிறந்த இசையமைப்பிற்காக இசையமைப்பாளர் தேவாவிற்கு வழங்கப்பட்டது.

2. 1990 ம் ஆண்டு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்ஸ் பெயார் விருது பிரசாந்திற்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகாசி_பொறந்தாச்சு&oldid=3660961" இருந்து மீள்விக்கப்பட்டது