கௌசல்யா (நடிகை)
இந்திய திரைப்பட நடிகை
கௌசல்யா (பிறப்பு: டிசம்பர் 30, 1979, இயற்பெயர்: கவிதா சிவசங்கர், மாற்றுப்பெயர்: நந்தினி) தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த, ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஏறத்தாழ முப்பது தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெங்களூரில் பிறந்தவர்.
கௌசல்யா | |
---|---|
பிறப்பு | கவிதா சிவசங்கர் திசம்பர் 30, 1979[1] பெங்களூர், கருநாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | நந்தினி, கௌசல்யா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1996–2009 |
நடிப்பு
தொகுகௌசல்யா, 1996 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ஏப்ரல் 19 ல் பாலச்சந்திர மேனன் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டார். அடுத்த ஆண்டு, அவர் தனது முதல் தமிழ் படம் காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தில் நடித்தார். பல வெற்றிகரமான தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பூவேலி திரைபடத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். முன்னணி பாத்திரங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1996 | ஏப்ரல் 16 | மலையாளம் | ||
1997 | காலமெல்லாம் காதல் வாழ்க | தமிழ் | ||
நேருக்கு நேர் | அகிலா | தமிழ் | ||
1998 | சொல்லாமலே | தமிழ் | ||
லேலம் | கவுரி பார்வதி | மலையாளம் | ||
பிரியமுடன் | பிரியா | தமிழ் | ||
ஜாலி | அனிதா | தமிழ் | ||
பூவேலி | மகாலக்சுமி | தமிழ் | சிறந்த நடிகைக்கான விருது | |
உன்னுடன் | தமிழ் | |||
1999 | அயல் கதா எழுத்துக்கயனு | பிரியதர்சினி | மலையாளம் | |
தாச்சிலேடத்து துஞ்சன் | உசா | மலையாளம் | ||
ஆசையில் ஒரு கடிதம் | தமிழ் | |||
பஞ்சதர சிலகா | தெலுங்கு | |||
அல்லுடு காரு வச்சரு | தெலுங்கு | |||
2000 | வானத்தைப் போல் | தமிழ் | ||
ஏழையின் சிரிப்பில் | கவுசல்யா | தமிழ் | ||
தை பொறந்தாச்சு | கீதா | தமிழ் | ||
ராஜ காளியம்மன் | மீனா | தமிழ் | ||
சந்தித்த வேளை | அகல்யா | தமிழ் | ||
ஜேம்சு பாண்டு | கவுசல்யா | தமிழ் | ||
குபேரன் | கவிதா | தமிழ் | ||
இளையவன் | தமிழ் | |||
2001 | மனதைத் திருடிவிட்டாய் | இந்து | தமிழ் | |
குங்குமப் பொட்டுக் கவுண்டர் | சரசுவதி | தமிழ் | ||
தாலி காத்த காளியம்மன் | கற்பகம் | தமிழ் | ||
குட்டி | ரோகினி | தமிழ் | ||
எங்களுக்கும் காலம் வரும் | லக்சுமி | தமிழ் | ||
2002 | கருமாடிக்குட்டன் | நந்தினிகுட்டி | மலையாளம் | |
தேவன் | தமிழ் | |||
நாரனத்து தம்புரான் | மலையாளம் | |||
சுந்தரபுருஷன் | சிறீதேவி | மலையாளம் | ||
2003 | திருமலை | தமிழ் | ||
ஷிவம் | காயத்திரி | மலையாளம் | ||
உதயம் | அம்மு | மலையாளம் | ||
ரே சுவல்ப பர்தீரா | கவுசல்யா | கன்னடம் | ||
காந்தி நகரா | கன்னடம் | |||
பத்ரி | கன்னடம் | |||
2004 | மானிக்யன் | மலையாளம் | ||
கவுரி | தெலுங்கு | |||
வஜ்ரம் | நந்தா தேவராஜன் | மலையாளம் | ||
2005 | மகாநதி | தெலுங்கு | ||
2007 | சூரியன் | ராஜி | மலையாளம் | |
விய்யலவாரி கையாலு | தெலுங்கு | |||
2008 | சந்தோஷ் சுப்ரமணியம் | தமிழ் | ||
2009 | இன்ஸ்பெக்டர் ஜெனரல் | மலையாளம் | ||
2009 | கவுதம் | கன்னடம் |