முறை மாப்பிள்ளை
முறை மாப்பிள்ளை (Murai Mappillai) சுந்தர். சி இயக்கத்தில் 1995 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் அருண் விஜய் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் அறிமுகமாகி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ, மணிவண்ணன், கே.பிரபாகரன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.பிரபாகரன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஸ்வரராஜ் இசையமைத்து 1995 டிசம்பர் 15 ந்தேதி வெளிவந்தது. [1]
முறை மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி |
தயாரிப்பு | கே.பிரபாகரன் |
கதை | சுந்தர்.சி. கே. செல்வபாரதி(வசனம்) |
இசை | சுவரராஜ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | யூ. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | லான்சி — மோகன் |
கலையகம் | அன்பாலயா பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 15, 1995 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுகையெழுத்து கவுண்டர் (மணிவண்ணன்) மற்றும் கைநாட்டு கவுண்டர் (கே.பிரபாகரன்) ஆகிய இருவரும் கிராமத்தின் மிகப்பெரிய மனிதர்கள். மேலும் இருவரும் சிறந்த நண்பர்களாகவும் உள்ளனர். இவர்களது பிள்ளைகள் ராஜா (அருண் விஜய்) மற்றும் இந்து கிருத்திகா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் வெறுப்புடன் காணப்படுகின்றனர். அவர்கள் ஒரே வகுப்பில் படித்து வந்தாலும் இருவருக்கும் இடையே ஓயாது எப்போதும் சண்டையிட்டுக் கோண்டே இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, அவர்களது தந்தையர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். சொர்ணா என்ற நாட்டியக்காரி அவ்வூருக்கு வருகிறாள். அவள் இரு நண்பர்களுக்குள் மோதலை உருவாக்கி அவர்களை பிரிக்க நினைக்கிறாள். சண்டையிட்டுக்கொண்டு இருந்த ராஜாவும், கிருத்திகாவும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். கடந்த காலத்தில், கையெழுத்து கவுண்டரும் ,கைநாட்டு கவுண்டரும் சேர்ந்து சொர்ணாவின் சகோதரியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்தனர், அது நடக்கும் முன்னர், அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். தற்போது சொர்ணா தனது தங்கையின் சாவிற்கு பழி வாங்க எண்ணி இது போன்ற செயல்களைச் செய்கிறாள். ராஜாவும் கிருத்திகாவும், இதைக் கண்டு கலக்கமடைகின்றனர். கையெழுத்து கவுண்டரையும் ,கைநாட்டு கவுண்டரையும் மட்டுமே தண்டனைக்கு உட்படுத்துவது தனது திட்டம் எனவும் இளம் காதலர்களை ஒன்றும் செய்யப் போவதில்லை எனவும் சொர்ணா அவர்களிடம் தெரிவிக்கிறாள். என்வே அவர்களை காப்பாற்ற வருகிறாள். முடிவில் என்ன நடக்கிறது என்பது படத்தின் முக்கிய திருப்பமாகும்.
நடிகர்கள்
தொகு- ராஜ வாக அருண் விஜய்
- இந்துவாக கிருத்திகா
- நாட்டியக்காரி சொர்ணாவாக ராஜஸ்ரீ
- ராஜாவின் தந்தை கையெழுத்து கவுண்டராக மணிவண்ணன்
- இந்துவின் தந்தை கைநாட்டு கவுண்டராக கே.பிரபாகரன்
- ரமேஷாக கவுண்டமணி
- சசுமேஷாக செந்தில்
- ராஜவின் தாயராக கலாரஞ்சினி
- வினொதினி
- ஆஷா
- கல்லூரி முதல்வர் ஹிட்லராக பாண்டு
- சுரேஷ் சக்கரவர்த்தி
- பக்கிரியாக அல்வா வாசு
- விச்சு விசுவநாத்
- கோட்டை பெருமாள்
- குள்ளமணி
- குண்டு கல்யாணம்
- கருப்பு சுப்பையா
- போண்டா மணி
- ஓமக்குச்சி நரசிம்மன்
- இடிச்சபுளி செல்வராசு
- ஜாகுவார் தஙகம்
- பிரபு சாலமன்
தயாரிப்பு
தொகுநடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் இதில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்திற்கு முன்பே முதன் முதலில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் "லவ் ஸ்டோரி" என்ற தமிழ்ப் படமாகும். ஆனால் இப்படம் முந்திக்கொண்டது. சுந்தர் சி. இயக்கிய முறை மாப்பிள்ளை படத்திற்காக அப்போது மிகவும் அதிகமாக படங்களில் இசையமைத்துக் கொண்டிருந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தயாரிப்பாளர் கே. பிரபாகரனால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[2] படப்பிடிப்பின் போது தயாரிப்பாளரால் ஏற்பட்ட பபிணக்கு காரணமாக சுந்தர்.சி இடையிலேயே இப்படத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அன்பாலயா பிரபாகரனால் படம் முடிக்கப்பட்டது.[3] 2010 இல் வெளிவந்த மைனா மற்றும் 2012 இல் வெளிவந்த கும்கி போன்றத் திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளை செய்து தந்தார்.
விருதுகள்
தொகு- 1995 தென்னிந்திய திரைப்பட விருது.
- தென்னிந்திய அறிமுகநாயகனுக்கான பிலிம்ஃபேர் விருது அருண் விஜய் பெற்றார்.
ஒலிப்பதிவு
தொகுMurai Mappillai | |
---|---|
soundtrack
| |
வெளியீடு | 1995 |
ஒலிப்பதிவு | 1995 |
இசைப் பாணி | Feature film soundtrack |
நீளம் | 23:22 |
இசைத்தட்டு நிறுவனம் | லக்கி ஆடியோ |
இசைத் தயாரிப்பாளர் | Swararaj |
ஸ்வரராஜ் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பாடல்களை கவிஞர் வாலி மற்றும் பாரதி புத்ரன் ஆகியோர் எழுதினார்கள். இதன் இசைத்தொகுப்பு 7 தடங்களைக் கொண்டு 1995 இல் வெளியிடப்பட்டது.[4]
தடம் | பாடல் | பாடியவர்கள் | நேரம் |
---|---|---|---|
1 | 'அக்காள் மகளே' | ராஜேஷ் | 1:43 |
2 | 'அங்க பார்' | மனோ | 3:52 |
3 | 'ஏழுலகம்' | டி. எல். மகராஜன் | 2:27 |
4 | ' மாமா மாமா' | மணிவண்ணன், கே.பிரபாகரன், மனோ, சுஜாதா மோகன் | 4:09 |
5 | 'சிக்குனு முத்தம்' | சாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா, குழுவினர் | 3:14 |
6 | 'தென்றல் காற்றே' | எஸ். ஜானகி | 3:57 |
7 | 'உன்னை மறந்து' | பி. உன்னிகிருஷ்ணன், கே. எஸ். சித்ரா | 4:00 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Murai Maappillai (1995) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-16.
- ↑ S. R. Ashok Kumar (2006-05-05). "His career makes a steady progress". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-07-16.
- ↑ https://www.youtube.com/watch?v=4z15UluasxU
- ↑ S. R. Ashok Kumar (2012-01-28). "Audio Beat: Aasamy". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2014-07-16.