போண்டா மணி

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்

போண்டா மணி (Bonda Mani, 19 செப்டம்பர் 1963 – 24 திசம்பர் 2023) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.[2]

போண்டா மணி
பிறப்புகேதீஸ்வரன்
(1963-09-19)19 செப்டம்பர் 1963 [1]
மன்னார், வட மாகாணம், இலங்கை மேலாட்சி
(தற்போது இலங்கை)
இறப்புதிசம்பர் 24, 2023(2023-12-24) (அகவை 60)
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991– 2023

இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இவருடன் உடன் பிறந்த 16 பேரில் எண்மர் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து விட்டார்கள்.[3]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

எம்.மாரிமுத்து செட்டியார் - மகேசுவரி இணையரின் மகனாக போண்டாமணி 1963 செப்டம்பர் 15 இல் இலங்கையில் மன்னாரில் பிறந்தார்.[4] இவருடைய தந்தை இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர், சிறுவயதில் தொழில் தொடங்குவதற்காக குடிபெயர்ந்து யாழ்ப்பாணம் வந்தார். 16 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் போண்டாமணி 15-ஆவதாகப் பிறந்தார். மன்னாரில் மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை தொடங்கி நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நடிகனாகும் வாய்ப்பு உள்ளதென இலங்கையிலிருந்து அகதியாக இராமேசுவரம் வந்து நடிகரானார்.[5]

நடித்த திரைப்படங்களில் சில

தொகு

தொலைக்காட்சித் தொடர்

தொகு

இறப்பு

தொகு

2022 ஆம் ஆண்டு ஒரு பயணத்தின் போது மயங்கி விழுந்தார். அவரின் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயால் அவரது சிறுநீரகங்கள் செயலிழக்க தொடங்கின ‌.வறுமையில் இருந்த போண்டா மணியால் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை,பலரிடம் உதவி கேட்டு காணொளி பதிவு செய்து வெளியிட்டு வந்தார். நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி் , ரஜினிகாந்த் ஆகியோர் உதவி செய்தனர் , ஆனாலும் மாற்று சிறுநீரகங்கள் கிடைக்காமல் , டயாலிசிஸ் செய்து வந்தார். அதுவும் பணப் பற்றாக்குறையால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதனால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார் போண்டா மணி‌ . ஆனால் 2023 திசம்பர் 23 அன்று தனது வீட்டில் மயங்கி சுயநினைவை இழந்து விழுந்துள்ளார்‌. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 60 .[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bondamani (a.ka) Kedhesvaran - Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". www.nadigarsangam.org.
  2. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=22092 ”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”
  3. மூக்கு பொடப்பா இருந்தா இப்படிதான்! - குமுதம் 23-2-2015 பக் 44
  4. http://geniusreporter.com/?p=2732 வாழ வைத்த தமிழகம் – நடிகர் போண்டா மணி வாழ்க்கை வரலாறு
  5. http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=10704 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் வடிவேலு - சிங்கமுத்து சமாதானம் : நடிகர் போண்டா மணி
  6. நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார், தினத்தந்தி, 24 திசம்பர் 2023

வெளி இணைப்புகள்

தொகு

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போண்டா_மணி&oldid=3853572" இலிருந்து மீள்விக்கப்பட்டது