இயக்கம் (திரைப்படம்)
இயக்கம் (Iyakkam) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடித் திரைப்படமாகும். சஞ்சய் ராம் தயாரித்து இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ரிஷி குமார், ஸ்ருதி ராஜ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, சுஜிபாலா, சஞ்சய் ராம், சுதாகர் வசந்த், ஆர். சுந்தர்ராஜன், சிட்டி பாபு, எம். எசு. பாசுகர், பூவிலங்கு மோகன் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு பிரவீண் மணி இசை அமைத்தார். படமானது 25 ஏப்ரல் 2008 அன்று வெளியானது.[1][2][3]
இயக்கம் | |
---|---|
இயக்கம் | சஞ்சய் ராம் |
தயாரிப்பு | சஞ்சை ராம் |
கதை | சஞ்சை ராம் |
இசை | பிரவீண் மணி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | டி. லியோ |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | லிங்கம் தியேட்டர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 25, 2008 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ரிசி குமார் நல்லத்தம்பியாக / மேயன்
- ஸ்ருதி ராஜ் சரசு
- சுஜிபாலா மலராக
- சஞ்சய் ராம் சின்னமருது
- சுதாகர் வசந்த் ஆண்டவராக
- ஆர். சுந்தர்ராஜன் புண்ணியக்கோடி
- சிட்டி பாபு அப்புசாமி
- எம். எசு. பாசுகர் முத்துக்குட்டி
- பூவிலங்கு மோகன் ஜோசியக்காரர்
- ஓமக்குச்சி நரசிம்மன்
- நெல்லை சிவா
- சிசர் மனோகர்
- போண்டா மணி
- சாப்லின் பாலு
- பாண்டு
- ரைசா சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
தொகுதூத்துக்குடி (2006), ஆடு புலி ஆட்டம் (2006), வீரமும் ஈரமும் (2007) போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் ராம் அடுத்து இயக்கம் என்ற படத்தை தனது புதிய சொந்த பதாகையான லிங்கம் தியேட்டர்சின் கீழ் தயாரித்து, இயக்கினார். முன்னாள் தமிழ்நாடு துடுப்பாட்ட வீரரான ரிஷி குமார் ஒரு குடிசைவாசியாகவும், மாவட்ட ஆட்சியராகவும் நடிக்க ஒப்பந்தமானார். கூத்துப்பட்டறையில் அவர் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் ஒரு காலத்தில் இணை இயக்குநராக இருந்த சஞ்சய் ராம், “நான் பாலிவுட் திரைப்பட படைப்பாளியான ராம் கோபால் வர்மாவின் தீவிர ரசிகன். அவரது திரைப்படப் படைப்பில் நான் ஈர்க்கப்பட்டேன். நான் அவரை பின்பற்ற விரும்புகிறேன் " என்றும், “தரமே எனது குறிக்கோள். தமிழ் திரைப்படத் துறையில் தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்க விரும்புகிறேன் " என்றும் கூறியுள்ளார்.[4][5]
இசை
தொகுதிரப்பட பின்னணி இசை, பாடல்கள் ஆகியவற்றுக்கு இசையமைப்பாளர் பிரவீண் மணி இசையமைத்தார். இந்த இசைப்பதிவில் இளைய கம்பன் எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன. இந்த படத்தின் இசை வெளியீடானது30 மார்ச் 2008 அன்று நடிகர்கள் ஷாம், சூரியா ஆகியோரால் சென்னையில் வெளியிடப்பட்டது.[6][7][8]
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | "எந்தன் உயிர்" | பிரதீப், சுவேதா மோகன் | 4:37 |
2 | "ஆலமரத்து" | ஷியாம் | 4:02 |
3 | "ஒலயக்கா" | மாணிக்க விநாயகம் | 4:46 |
4 | "உதட்டோரம்" | ரஞ்சித், மாலதி லட்சுமணன், சுவர்ணலதா | 4:27 |
5 | "சிங்கண்டா" | தீபன் சக்ரவர்த்தி, ஸ்ரீராம் பார்த்தசாரதி | 3:39 |
6 | "வீச்சருவா கோட்டையிலே" | சுஜாதா மோகன், ஸ்வர்ணலதா | 4:25 |
வரவேற்பு
தொகுதி இந்து பத்திரிகையின் எஸ். ஆர். அசோக் குமார் படத்தின் நகைச்சுவைப் பகுதியை விமர்சித்தார், ஆனால் கலைஞர்களின் நடிப்பையும், ஒளிப்பதிவையும் பாராட்டினார். மேலும் "பலவீனமான திரைக்கதை படத்தின் கருத்தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறது" என்றும் கூறினார்.[9] மற்றொரு விமர்சகர் இந்த படத்துக்கு 5 க்கு 2 என மதிப்பீடு அளித்து, "இயக்குனர் சஞ்சய் ராம் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டார், மேலும் படம் கூட்டம் சேர்க்கும்" என்று எழுதினார்.[10]
குறிப்புகள்
தொகு- ↑ "Iyakkam (2008)". gomolo.com. Archived from the original on 15 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Iyakkam (2008) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
- ↑ "Jointscene : Tamil Movie Iyakkam". jointscene.com. Archived from the original on 13 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.
- ↑ "Director Sanjay Ram on Iyakkam". indiaglitz.com. 6 December 2006. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
- ↑ "Cricketer becomes an Actor". kollywoodtoday.net. 24 March 2008. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Surya releases and Shaam receives". behindwoods.com. 31 March 2008. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
- ↑ "Iyakkam Audio released yesterday". kollywoodtoday.net. 31 March 2008. Archived from the original on 15 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Iyakkam (2008) - Pravin Mani". mio.to. Archived from the original on 29 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ S. R. Ashok Kumar (2 May 2008). "Game called murder -- Iyakkam". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
- ↑ "Iyakkam Review". nowrunning.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.