பி. சாய் சுரேஷ்

படத் தொகுப்பாளர்

பி. சாய் சுரேஷ் (P. Sai Suresh) என்பவர் இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிவருகிறார். 1990 கள் மற்றும் 2000 களில் சுந்தர் சி. இயக்கிய படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். குறிப்பாக அருணாசலம் (1997), சுயம்வரம் (1999), அன்பே சிவம் (2003) உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். [1] [2]

பி. சாய் சுரேஷ்
பிறப்பு7 சூலை 1964 (1964-07-07) (அகவை 59)
இந்திய ஒன்றியம், கேரளம், திருவனந்தபுரம்
பணிபடத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992-தற்போது வரை

தொழில்

தொகு

சாய் சுரேஷ் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாறியுள்ளார். 1999 ஆம் ஆண்டில் உனக்காக எல்லாம் உனக்காக (1999) படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார். [3] பெரும்பாலும் இயக்குனர் சுந்தர் சி. படங்களிலேயே இவர் பணியாற்றியுள்ளார். சாய் சுரேஷ் 1990 களில் நிறைய படங்களுக்கு படத்தொக்குப்பு செய்த படத்தொக்காளர்களில் ஒருவராக இருந்தார், பெரும்பாலும் நடுத்தர செலவில் தயாரிக்கபட்ட அதிரடி, கிராம பின்புலம், நகைச்சுவைத் திரைப்படங்களில் பணியாற்றினார்.

தனது 80 வது படமாக 2012 ஆம் ஆண்டில், விமல் நடித்த காதல் நகைச்சுவை படமான இஷ்டம் படத்தில் பணியாற்றினார். [4]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு

தமிழ்

தொகு

பிற மொழிகள்

தொகு
கன்னடம்
  • ஜீவா (2009)
  • கோகுல கிருஷ்ணா (2012)
  • பாரிஜாதா (2012)
மலையாளம்
  • யுகப்புருசன் (2010)
  • லக்கி தர்பார் (2011)
  • கப்பிரி துருது (2016)

குறிப்புகள்

தொகு
  1. "The Hindu : Film Review: Vedham".
  2. Sulekha Videos (19 March 2015). "Editor Sai Suresh at Vethu Vettu Movie Team Interview" – via YouTube.
  3. "dinakaran". 10 February 2001. Archived from the original on 10 February 2001.
  4. "Editor Sai Suresh speaks at Ishtam Movie Press Meet - Exclusive Promo - Sulekha Movies".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சாய்_சுரேஷ்&oldid=3211943" இலிருந்து மீள்விக்கப்பட்டது