அன்பே சிவம்
அன்பே சிவம் (Anbe Sivam) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[2]
அன்பே சிவம் | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | கே.முரளிதரன் வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் |
கதை | கமல்ஹாசன் |
திரைக்கதை | கமல்ஹாசன் |
வசனம் | மதன் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | கமல்ஹாசன் மாதவன் கிரண் ராத்தோட் |
ஒளிப்பதிவு | ஆர்தர் ஆ. வில்சன் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
விநியோகம் | லக்ஸ்மி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | 15 சனவரி 2003 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்காகப் போராடும் சமரசமற்ற தொழிற்சங்கவாதி நல்லசிவம் (கமல்ஹாசன்) அந்நிய நாட்டு நிறுவன பொருட்களின் விளம்பரங்களை விற்பனை செய்பவராக தொழில் புரியும் அன்பரசு (மாதவன்) இருவரும் புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல இருக்கும் போது எதிர்பாராத வண்ணமாகச் சந்தித்துக்கொள்கின்றனர். அங்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியவில்லை எனவே இருவரும் புகையிரதம், பேருந்து ஆகிய பல ஊர்திகளின் மூலம் பயணம் செய்கின்றனர். இதற்கிடையில் பல சோதனைகள், பல விபத்துகள் ,புகையிரதம் ஒன்று விபத்துக்குள்ளாக காயப்பட்ட ஒரு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேளையில் அவன் இறந்துவிடவே, இதன் மூலம் "என்ன கடவுளையா இது" எனக் கேட்கும் அன்பரசு வாழ்க்கையினைக் கண்டு சலித்துப் போகின்றார். பின்னர் நல்லசிவம் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவம், தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடியாத படையாச்சி (நாசர்) போன்றவர்களைப்பற்றியும் கூறுகின்றார். அன்பரசும் தனக்கு நல்ல சிவமே அண்ணனாக வரவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு அவரை தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்யாண மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு அவர் அதிர்ச்சி அடைகின்றார் காரணம் அவர் காதலித்திருந்த பெண்ணே அன்பரசிற்கு மணப்பெண்ணாக இருப்பதனையும் உணர்கின்றார். இவ்வாறு இருந்தும் தனது காதலைத் தியாகம் செய்யும் நல்ல சிவம் தொழிலாளர்களுக்குத் தேவையான ஊதிய உயர்வுக்கான பத்திரத்தில் கையொப்பம் வாங்கியும் செல்கின்றார்.
நடிகர்கள்
தொகு- கமல்ஹாசன் - தோழர்.நல்லசிவம்
- மாதவன் - அன்பரசு
- கிரண் ராத்தோட் - பாலசரசுவதி
- நாசர் - கந்தசாமி படையாச்சி
- சந்தான பாரதி - கந்தசாமி படையாச்சியின் பணியாளர்
- சீமா - கந்தசாமி படையாச்சியின் உறவினர்
- யூகி சேது - உத்தமன்
- உமா ரியாஸ்கான் - மெகுரினிசா
- 'பசி' சத்யா - டீ கடை நடத்துபவர்
- பாலு ஆனந்த்
- இளவரசு - காவல் ஆய்வாளர்
- ஆர்.எஸ். சிவாஜி
பாடல்கள்
தொகுஇப்படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்துள்ளார்.
எண் | பாடல் | பாடியவர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | "அன்பே சிவம்" | கமல்ஹாசன், கார்த்திக் | வைரமுத்து |
2 | "ஏலே மச்சி" | கமல்ஹாசன், உதித் நாராயண் | வைரமுத்து |
3 | "மௌனமே பார்வையாய்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சந்திராயி | பா. விஜய் |
4 | "பூ வாசம்" | விஜய் பிரகாஷ், சாதனா சர்கம் | வைரமுத்து |
5 | "நாட்டுக்கொரு செய்தி" | கமல்ஹாசன், சந்திரன் | வைரமுத்து |
6 | "ஏலே மச்சி 2" | உதித் நாராயண், திப்பு | வைரமுத்து |
7 | "பூ வாசம் 2" | ஸ்ரீராம் பார்த்தசாரதி, சாதனா சர்கம் | வைரமுத்து |
மேற்கோள்கள்
தொகு- ↑ "'அன்பே சிவம்' வசூல் ரீதியாகவும் நன்றாக ஓடியிருக்க வேண்டும்: குஷ்பு". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/559661-kushboo-about-anbe-sivam.html. பார்த்த நாள்: 20 December 2024.
- ↑ "DOG-ஐ திருப்பிப்போட்டால் GOD; இந்த வடுமுகத்தானைத் திருப்பிப்போட்டது அன்பு!". ஆனந்த விகடன். 15 சனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)