தோழா (2008 திரைப்படம்)

2008 இந்திய திரைப்படம்

தோழா 2008 ஆம் ஆண்டு நிதின் சத்யா, பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த் மற்றும் அஜய்ராஜ் நடிப்பில், என். சுந்தரேஸ்வரன் இயக்கத்தில், பிரேம்ஜி அமரன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2]. கில்லி மற்றும் ஜாம்பவான் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகர்களின் சகோதரி வேடத்தில் நடித்த ஜெனிஃபர் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்[3]. இப்படத்தின் நான்கு கதாநாயகர்களும் இதற்கு முன் சென்னை 600028 திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

தோழா
பாசக்கார பய
இயக்கம்என். சுந்தரேஸ்வரன்
தயாரிப்புஎம். பழனி
எம். சுரேஷ்குமார்
வி. பாஸ்கரன்
பி. பரமசிவன்
கதைஎன். சுந்தரேஸ்வரன்
இசைபிரேம்ஜி அமரன்
நடிப்புநிதின் சத்யா
பிரேம்ஜி அமரன்
விஜய் வசந்த்
அஜய்ராஜ்
சாகித்யா
நான்சி ஜெனிபர்
ஒளிப்பதிவுபி. தனா
படத்தொகுப்புசாய் சுரேஷ்
கலையகம்ஆரோவனா பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 11, 2008 (2008-04-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

இப்படம் நான்கு நண்பர்களைப் பற்றிய கதை ஆகும்.

அறிவழகன் (பிரேம்ஜி அமரன்), கஜனி (விஜய் வசந்த்) மற்றும் ராஜா (நிதின் சத்யா) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இம்மூன்று நண்பர்களுடன் நான்காவதாக இணைய வரும் வேலு ( அஜய்ராஜ்) தன் தங்கையின் இறப்புக்குக் காரணமான அவளின் காதலனைத் தேடி வருபவன். பிரியா (நான்சி ஜெனிபர்) வேலுவை விரும்புகிறாள். ஆனால் வேலு தன் சூழ்நிலை காரணமாக பிரியாவைக் காதலிக்க மறுக்கிறான். அவன் தன் தங்கையைக் காதலித்து ஏமாற்றி அவளது இறப்புக்குக் காரணமானவனைத் தேடி அவனைக் கொல்வதையே முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ளான். ராஜாவே இதுநாள் வரை தான் தேடிவந்த நபர் என்பதையறியும் அஜய் அவனைக் கொல்வதற்கு முடிவு செய்கிறான். அதே சமயம் ராஜா தன்னைக் கொல்வதற்கு வரும் வேலுவைக் கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்கிறான். இருவரில் யார் வெற்றி பெற்றனர் என்பது மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன். பாடலாசிரியர்கள் கங்கை அமரன், வாலி மற்றும் சினேகன்[4]. 1984 ஆம் ஆண்டு வெளியான தாவணிக் கனவுகள் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "ஒரு நாயகன் உதயமாகிறான்" என்ற பாடல் இப்படத்தில் மாற்றிசை வடிவத்தில் பயன்படுத்தப்பட்டது[5].

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 வா தோழா ரஞ்சித், பிரேம்ஜி அமரன் 4:35
2 அடியே என் அன்னக்கிளி விஜய் யேசுதாஸ், சின்மயி 4:48
3 காதல் தேவதை ஹரிசரண், சைந்தவி 4:47
4 ஒரு நாயகன் (மாற்றிசை) எஸ். பி. பி. சரண், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் 4:00

சர்ச்சை மற்றும் விமர்சனம் தொகு

வழக்கு: 2016 ஆம் ஆண்டு கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா உள்ளிட்டவர்கள் நடித்து, வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவானது தோழாதிரைப்படம். தன்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் "தோழா" என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தரேஸ்வரன், நடிகர்கள் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா, பிவிபி சினிமா, இயக்குநர் வம்சி ஆகியோர் மீது வழக்கு தொடுத்தார்[6].

விமர்சனம்: நல்ல நண்பர்களைப் பற்றிய நல்ல திரைப்படம்[7].

மேற்கோள்கள் தொகு

  1. "தோழா".
  2. "தோழா".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ஜெனிபர் அறிமுகம்".
  4. "பாடல்கள்".
  5. "பாடல்கள்".
  6. "தோழா பெயர் சர்ச்சை".
  7. "விமர்சனம்".[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழா_(2008_திரைப்படம்)&oldid=3660281" இலிருந்து மீள்விக்கப்பட்டது