காசு இருக்கணும்

காசு இருக்கணும் 2007 ஆம் ஆண்டு கே. பாக்யராஜ், லிவிங்ஸ்டன் மற்றும் புதுமுகம் விஸ்வா நடிப்பில், ஆர். குமரன் மற்றும் பிரியவன் இயக்கத்தில், ஆர். பி. பூரணி தயாரிப்பில், கவின் சாரதா மற்றும் ராஜ் சங்கர் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4][5][6][7]

காசு இருக்கணும்
இயக்கம்ஆர். குமரன்
பிரியவன்
தயாரிப்புஆர். பி. பூரணி
கதைஜி. ஆர்.
இசைகவின் சாரதா
ராஜ் சங்கர்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ஆர். குமார்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்ஜி. ஆர். கோல்ட் பிலிம்ஸ்
வெளியீடுமே 4, 2007 (2007-05-04)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

அசோக் (விஸ்வா), அனி (பயல்), விஜி (நந்திதா ஜெனிபர்), திவ்யா (லக்சா), பிரவின் (காதல் சுகுமார்) மற்றும் தருண் (அருள்) ஆகியோர் நண்பர்கள். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக உடையவர்கள். வீடுகளில் திருடுவது, வங்கிகளில் கொள்ளையடிப்பது அவர்களின் வாடிக்கை. அவர்களைப் பிடிக்கும் பொறுப்பு காவல் ஆய்வாளர் மாணிக்கத்திற்கு (லிவிங்ஸ்டன்) வழங்கப்படுகிறது. காவல் துறையிடமிருந்து தப்பிக்க ஊர்ஊராகச் செல்லும் அவர்கள் ஜி.ஆர். என்பவரைச் சந்திக்கிறார்கள். தங்களைப் பற்றிய உண்மையைத் தெரிவிக்காமல் அவருடைய வீட்டில் தங்குகிறார்கள். ஒருவரையொருவர் நேசிக்கும் அசோக்கும் அனியும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதனால் அசோக்கை நேசிக்கும் விஜி மனமுடைகிறாள்.

அசோக்கின் கதை: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அசோக் தன் பெற்றோர்கள் இறப்பதால் இந்தியா வருகிறான். அவனுடைய சித்தப்பா சொத்திற்கு ஆசைப்பட்டு அவன் பெற்றோரைக் கொன்றதை அறிகிறான். அசோக்கின் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி அவனை மனநல காப்பகத்தில் சேர்க்கின்றனர். இந்த சதிக்கு அவன் காதலியும், நண்பனும் அவனது சித்தப்பாவுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். காப்பகத்திலிருந்து தப்பிக்கும் அசோக் அந்த மூவரையும் கொன்று பழிதீர்க்கிறான். பணம்தான் வாழ்வில் முக்கியமானது என்றெண்ணித் திருடனாகிறான்.

நண்பர்கள் திவ்யா, தருண், பிரவின் என வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். அசோக்கும் அனியும் அவர்களின் நண்பர்களை ஒவ்வொருவராக கொல்கிறார்கள். விஜியைக் கொல்லவரும் அசோக்கிடம் தான் அவனை விரும்புவதாக விஜி கூறுவதால் மனம்மாறும் அசோக் அவளை விட்டு அனியைக் கொல்கிறான். அசோக்கைக் கொல்ல முயலும் விஜியை அசோக் கொல்கிறான். இறுதியில் அசோக்கைத் தேடிவரும் காவல்துறை அவனை சுட்டுக்கொல்கிறது.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர்கள் கவின் சாரதா மற்றும் ராஜ் சங்கர். பாடலாசிரியர்கள் ஜி.ஆர். மற்றும் அசுரா.

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 சந்தைக்கு ஹரிசரண், அனுராதா ஸ்ரீராம், மோகன் ராம் 5:47
2 மதுர பக்கம் திப்பு, அனுஷா 5:00
3 காசு இருக்கணும் தேவா 5:25
4 எல்லோரையும் வாழவைக்கும் பத்து 2:34
5 காதல் சம்மதம் தேவன் ஏகாம்பரம், அனுராதா ஸ்ரீராம் 4:17
6 துன்பத்தைக் கண்டு மனோ 4:33

மேற்கோள்கள்

தொகு
  1. "காசு இருக்கணும்". Archived from the original on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "காசு இருக்கணும்".
  3. "காசு இருக்கணும்". Archived from the original on 2018-06-27. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  4. "காசு இருக்கணும்". Archived from the original on 2016-04-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  5. "நடிகர்கள்".
  6. "விமர்சனம்". Archived from the original on 2009-08-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  7. "விமர்சனம்". Archived from the original on 2010-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசு_இருக்கணும்&oldid=3659775" இலிருந்து மீள்விக்கப்பட்டது