கார்மேகம்
கார்மேகம் (Karmegham) என்பது 2002ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். பி. இராஜ்குமார் இயக்கிய இப்படத்தில் மம்மூட்டி, ராதாரவி, அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதனர். இப்படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்தார்.[1]
கார்மேகம் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. இராஜ்குமார் |
தயாரிப்பு | எஸ். இராஜம்மாள் எஸ். சுபதராதேவி எஸ். சுப்பிரமணியம் |
கதை | எஸ். பி. இராஜ்குமார் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். எம். இராமநாத செட்டி |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
கலையகம் | எஸ். எஸ். ஆர். மூவிஸ் |
வெளியீடு | 2 ஆகத்து 2002 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுகர்மேகம் ( மம்மூட்டி ) நீண்ட காலமாக இராணுவத்தில் பணியாற்றிய பின்னர் தனது கிராமத்திற்குத் திரும்புகிறான். பழைய பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கைவிடாமல் கிராம மக்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதை அவன் காண்கிறான். அவர்கள் ஒரு பண்ணையாரிடம் ( ராதாரவி ) அடிமைகளாக வேலை செய்கிறார்கள். மகேஸ்வரி ( அபிராமி ) என்ற மருத்துவர் கர்மேகத்தைக் காதலிக்கிறாள். கார்மேகம் தனது தாயார் ( மனோரமா ) மூலம், தனது தந்தை ராதாரவி என்பதை அறிந்துகொள்கிறான். இதன் பின்னர் அது தந்தை-மகன் மோதலாக மாறுகிறது. கர்மேகம் கிராமவாசிகளுடன் இணைந்து நின்று தனது தந்தையையும், சகோதரர் சக்தியையும் எதிர்க்கிறார். அவனது சகோதரி மங்கை ஒரு ஏழை கிராமவாசியை நேசிக்கிறாள். ஆனால் சக்தியும் அவனது தந்தையும் அவளுடைய காதலுக்கு எதிரானவர்களாக உள்ளனர். சக்தி தன் சகோதரியின் காதலனைக் கொல்கிறான். இதனால் அவனுடைய சகோதரிக்கு பைத்தியம் பிடிக்கிறது. கர்மேகம் காவல் துறையினரை அழைக்கிறான். அவனது சகோதரர் தப்பிச் செல்கிறான், ஆனால் காவலர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். கர்மேகம் மகேஸ்வரியை திருமணம் செய்து கொள்கிறான். கர்மேகத்தைக் கொல்ல அவன் தந்தை திட்டமிட்டு வைத்த வெடி குண்டில் அவனது சகோதரியும் தாயும் இறந்துவிடுகிறனர். தனது கிராமத்தைக் காப்பாற்ற கர்மேகம் தனது தந்தையை கொல்கிறான்.
நடிகர்கள்
தொகு- மம்மூட்டி கார்மேகமாக
- அபிராமி மகேஷ்வரியாக
- வடிவேலு (நடிகர்) கஞ்சாவாக
- ராதாரவி கார்மேகத்தின் தந்தையாக
- மனோரமா கார்மேகத்தின் தாயாக
- பாபுராசு காவல் அதிகாரியாக
- இளவரசு சகுனியாக
- தலைவாசல் விஜய் மாவட்ட ஆட்சியராக
- வினு சக்ரவர்த்தி
- சி. ஆர். சரஸ்வதி
- மயில்சாமி (நடிகர்)
- சிங்கமுத்து
- வாசு (நகைச்சுவை நடிகர்)
- போண்டா மணி
- முத்துக்காளை
- அல்போன்சா சிறப்புத் தோற்றம்
இசை
தொகுதிரைப்படப் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் வித்தியாசாகர் மேற்கொண்டார். 2002 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் இசைப்பதிவில், பா. விஜய், யுக பாரதி, அறிவுமதி, பழனி பாரதி ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு பாடல்கள் உள்ளன.[2][3]
எண் | பாடல் | பாடகர் (கள்) | பாடல் வரிகள் | காலம் |
---|---|---|---|---|
1 | "எட்டுமுழ வெட்டி கட்டி" | உண்ணிமேனன், அந்தர சௌத்ரி | அறிவுமதி | 4:44 |
2 | "காச படி அளந்தா" | வித்தியாசாகர் | யுகபாரதி | 3:48 |
3 | "சத்தம் போடும்" | சங்கர் மகாதேவன், ஸ்ரீ வர்தினி | பழனி பாரதி | 4:18 |
4 | "ஸ்ரீ ரங்கா பட்டணம்" (இருவர்) | மாலதி லட்சுமணன், கோபால் சர்மா | பா. விஜய் | 4:41 |
5 | "ஸ்ரீ ரங்கா பட்டணம்" (தனி) | மாலதி லட்சுமன் | 4:41 | |
6 | "தாராத பட்டி" | மாணிக்க விநாயகம், சுவர்ணலதா | பழனி பாரதி | 4:37 |
வரவேற்பு
தொகுசிஃபி இந்த படத்தை "புதிய மொந்தையில் பழைய கள்" என்று விவரித்தது. "இது பழைய பாணியிலான கண்ணீர்க் கதை, இதன் சம்பவங்களினாலோ அல்லது கதையிலோ புதுமையை கொண்டதாக இல்லை" என்று எழுதியது.[4][5]
குறிப்புகள்
தொகு- ↑ Sreedhar Pillai (2002-09-23). "The Hindu : 'Superstardom is a burden'". hindu.com. Archived from the original on 2003-06-30. பார்க்கப்பட்ட நாள் 2012-06-03.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Karmegam By Vidya Sagar". muzigle.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-03.
- ↑ "Karmegam - Vidyasagar". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-03.
- ↑ "Movie Review : Karmegham". sify.com. Archived from the original on 31 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2012-06-03.
- ↑ "BizHat.com - Karmegham Review". movies.bizhat.com. Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-06-03.