நேசம் புதுசு

1999 திரைப்படம்

நேசம் புதுசு (Nesam Pudhusu) என்பது 1999 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். கார்த்திவேல் எழுதி இயக்கிய இப்படத்தில் ரஞ்சித், பிரியா ராமன், அஜய் ரத்னம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை பாபி அமைதுள்ளார். படம் 1999 அக்டோபரில் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1]

நேசம் புதுசு
இயக்கம்கார்த்திவேல்
தயாரிப்புடி. சி. பாண்டியன்
கதைஎன். இராமலிங்கம்
இசைபாபி
நடிப்புரஞ்சித்
பிரியா ராமன்
வெளியீடு1 திசம்பர் 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்த ரஞ்சித், பிரியா ராமன் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.[2][3]

இசை தொகு

படத்திற்கான இசைப்பணியை பாபி மேற்கொண்டார்.

வெளியீடு தொகு

1999 அக்டோபரில் படம் வெளியானதைத் தொடர்ந்து, இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. BBthots.com இன் ஒரு விமர்சகர் குறிப்பிடும்போது, "திரைப்படத்திற்கு போகாதீர்கள் என்று எச்சரிக்கும் எந்த காரணிகளும் இல்லை, ஆனால் அதே நேரத்தில், பாருங்கள் என்று பரிந்துரைக்கவும் எனக்கு எதுவும் இல்லை".[4] நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுதியது யாதெனில் "நேசம் புதுசு ஒரு எளிமையான படம், ஆனால் இயக்குனர்களான வேல் மற்றும் கார்த்திக் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்".[5] இந்து எழுதியது யாதெனில் "நேசம் புத்துசில் " ஒரு இளம் ஜோடி திருமணமான தம்பதிகளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கவேண்டிய ஒரு வித்தியாசமான கிராமத்தை அடிபடையக கொண்ட கதை." அறிமுகமான இயக்குனர்களான வேல்-கார்த்திக் ஆகியோர் பாடல், நடனங்கள் மற்றும் நகைச்சுவைத் காட்சிகளுடன் சரியான மாற்றங்களைக் கொண்டு வருகிறனர்.[6]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேசம்_புதுசு&oldid=3667705" இருந்து மீள்விக்கப்பட்டது