பச்சக் குதிர
பச்சக் குதிர ( பொருள். Green horse பச்சை குதிரை ) என்பது 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும்.
பச்சக் குதிர | |
---|---|
இயக்கம் | இராதாகிருஷ்ணன் பார்த்திபன் |
தயாரிப்பு | அபி கீர்த்தி ராக்கி |
கதை | இராதாகிருஷ்ணன் பார்த்திபன் |
இசை | சபேஷ் முரளி |
நடிப்பு | இராதாகிருஷ்ணன் பார்த்திபன் நமிதா கபூர் (நடிகை) |
கலையகம் | பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் |
வெளியீடு | 14 April 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) |
இத்திரைப்படம் ( ஆர். பார்த்திபன் ) எழுதி இயக்கிய நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் பார்த்திபன், நமீதாவும் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப்படம் 14 ஏப்ரல் 2006 அன்று எதிர்மறையான விமர்சனங்களுக்கு வெளியிடப்பட்டது.[1][2]
கதைச் சுருக்கம்
தொகுபச்சமுத்து ( ஆர். பார்த்திபன் ) சென்னையில் ஒரு சேரிப் பகுதியை ஆளுகிறார். அவர் ஒரு வக்கிரம் நிறைந்த மனிதராக உள்ளார். தனது சொந்த தாயை ஒரு அடிமைத் தொழிலாளி போல நடத்துகிறார். பணத்திற்காக எந்தவிதமான கொடூர செயலை செய்யவும் துணிந்தவராக உள்ளார்.
ஒரு நாள் அவர் ஒரு திருமண நிகழ்விடத்திற்கு செல்கிறார். அங்கு பணக்காரர் மற்றும் அழகாக இருக்கும் மணமகள் பூவு ( நமிதா ) தனது ஆடைகளை அகற்றுவதை காண்கிறார். அவளை முற்றிலும் நிர்வாணமாகப் பார்த்தபின், அவளுடன் ஏதேனும் வழியில் உடலுறவு கொள்ள ஆசைகொள்கிறார். அதற்கு திருமணமே சிறந்த வழியென உணர்கிறார். அவர் மணமகனை அடித்து, அங்குள்ளவர்களை சமாதானப்படுத்தி, இறுதியில் ஏழைப் பெண்ணை மணக்கிறார். அவருடன் சேரி திரும்பியதும், அவரது தாயும் பிற பெண்களும் பூவுவின் அழகைப் பாராட்டுகின்றனர்.
ஒரு நாள் பச்சை இறந்துவிட்டதாக நடித்து காலனி மக்களின் விசுவாசத்தை சோதிக்க முடிவு செய்கிறார். ஆனால் அந்த இடத்திலுள்ள அவரது தாயைத் தவிர மற்ற அனைத்து மக்களும் அவரது மரணத்தை கொண்டாடுவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைகிறார். இது அவரை முற்றிலும் மாற்றுகிறது.
பச்சை தனது வழிகளை கைவிட்டு, இரக்கமற்ற பணக்காரர்களின் கும்பலை உதைக்கின்றார். கிராம மக்கள் பச்சையைக் கொண்டாடுகிறார்கள்.
நடிகர்கள்
தொகு- ஆர் பார்த்திபன் - பச்சமுத்து
- பூவுவாக நமீதா
- மாறன் - பச்சமுத்துவின் நண்பர்
- லதா ராவ் - வடிவு
- ராஜ்கமல் - பூவுவை மணக்கவிருந்த மணமகன்
- காதல் தண்டபாணி - வட்டிக்கடைக்காரன்
- வினோத் ராஜ் - தலைமை ஆசிரியர்
- டி.பி. கஜேந்திரன் - வழக்கறிஞர் வரதராஜன்
- லியாகத் அலிகான்
- சித்ரா லட்சுமணன் - மேயரின் தனிப்பட்ட உதவியாளர் (ரிப்பன் கட்டிடம்)
- ஜி. வி. சுதாகர் நாயுடு - கலப்பட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஜி.வி.
- ஜோதி லட்சுமி
- போண்டா மணி - போண்டா
ஒலிப்பதிவு
தொகுஒலிப்பதிவு சபேஷ்-முரளி இசையமைத்தது.[3]
- தலைமேல தூக்குறோம் - அரவிந்த்
- சரசா லோகா - கார்த்திக், சின்மாயி, சுசித்ரா
- சங்கு தராய் - ஆர்.பார்த்திபன்
- பொட்டு வெச்சி - ஸ்ரீராம், மகாதி
- பச்சயா பச்சயா - மாலதி, ஸ்ரீராம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pachakuthirai Review - Pachakuthirai Tamil Movie Review by Rajaraman.R". NOWRUNNING. Archived from the original on 2020-02-17. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-15. பார்க்கப்பட்ட நாள் 2006-10-15.
- ↑ "Pachakuthira" – via mymazaa.com.