பாடகசாலை

2010 திரைப்படம்

பாடகசாலை (Padagasalai) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஜெ. தமிழ் இயக்கிய இப்படத்தில் சத்யா, அரவிந்த், ஆர்.சஞ்சய், இனியா, பிரீத்தி புஷ்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் சிசர் மனோகர், போண்டா மணி, ராஜா சேது முரளி, சூலூர் சண்முகதேவன், சிவானந்தம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். டி. அனில் தயாரித்த இப்படத்திற்கு, ஹிடேஷின் இசை அமைத்துள்ளார் . படமானது 2010 மார்ச் 26 அன்று வெளியானது.[1]

பாடகசாலை
இயக்கம்ஜெ. தமிழ்
தயாரிப்புடி. அனில்
கதைஜெ. தமிழ்
இசைஇத்தேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஜெ. தமிழ்
படத்தொகுப்புமுருகராம்
கலையகம்தேவ்விஜயம் பிலிம் மேக்கர்ஸ்
வெளியீடுமார்ச்சு 26, 2010 (2010-03-26)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

 • சத்தியா முத்துவாக (முத்துக்குமார்)
 • அரவிந்த் புகழாக (புகழேந்தி)
 • ஆர். சஞ்சை விஜயாக
 • இனியா (நடிகை) அபிராமியாக
 • பிரீத்தி புஷ்பன் மதுமிதாவாக
 • சிசர் மனோகர் சடலையாக
 • போண்டா மணி உணவக மேலாளராக
 • ராஜா சேது முரளி
 • சூலூர் சண்முகதேவன்
 • சிவாநந்தம் குஞ்சுமணியாக
 • சூசை ரத்தினம்
 • ஐயப்பன்
 • திருப்பதி

தயாரிப்பு தொகு

தேவவிஜயம் பிலிம் மேக்கர்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடகசாலை படத்தின் மூலம் ஜே. தமிழ் இயக்குநராக அறிமுகமானார். மேலும் அவர் ஒளிப்பதிவையும் மேற்கொண்டார். புதுமுகங்களான சத்யா, அரவிந்த், ஆர். சஞ்சய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். கேரளத்தைச் சேர்ந்த இனியா ஸ்ருதி என்ற பெயரில் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் நாயகிகளில் ஒருவராக நடிக்க பிரீத்தி புஷ்பன் நடித்தார். இப்படத்திற்கு இதேஷ் இசை இசையமைக்க, தளபதி தினேஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, முருகராம் படத்தொகுப்பை செய்தார்.[2][3][4][5]

இசை தொகு

திரைப்பட பினண்ணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் இடேஷ் அமைத்தார். இந்த படத்தின் இசைப்பதிவில் உடுமலை கரிசல் முத்து, பி. கே. சிவசிறீ, கோவை முஸ்தபா ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு பாடல்கள் உள்ளன. பாடல்களானது 18 பிப்ரவரி 2010 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பிரசன்னா, கலைப்புலி ஜி. சேகரன், வி. சி. குகநாதன், பி. எல். தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.[6] தி இந்துவின் எஸ். ஆர். அசோக் குமார் இந்த பாடல் தொகுப்பை "கடந்து செல்லக்கூடியது" என்று குறிப்பிட்டார்.[7]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "உயிரின் உயிரே"  மது பாலகிருஷ்ணன், அனு 4:57
2. "நிலவோ பனியோ"  முகேஷ், பிரியதர்ஷினி 4:43
3. "சாலை இந்த சாலை"  சித்தார்த் 2:49
4. "அங்காள அம்மனுக்கு"  முகேஷ் 4:35
5. "கொஞ்சும் குமரி"  கார்த்திக் 4:35
6. "தெருக் கூத்து"  கோவை முஸ்தபா 3:40
மொத்த நீளம்:
23:59

வெளியீடு தொகு

இந்த படம் 26 மார்ச் 2010 அன்று வசந்தபாலனின் அங்காடி தெரு வெளியான சமயத்தில் வெளியானது.[8]

வணிகம் தொகு

இந்த படம் சென்னை மண்டலத்தில் சராசரிக்கும் குறைவான தொடக்க வசூலை ஈட்டியது.[9] வணிக ரீதியாக மோசமான வசூலையே ஈட்டியது. மேலும் திரைப்பட தயாரிப்பாளர் டி. அனில் ஒரு புதிய பதாகையின் கீழ் ஆர்வம் (2010) என்ற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.[10]

குறிப்புகள் தொகு

 1. "Find Tamil Movie Paadaga Saalai". jointscene.com. Archived from the original on 3 March 2011. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
 2. "Padagasalai audio launched". ayngaran.com. 19 February 2010. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
 3. "Padagasalai inspired by our former president". ayngaran.com. 26 February 2010. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
 4. "Padagasalai team interview". ayngaran.com. 30 March 2010. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
 5. "ஸ்ருதி இனியா ஆனபின் மறந்த விஷயம்" [paadagasalai shruthi changes her name] (in Tamil). தினமலர். 22 March 2011. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 6. "Film personalities' protest against IPL". behindwoods.com. 19 February 2010. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
 7. S. R. Ashok Kumar (2 March 2010). "Not two good". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
 8. "Friday Fury - March 26". சிஃபி. 26 March 2010. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
 9. "Padagasalai - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com. 29 March 2010. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
 10. "It's all because of 'Aarvam'". indiaglitz.com. 30 April 2010. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடகசாலை&oldid=3743979" இலிருந்து மீள்விக்கப்பட்டது