சண்டிக் குதிரை
சண்டிக்குதிரை 2016 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை அன்பு மதி எழுதி இயக்கியுள்ளார். சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நாயகனாகவும், மானஸா நாயகியாகவும் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
தொகுகதைச் சுருக்கம்
தொகுமண்குதிரை செய்யும் ராஜ்கமல், மானசாவை காதல் செய்கிறார். ஹரியும், திவ்யாவும் காதலர்கள். ஹரி தன் காதலி திவ்யாவுடன் இருக்கும் போது தற்படம் எடுத்துக்கொள்கிறார். அப்படம் வெளியேறி பொதுமக்களை சென்றடைய திவ்யா அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறார். திவ்யாவின் மரணம் ஹரியை மனநிலை பிரளச்செய்கிறது. இந்தக் காதலர்களின் நிலையை கண்டு ராஜ்கமல் மனம் வருந்துகிறார். இதற்கு காரணமானவர்களை கண்டு கோபம் கொள்கிறார். மண்குதிரை செய்பவர் சண்டிக்குதிரையாக எதிரிகளை அழிக்கிறார்.
இசை
தொகுஇத்திரைப்படத்திற்கு பாடலாசிரியரான வாரஸ்ரீ இசை அமைத்திருந்தார்.