சொல்லிவிடவா
இது சொல்லிவிடவா (Sollividava) என்று தமிழிலும், கன்னடத்தில் பிரேம பரஹா (Prema Baraha) என்றும் 2018 ஆண்டு வெளியான இந்திய காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தை அர்ஜுன் எழுதி இயக்கினார். இதை சிறீராம் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற தங்களது சொந்த பதாகையின் கீழ் அவரது மனைவி நிவேதிதா அர்ஜுன் தயாரித்தார்.
சொல்லிவிடவா | |
---|---|
இயக்கம் | அர்ஜுன் |
தயாரிப்பு | நிவேதிதா அர்ஜுன் |
கதை | அர்ஜுன் |
இசை | ஜாசி கிஃப்ட் சாது கோகிலா (பின்னணி இசை) |
நடிப்பு | சந்தன் குமார் ஐஸ்வரியா அர்ஜூன் |
ஒளிப்பதிவு | எச். சி. வேணுகோபால் |
படத்தொகுப்பு | கே கே |
கலையகம் | சிறீராம் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 9 பெப்ரவரி 2018 |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் தமிழ் |
இப்படமானது கன்னடத்திலும், தமிழிலும் ஒரே சமயத்தில் தயாரிக்கபட்டது. இப்படத்தில் சந்தன் குமார், ஐஸ்வரியா அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இரண்டு பதிப்புகளிலும் நடித்த துணை பாத்திரங்களுக்கு வெவ்வேறு நடிகர் குழுக்கள் பயன்படுத்தப்பட்டனர். படத்திற்கான பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை ஜாசி கிஃப்ட் அமைத்தார். எச். சி. வேணுகோபால் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கே கே படத்தொகுப்பை மேற்கொண்டார். படத்தின் இரண்டு பதிப்புகளும் 9 பிப்ரவரி 2018 அன்று உலகளவில் வெளியிடப்பட்டன. வெளியீட்டின் போது, இந்தப் படம் ஒரு பெரிய துவக்கத்தைப் பெற்றது, இது கர்நாடகத்தில் வணிகரீதியான வசூல் வெற்றியைப் பெற்றது. ஆனால் தமிழில் ஏற்கத்தக்க வசூலை ஈட்டியது.
கதை
தொகுசஞ்சயும் ( சந்தன் குமார் ), மதுவும் ( ஐஸ்வரியா அர்ஜூன் ) ஆகியோர் போட்டி செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள். இருப்பினும், கார்கில் போர் குறித்த செய்திகளை சேகரிக்கும்போது அவர்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர். அப்போது இருவருக்கும் இடையில் ஒரு பிணைப்பு உருவாகிறது.
நடிகர்கள்
தொகுநடிகர் (கன்னடம்) | நடிகர் (தமிழ்) | பாத்திரம் |
---|---|---|
சந்தன் குமார் | சஞ்சய் | |
ஐஸ்வரியா அர்ஜூன் | மது | |
சுஹாசினி | மதுவின் அத்தை | |
கே. விஸ்வநாத் | சீனு | |
பிரகாஷ் ராஜ் | இராணுவ வீரனின் தந்தை | |
அவினாஷ் | ரேம் | |
சாது கோகிலா | சதீஸ் | சஞ்சயின் நண்பர் |
பாண்டி | சஞ்சயின் நண்பர் | |
ஓ. ஏ. கே. சுந்தர் | சுபேந்தரின் பேரன் | |
கே. விஸ்வநாத் | சீனு | |
ரங்காயண ரகு | ராஜேந்திரன் | நாராயணா |
மண்டியா ரமேஷ் | மனோபாலா | அடுக்ககத் தலைவர் |
பிரதாப் | போண்டா மணி | மதுவின் நண்பர் |
ஜீத் ரைடட் | ஜீத் | |
அர்ஜுன் | சிறப்பு தோற்றம் |
- கன்னடப் பதிப்பு
- தர்சன் "ஜெய் ஹனுமந்தா" பாடலில் சிறப்பு தோற்றத்தில்
- சிரஞ்சீவி சர்ஜா "ஜெய் ஹனுமந்தா" பாடலில் சிறப்பு தோற்றத்தில்
- துருவா சர்ஜா "ஜெய் ஹனுமந்தா" பாடலில் சிறப்பு தோற்றத்தில்
- அமன்தீப் சாவ்லா "ஜெய் ஹனுமந்தா" பாடலில் சிறப்பு தோற்றத்தில்
- தமிழ்ப் பதிப்பு
- யோகி பாபு யோகியாக
- நெல்லை சிவா போக்குவரத்து காவல் அதிகாரியாக
தயாரிப்பு
தொகுதன் மகள் ஐஸ்வரியா அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ், கன்னடம் என இருமொழிகளில் காதல் படத்தை தயாரித்து இயக்குவதாக 2015 திசம்பரில் அர்ஜுன் அறிவித்தார். அவர் முதலில் தனது மகளுக்கு மூன்று கதைகளைக் கூறினார். அவர் 1999 கார்கில் போரின் போது காதலித்த இரண்டு பத்திரிகையாளர்கள் பற்றிய கதையில் மிகவும் திருப்தி அடைந்தார். திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டபோது, அர்ஜுன் ஒரு வாரம் ஆசிய நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனதின் அலுவலகத்தில் நடப்பதை அவதானித்தபடி இருந்தார். மேலும் கார்கில் பகுதியையும் பார்த்தார்.[1][2] கன்னட நடிகர் சேத்தன் குமார் இந்த படத்தில் முன்னணி நடிகராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் வழியாக தமிழ் படங்களில் அவர் அறிமுகமானார்.[3] 2016 மேயில், சேத்தன் குமார் இந்த படத்தில் இருந்து விலகினார். படத்தில் அவரது கதாபாத்திரம் அவருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை, அவருக்கு பதிலாக மற்றொரு கன்னட நடிகரான சந்தன் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[4] அவரது பாத்திரத்திற்காக, ஐஸ்வர்யா அர்ஜுன் 1999 ஆயுத மோதலின் போது பத்திரிகையாளராக பணியாற்றிய பர்கா தத்தின் பாணியையும் பண்புகளையும் கவனமாக அவதானித்தார்.[5]
இந்த படத்தின் பணிகள் 2016 மேயில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பின் விளம்பரத்திற்கான ஒளிப்படங்கள் வெளியாயின.[6][7] படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு 2016 யூலையில் நிறைவடைந்தது. சுஹாசினி, கே. விஸ்வநாத் ஆகியோரும் படத்தின் நடிகர் குழுவில் இணைந்தனர். இந்த படம் தர்மசாலா, சென்னை, ஐதராபாத், கேரளம், மும்பை, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது. 2017 ஆகத்தில், படத்தின் தமிழ் பெயரானது காதலின் பொன்வீதி என்பதிலிருந்து சொல்லிவிடவா என்று மாற்றப்பட்டது.[8] பிரேம பரஹா என்னும் கன்னடப் பெயரானது அர்ஜூனின் படமான பிரதாப் (1990) படத்தில் இடம்பெற்ற பாடல் வரியில் இருந்து எடுக்கபட்டது.[9]
இசை
தொகுஇந்த படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை ஜாசி கிஃப்ட் அமைத்தார். இந்த இசையின் கன்னட தமிழ் பதிப்புகளை யு 1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த பாடல் தொகுப்பில் சேர்க்கப்பட்ட கதாநாயகி அறிமுக கருப்பொருள் இசையை அருல்தேவ் இசையமைத்தார்.
- கன்னட பதிப்பு
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "பிரேம பரஹா" | அர்மான் மாலிக், அனுராதா பட் | 5:05 | |||||||
2. | "மனசே மனசே" | கீரவாணி (இசையமைப்பாளர்), ஹரிணி | 5:16 | |||||||
3. | "ஜெய் ஹனுமந்தா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், திப்பு | 5:07 | |||||||
4. | "ராமா ராமா" | ஹரிசரண், அனிதா கார்த்திகேயன் | 3:58 | |||||||
5. | "பானா பனாரஸ்" | கார்த்திக், பிரியா இமேஷ் | 4:12 | |||||||
6. | "பிரேம பாரதா (மாஷப் கலவை)" | ஜாசி கிஃப்ட், அர்ஜுன், சந்தன் செட்டி, ஹரிணி | 2:48 | |||||||
7. | "மனசே மனசே (தனியாக)" | கீரவாணி (இசையமைப்பாளர்) | 5:15 | |||||||
8. | "அறிமுக கருப்பொருள் இசை" | கருவி இசை | 1:15 |
- தமிழ் பதிப்பு
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "மாஷப் கலவை" | ஜாசி கிஃப்ட், அர்ஜுன், சந்தன் செட்டி | 2:48 | |||||||
2. | "உயிரே உயிரே" | ஜி. வி. பிரகாஷ் குமார், ஹரிணி | 5:16 | |||||||
3. | "ஜெய் ஹனுமந்தா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், திப்பு | 5:07 | |||||||
4. | "ராமா ராமா" | ஹரிசரண், அனிதா கார்த்திகேயன் | 3:58 | |||||||
5. | "பானா பனாரஸ்" | கார்த்திக், பிரியா இமேஷ் | 4:12 | |||||||
6. | "உயிரே உயிரே (தனியாக)" | ஜி. வி. பிரகாஷ் குமார், ஹரிணி | 5:15 | |||||||
7. | "கதாநாயகி அறிமுக இசை" | கருவியில் | 1:15 |
வெளியீடு
தொகுபடத்தின் தயாரிப்பு செலவு ₹ 5 கோடி ஆகும்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.newindianexpress.com/entertainment/kannada/2018/feb/04/as-a-director-i-should-be-open-to-directing-all-genres-arjun-sarja-1768357.html
- ↑ http://www.thehindu.com/entertainment/movies/the-message-in-a-film-is-as-important-as-the-characters-says-arjun/article22680073.ece
- ↑ "Arjun Directs Daughter Aishwarya".
- ↑ "Prema Baraha by Arjun Sarja".
- ↑ http://www.deccanchronicle.com/entertainment/kollywood/300118/challenging-role-for-aishwarya-in-solli-vidavaa.html
- ↑ "Prema Baraha launched".
- ↑ "Arjun's big effort for his daughter – Tamil Movie News – IndiaGlitz.com".
- ↑ "Kadhalin Pon Veedhiyil is now Solli Vidava".
- ↑ "Prema-Baraha-by-Arjun-Sarja". newindianexpres.
- ↑ "Sollividava budget".