சேத்தன் குமார்

இந்திய நடிகர்

சேத்தன் குமார் (Chetan Kumar கன்னடம்: ಚೇತನ್ ಕುಮಾರ ) (பிறப்பு 24 பிப்ரவரி 1983), சேத்தன் அஹிம்சா என்றும் இவர் அறியப்படும் இவர் கன்னட நடிகர், சமூக சேவகர்,[1] பொது அறிவுஜீவி [2][3][4][5] மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார்.[6] .

சேத்தன் குமார்

சேத்தன் தெற்காசிய ஆய்வுகளில் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஒரு அமெரிக்க குடிமகனான சேத்தன் 2005-06 ஆம் ஆண்டில் தனது சொந்த நாடான இந்தியாவுக்கு வந்தார்.[7][8]

சேத்தன் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான ஆ தினகலுவில் அறிமுகமானார், மேலும் இந்த படத்திற்காக உதய திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பெற்றார்.2013 ஆம் ஆண்டில் மைனா திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் பரவலாக அறியப்பட்டார். இது விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக இவர் நாடகங்களில் நடித்தார். தெரு-நாடக இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றினார். மேலும் பெண்களின் அதிகாரமளிப்பை வலியுறுத்தும் மற்றும் வரதட்சணைக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட கிராம நாடகங்களை இயக்கியுள்ளார்.

சேத்தன் 23 ஆண்டுகளாக அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், கன்னடத்தில் சரளமாகவும் சொற்பொழிவாற்றலுக்காகவும் ஆற்றல் கொண்டவர் ஆவார். சமத்துவம் மற்றும் நீதிக்காக போராடும் முற்போக்கான இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள், விவசாயிகள் குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தலித் & ஆதிவாசி இயக்கங்களுக்கு சேத்தன் ஆதரவளித்துள்ளார். அவர் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க உரைகளை ஆற்றியுள்ளார்.[9][10][11][12] இதன் விளைவாக பல கட்சிகள் மற்றும் அடிப்படைவாத குழுக்களிடமிருந்து சில சிக்கல்களை இவர் சந்தித்துள்ளார். சேத்தன் உரைகள் புரட்சிகர, சோசலிச, ஸ்தாபன எதிர்ப்பு மற்றும் கன்னட சார்பு கொண்டவைகளாக அறியப்படுகின்றன. மேலும் இவரின் கருத்துகள் புத்தர், பசவா, பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை மையமாகக் கொண்டுள்ளன.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

சேத்தன் 24 பிப்ரவரி 1983 அன்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ், சிகாகோவில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மாரிஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவரது தந்தை மற்றும் தாய், அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சேட்டனுக்கு அசோக் குமார் எனும் சகோதரர் உள்ளார்.[13]

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், எளிய வாழ்க்கை, விமர்சன சிந்தனை மற்றும் சமூகத்திற்கு நன்மை செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சேத்தன் இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றி இருப்பதாக அரியப்படுகிறது.[14] நற்பண்பு, தத்துவம், இலக்கியம், அரசியல் போன்றவற்றினை தெரிய வைத்ததற்காக இவர் தனது பெற்றோருக்குப் பாராட்டினைத் தெரிவிக்கிறார்.[15]

கல்வி தொகு

சேத்தன் சிகாகோவின் மாரிஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். சேத்தன் மாநில அளவிலான டென்னிஸ் வீரர் (தலைவர்) மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற காலகட்டங்களில் இவர் நீச்சல் வீரராக இருந்தார்.

இடைநிலைக் கல்வி தொகு

சேத்தன் தனது கல்வியை அமெரிக்காவின் கனெக்டிகட்டின் நியூ ஹேவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் 2001 ஆம் ஆண்டில் கற்றார். அவர் பியர்சன் கல்லூரியில் உறுப்பினராக இருந்தார்.

நடிப்பு தொகு

சேத்தன் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான ஆ தினகலுவில் அறிமுகமானார், மேலும் இந்த படத்திற்காக உதய திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பெற்றார்.2013 ஆம் ஆண்டில் மைனா திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் பரவலாக அரியப்பட்டார்.

குறிப்புகள் தொகு

 1. "Chicago-born Yale graduate Chetan Kumar came to India on a Fulbright scholarship to study Kannada theatre. He stayed on, travelled, and learned many concepts, taught and learnt from children before making his mark in Kannada films. But between shoots, he continues to visit children at his family-run school near Mysore. He claims he doesn't just teach, he also learns and unlearns many notions. And that, for him, is the essence of education." இம் மூலத்தில் இருந்து 2018-04-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180412145305/http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JTS8yMDA5LzA3LzA3I1BjMDA5MTE&Mode=HTML&Locale=english-skin-custom. 
 2. Asianet Newsable (2018-04-03), Karnataka Assembly Election: "Wealth and money dictate whether you win," says actor Chetan, retrieved 2018-11-09
 3. Janaki Vasudevan (2011-04-13), Actor Chetan speaks on corruption, News9. Part 3, retrieved 2018-11-09
 4. Btv Kannada Ɩ ಬಿಟಿವಿ ಕನ್ನಡ (2017-09-12), Actor Chetan Speech on Gauri Lankesh issue, retrieved 2018-11-09
 5. mshamala rachel (2015-02-01), Lauching of Novel 'Preethiya Arasi' by Myna fame Actor Chethan, retrieved 2018-11-09
 6. Amnesty International India (2018-11-02), Chetan Kumar: Stand with the BRAVE, retrieved 2018-11-09
 7. "Going the extra mile". http://www.deccanherald.com/content/639221/going-extra-mile.html. 
 8. Yukthi i (2017-12-31), Chetan Ahimsa interview at FM Rainbow 101.3, retrieved 2018-11-09
 9. Tv9 Kannada (2017-11-19), Actor Chetan Reacted On Seperate Lingayat Relegion Row, retrieved 2018-11-09
 10. INDIAN VOICE (2017-11-25), Actor Chetan Kumar Speech in Basava Samiti auditorium in Bengaluru | Lingayat Religion, retrieved 2018-11-09
 11. Btv Kannada Ɩ ಬಿಟಿವಿ ಕನ್ನಡ (2017-09-12), Actor Chetan Speech on Gauri Lankesh issue, retrieved 2018-11-09
 12. Vijaynews9 TV (2018-02-04), Chetan kumar Speech at Manava sarapali Banglore | Vijaynews9, retrieved 2018-11-09
 13. "A guy at the water cooler: Ashok Kumar talks about being socialist in public office | Solidarity" (in en) இம் மூலத்தில் இருந்து 2018-04-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180412082325/http://www.solidarity-us.org/node/1564. 
 14. "'I would like to learn new languages'". http://www.deccanherald.com/content/254731/i-would-like-learn-languages.html. 
 15. "Chetan's giant leap from Yale to a being a household name in Karnataka - SouthScope". http://southscope.in/american-born-enlightened-chetan/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்தன்_குமார்&oldid=3756307" இருந்து மீள்விக்கப்பட்டது