சிறீராம் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
திரைப்பட தயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேசனல் (Sree Raam Films International) என்பது நடிகர் அர்ஜுன் தலைமையிலான ஓர் இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும்.
வகை | திரைப்படத் தயாரிப்பு திரைப்பட விநியோகம் |
---|---|
நிறுவுகை | 1992 |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முக்கிய நபர்கள் | அர்ஜுன் நிவேதிதா அர்ஜுன் ஐஸ்வரியா அர்ஜூன் அஞ்சனா அர்ஜுன் |
தொழில்துறை | பொழுதுபோக்கு |
உற்பத்திகள் | திரைப்படங்க்கள் (தமிழ், கன்னடம்) |
வரலாறு தொகு
1992 இல் அர்ஜுனால் உருவாக்கபட்ட ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமானது, பெரும்பாலும் அர்ஜுன் இயக்கிய படங்களை தயாரித்துள்ளது. அவரது சகோதரர் கிஷோர் சர்ஜாவும் இந்த பதாகையின் கீழ் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். சகோதரர்களின் பிள்ளைகளான ஐஸ்வரியா அர்ஜூன் மற்றும் சிரஞ்சீவி சர்ஜா ஆகியோரும் நிறுவனம் தயாரித்த படங்களில் நடித்துள்ளனர். [1] [2] [3]
வேதம் (2001) படத் தயாரிப்பின் போது நடிகர் விஷால் நிறுவனத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அர்ஜுனின் மனைவி நிவேதிதா அர்ஜுன் மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா அர்ஜுன் ஆகியோர் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். [4]
திரைப்படவியல் தொகு
ஆண்டு | படம் | மொழி | இயக்குனர் | நடிகர்கள் | Ref. |
---|---|---|---|---|---|
1992 | சேவகன் | தமிழ் | அர்ஜுன் சர்ஜா | அர்ஜுன் சர்ஜா, குஷ்பூ, கேப்டன் ராஜு | |
1993 | பிரதாப் | தமிழ் | அர்ஜுன் சர்ஜா | அர்ஜுன் சர்ஜா, குஷ்பூ, கேப்டன் ராஜு | |
1998 | துட்டா முத்தா | கன்னடம் | கிஷோர் சர்ஜா | ரமேஷ் அரவிந்த், பிரேமா, கஸ்தூரி | |
2001 | வேதம் | தமிழ் | அர்ஜுன் சர்ஜா | அர்ஜுன் சர்ஜா, சாக்ஷி சிவானந்த், வினீத் | |
2007 | தவம் | தமிழ் | அர்ஜுன் சர்ஜா | அருண் விஜய், வந்தனா குப்தா | [5] |
2009 | வாயுபுத்ரா | கன்னடம் | கிஷோர் சர்ஜா | சிரஞ்சீவி சர்ஜா, ஐந்திர்தா ரே | [6] |
2014 | ஜெய்ஹிந்த் 2 | தமிழ் / தெலுங்கு | அர்ஜுன் சர்ஜா | அர்ஜுன் சர்ஜா, சுர்வீன் சாவ்லா | [7] |
2014 | அபிமன்யு | கன்னடம் | அர்ஜுன் சர்ஜா | அர்ஜுன் சர்ஜா, சுர்வீன் சாவ்லா | [8] |
2018 | பிரேமா பராஹா | கன்னடம் | அர்ஜுன் சர்ஜா | சந்தன் குமார், ஐஸ்வரியா அர்ஜூன் | [9] |
2018 | சொல்லிவிடவா | தமிழ் | அர்ஜுன் சர்ஜா | சந்தன் குமார், ஐஸ்வரியா அர்ஜூன் | [10] |
குறிப்புகள் தொகு
- ↑ "Arjun’s avatars". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/arjuns-avatars/article3023761.ece.
- ↑ "'I'm destined to be introduced in a Kannada film'". http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-interview-with-chiranjeevi-sarja/20090901.htm#1.
- ↑ "Arjun Sarja to direct daughter in his next". 5 September 2014. https://www.thehindu.com/entertainment/arjun-sarja-to-direct-daughter-in-his-next/article6382899.ece.
- ↑ "Arjun’s daughter to debut with Vishal" இம் மூலத்தில் இருந்து 2020-06-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200608160329/https://www.sify.com/movies/8203arjun8217s-daughter-to-debut-with-vishal-news-tamil-mkmi7Gfgidfsi.html.
- ↑ "Thavam, insipid". https://www.rediff.com/movies/review/thavam/20071005.htm.
- ↑ "Vayu Putra Review | Vayu Putra Kannada Movie Review by R.G. Vijayasarathy" இம் மூலத்தில் இருந்து 2021-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210715074106/https://www.nowrunning.com/movie/6870/kannada/vayu-putra/2321/review.htm.
- ↑ "Review: Jai Hind 2 fails to impress". https://www.rediff.com/movies/review/review-jai-hind-2-fails-to-impress-south/20141110.htm.
- ↑ "Movie review: Abhimanyu". https://bangaloremirror.indiatimes.com/entertainment/reviews/Arjun-Sarja-Sandalwood-Arjun-Sarja-Survin-Chawla-Ravi-Kale-Rahul-Dev-Sonu-Sood-Biradar-Simran-Kapoor/articleshow/45073817.cms.
- ↑ "Prema Baraha Review {2.5/5}: Watch this film if you're a fan of the stereotypical commercial fare". https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movie-reviews/prema-baraha/movie-review/62845395.cms.
- ↑ Naig, Udhav (10 February 2018). "Sollividava review: Love in the time of Kargil war". https://www.thehindu.com/entertainment/movies/sollividava-review-love-in-the-time-of-kargil-war/article22712361.ece.