சாக்ஷி சிவானந்த்

இந்திய நடிகை

சாக்ஷி சிவானந்த் (Sakshi Shivanand, பிறப்பு: ஏப்ரல் 15, 1977) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் , இந்தி படங்களில் நடித்துள்ளார்.[1] இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு அனுபவ் சின்ஹா இயக்கிய ஆப்கோ பெஹ்லே பீ கஹின் தேகா ஹை ஆகும். இதில் பிரியான்ஷு சாட்டர்ஜி, ஓம் பூரி, ஃபரிதா ஜலால் ஆகியோருடன் இணைந்து நடித்தார். பிரபல அசைவூட்ட தொலைக்காட்சித் தொடரான தி ஸ்டோரி ஆஃப் சிண்ட்ரெல்லாவில் சிண்ட்ரெல்லாவிற்கு இவர் பின்னணி குரல் கொடுத்தார். இது இந்தியாவில் ஜஸ்ட் கிட்ஸ்! சஹாரா டிவியில் ஒளிபரப்பானது.[2]

சாக்ஷி சிவானந்த்
2006 ஆண்டு வெளியான தந்தகே தக்க மகா கன்னடப் படத்தில்சாக்ஷி சிவானந்த்
பிறப்பு15 ஏப்ரல் 1977 (1977-04-15) (அகவை 47)
இந்திய ஒன்றியம், மகாராட்டிரம், மும்பை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போது வரை
உறவினர்கள்ஓஹானா சிவானந்த் (சகோதரி)

சிவானந்த் 1996 இல் பாலிவுட்டில் அறிமுகமானார். தனது ஆரம்ப கால தொழில் வாழ்க்கையின் போது, இவர் ஆதித்யா பஞ்சோலியுடன் இணைந்து ஜான்ஜீர் (1998) படத்தில் நடித்தார். பின்னர் இவர் டோலிவுட்டில் குறுகிய காலத்திற்குள் புகழ் பெற்றார்.[3] தெலுங்கு திரைப்படத் துறையில் பல பெரிய நாயகர்களுடன் இணைந்து நடித்தார். தெலுங்கில் அறிமுகமான இவர் மாஸ்டர் படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்தார். பின்னர் இவர் நாகார்ஜூனாவுடன் சீதாராமராஜு என்ற படத்தில் நடித்தார். மேலும் பாலகிருஷ்ணாவுடன் வம்சோத்தரகுடு படத்தில் நடித்தார். ராஜசேகருக்கு ஜோடியாக சிம்மராசியிலும், மகேஷ்பாபுக்கு ஜோடியாக யுவராஜுவிலும் நடித்தார். இவர் தெலுங்கு படமான ராஜஹம்ஷாவில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தார். யமஜாதகுடு மற்றும் கலெக்டர் காரு என்ற சமூக-கற்பனை படத்திலும் நடித்தார். 2000 ஆம் ஆண்டில், மகேஷ் பாபு மற்றும் சிம்ரன் பாகா ஆகியோருடன் யுவராஜு படத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு ஜே. டி. சக்ரவர்த்தி இயக்கிய ஹோமம் படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு இவர் ஆடினார்.

இவரது தங்கையான ஷில்பா ஆனந்த் ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார்.[4]

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழில்
1995 ஜனம் குண்ட்லி மது இந்தி
1995 சஞ்சை இந்தி
1996 பாப்பா கெஹ்தே ஹை இந்தி
1996 இந்திர பிரஸ்தம் சிறப்புத் தோற்றம் மலையாளம்
1996 மஞ்சீரத்வானி மலையாளம்
1997 புதையல் சொப்ணா தமிழ்
1997 மாஸ்டர் காஞ்சனா தெலுங்கு
1997 மாப்பிள்ளை கவுண்டர் பிரியா தமிழ்
1997 கலெக்டர் காரு தெலுங்கு
1998 இராஜஹம்சா தெலுங்கு
1998 நிதி தெலுங்கு
1998 சன்சீர் கவிதா இந்தி
1998 சினேகிதலு தெலுங்கு
1999 இத்தரு மித்ரலு அனிதா தெலுங்கு
1999 சமுத்திரம் இராஞ்சியலட்சுமி தெலுங்கு
1999 சீதாராம ராஜு தெலுங்கு
1999 பெல்லிவரமண்டி தெலுங்கு
1999 யமஜாதகுடு தெலுங்கு
2000 வம்சடோரக்கடு சுரேகா தெலுங்கு
2000 குரோத் சீமா இந்தி
2000 யுவராஜு ஸ்ரீவள்ளி தெலுங்கு
2000 கலாட்டே அலியந்துரு கன்னடம்
2000 மா பிள்ளிக்கி ரண்டி அஞ்சலி தெலுங்கு
2000 பெல்லி சம்மந்தம் தெலுங்கு
2001 வாஞ்சிநாதன் திவ்யா தமிழ்
2001 சிம்மராசி இராஜேஸ்வரி தெலுங்கு
2001 வேதம் சீதா தமிழ்
2002 ஆப்கோ பெஹ்லே பீ கஹின் தேகா ஹை பக்கி இந்தி
2002 நானு நானே ஆர்த்தி கன்னடம்
2002 சைனிகா கௌரி கன்னடம்
2002 கோதண்டராமா மீனாட்சி கன்னடம்
2002 கல்நாயக்கன் கா கல்நாயக் இந்தி
2003 குஷி சிறப்புத் தோற்றம் இந்தி
2004 மானஸ்தன் இராசாத்தி தமிழ்
2006 தந்தேகே தக்க மகா பாணு கன்னடம்
2007 ஜஹான் ஜெயேகா ஹமென் பாயேகா அஞ்சு கண்ணா இந்தி
2007 சௌந்தர்யா சௌந்தர்யா ரமேஷ் கன்னடம்
2008 ஹோமம் தெலுங்கு
2010 ரங்கா தி தொங்கா தெலுங்கு
2013 ஆதிபகவன் சிறப்புத் தோற்றம் தமிழ்
2014 பரமசிவா கன்னடம்
அறிவிக்கப்படும் தில்லாகி ... யே தில்லாகி(Unreleased) அறிவிக்கப்படும் இந்தி

குறிப்புகள்

தொகு
  1. Kuckian, Uday (2 June 2006). "Sakshi Shivanand: Rising Star Down South". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-11.
  2. [1]
  3. IANS (9 November 2007). "Underworld connection scared off Sakshi". DNA. பார்க்கப்பட்ட நாள் 2016-09-11.
  4. Shah, Prerna (13 August 2007). "Shilpa Anand is not a B-grade actress". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-09-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்ஷி_சிவானந்த்&oldid=3946510" இலிருந்து மீள்விக்கப்பட்டது