ஓஹானா சிவானந்த்

இந்திய நடிகை,வடிவழகி

ஓஹானா சிவானந்த் (Ohanna Shivanand) ஷில்பா ஆனந்த என்ற பெயருடன் பிறந்த [1] இவர் ஒரு ஒரு இந்திய வடிவழகியும், தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவற்றின் தோன்றும் நடிகையுமாவார். "தில் மில் காயே" என்றத் தொலைக்காட்சித் தொடரில் இவரது இரு வேறுபட்ட பாத்திரங்களான "டாக்டர்ரித்திமா குப்தா" மற்றும் "டாக்டர் ஷில்பா மல்ஹோத்ரா" என்ற பெயரில் நடித்தற்காக நன்கு அறியப்பட்டார்.[2] அவர் திரைப்படம் மற்றும் இசை வெளியீடுகளில் நடித்தார்[3]

ஓஹானா சிவானந்த்

ஓஹானா "ஏ ஹே ஹாய் லாலிபாப்" படத்தின் படப்பிடிப்பில்
பட்டப்பெயர்(கள்) ஷோனா, ஷில்பு
தொழில் விளம்பர நடிகை, நடிகர்

இளமை வாழ்க்கை

தொகு

தென்னாப்பிரிக்காவில் 1982 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதி இவர் பிறந்தார். இவரது பெற்றோருடன் இந்தியா வந்தார். 2015ஆம் ஆண்டில் இவர் தனது பெயரை "ஓஹானா சிவானந்த்" என மாற்க் கொண்டார்..[4] கன்னட நடிகையான சாக்‌ஷி சிவானந்த், இவரது இளைய சகோதரியாவார்.[5] 2000 முதல் 2003 வரை சண்டிகர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், பயன்பாட்டு மென்பொருளில் முதுகலைப் பட்டம் (எம்.சி.ஏ) பெற்றார். ஐந்து வருடங்களுக்கு ஜாவா, ஜே2இஇ, மின்-கற்றல் பயன்பாட்டு அபிவிருத்தியாளராக பணியாற்றினார்.[6]

தொழில்

தொகு

விளம்பர நடிகையாக

தொகு

இவர், தனது தொழில் வாழ்க்கையை ஒரு விளம்பர நடிகையாக ஆரம்பித்தார். "கோகோ-கோலா" விளம்பரத்தை ஆமிர் கானுடன், "லக்ஸ் சோப்" விளம்பரத்தை ஐஸ்வர்யா ராயுடன், "டாபர் புடின் ஹரா" மற்றும் "நெரோலாக் பெயிண்ட்" விளம்பரத்தை அமிதாப் பச்சன் ஆகியோருடன் 40க்கும் மேற்பட்ட விளம்பரங்களை இவர் செய்துள்ளார். பல்வேறு வகை தயாரிப்புகளுக்கு விளம்பர நடிகையாகவும் இவர் பணிபுரிந்து வருகிறார்.[7]

திரை வாழ்க்கை

தொகு

இவர், தென்னிந்திய திரைப்படமான "பெசவாடா போலிஸ் ஸ்டேஷன்" (2002) என்றப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இரவி சங்கரின் படமான "இக்ரார் பை சான்ஸ்" (2006) படத்தில் "ராஷ்மி மெஹ்ரா" என்ற பாத்திரத்தில் பாலிவுட் படங்களில் அறிமுகமானார்.[7]

தொலைக்காட்சி

தொகு

இவர், ஒரு தொலைக்காட்சி நடிகையும் ஆவார். "ஸ்டார் ஒன்" தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மருத்துவ நிகழ்ச்சியான "தில் மில் கயே" என்ற ஒரு நிகழ்ச்சியில் "டாக்டர் ரித்திமா குப்தா" என்ற வேடத்தில் தோன்றினார். [8] மே 2008 இல் இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி, மீண்டும் 2010இல் திரும்பினார், அதே நிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தில் "டாக்டர் ஷில்பா மல்ஹோத்ரா" என்ற ஒரு பாத்திரத்தில் நடித்தார்.[9] 2012 பிக் தொலைக்காட்சியில் "மஹிசாகர்" என்ற ஒரு "மேஜிக்" நிகழ்ச்சியில் இவர் தொன்றினார்.[10]

இசை வெளியீடுகள்

தொகு

2007ஆம் ஆண்டில் கோல் கோல் அக் (2002) மற்றும் குச் டெர் தக் (2007) ஆகிய இசை நிகழ்ச்சிகளில் தோன்றினார். மேலும் பராஸ் அரோரா மற்றும் ஜுபெர் ஆகியோருடன் கச்சிச்சியன் (2014) என்ற நிகழ்ச்சியிலும், சகேல் ஓஸ்வாலுடனும், குவாஷேய்ன் (2014) என்ற நிகழ்ச்சியிலும், தர்சீம் ஜாசருடனும் ஓவர் அண்டர் (2016) என்பதிலும் தோன்றியுள்ளார்.

குறிப்புகள்

தொகு
  1. "Shilpa Anand changes her name to Ohanna Shivanand!". Bollywooddhamaka.com. 1 July 2015. Archived from the original on 14 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Dill Mill Gayye completes 9 years: Where is the cast now". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 August 2016. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "Shilpa Anand: Me, wearing a saree?". Times of India. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.
  4. "Shilpa Anand is Ohanna Shivanand now! Read on to know why!". Pinkvilla.com. 30 June 2015. Archived from the original on 14 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. "Southern starlet Sakshi Shivanand twin sister prank blows out of proportion 19032001". IndiaToday. 19 March 2001. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. "Shilpa Anand is not a B-grade actress". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 August 2007. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
  7. 7.0 7.1 "Techie-turned-model Shilpa Anand takes Bollywood route to stardom". Indiatoday.com. 17 July 2006.
  8. "Remember Dr. Riddhima from Dill Mill Gayye? This is what she looks like now-". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
  9. "Small screen's heartthrobs who return on fans' demands". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
  10. "Shilpa Anand to romance Viraf Phiroz in Star Plus' telefilm". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 July 2012. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளிப் புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓஹானா_சிவானந்த்&oldid=3547223" இலிருந்து மீள்விக்கப்பட்டது