சிரஞ்சீவி சர்ஜா

சிரஞ்சீவி சர்ஜா (Chiranjeevi Sarja, 17 அக்டோபர் 1980 - 7 சூன் 2020) என்பவர் கன்னடத் திரைப்படங்களில் நடித்த ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.[2][3] இவர் நடிகர் துருவா சர்ஜாவின் சகோதரர், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகன், மற்றும் மூத்த கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனும் ஆவார்.

சிரஞ்சீவி சர்ஜா
பிறப்புசிரஞ்சீவி சர்ஜா
(1980-10-17)17 அக்டோபர் 1980
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
இறப்பு7 சூன் 2020(2020-06-07) (அகவை 39)
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்சிரு[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–2020
வாழ்க்கைத்
துணை
உறவினர்கள்சக்தி பிரசாத் (தாத்தா)
அர்ஜுன் (மாமா)
துருவா சர்ஜா (சகோதரர்)

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சர்ஜா பெங்களூரில், அம்மாஜி மற்றும் விஜய் குமார் ஆகியோருக்கு பிறந்தார்.[2] பெங்களூரில் உள்ள பால்ட்வின் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு பெங்களூரில் உள்ள விஜயா கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் தனது மாமா அர்ஜுன் சர்ஜாவுடன் உதவி இயக்குநராக சுமார் 4 ஆண்டுகள் பணியாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அக்டோபர் 2017 இல், இவர் நடிகை மேகனா ராஜுடன் நிச்சயதார்த்தம் செய்தார்.[4] பின்னர் 30 ஏப்ரல், 2018 அன்று ஒரு கிறிஸ்தவ முறைப்படி, இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்,[5] அதைத் தொடர்ந்து அரண்மனை மைதானத்தில் 2 மே, 2018 அன்று ஒரு பாரம்பரிய இந்து முறைப்படி, திருமண விழா நடைபெற்றது.[6]

தொழில் தொகு

சர்ஜா சுமார் 22 படங்களில் நடித்தார், இது 2009 ஆம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா திரைப்படத்தில் தொடங்கி, இது அவரது மாமா கிஷோர் சர்ஜா இயக்கியது மற்றும் சிறந்த அறிமுகத்திற்கான (ஆண்) புதுமையான திரைப்பட விருதைப் பெற்றது.[7] இவரது பல படங்கள் பிற மொழிப் படங்களின் மொழிபெயர்ப்புகளாக இருந்தன, அதிரடி திரைப்படமான வரதானாயகா (2013), திகில் திரைப்படமான விசில் (2013), திகில் நகைச்சுவை திரைப்படமான சந்திரலேகா (2014), அதிரடி திரைப்படமான ருத்ர தாண்டவா (2015) மற்றும் அதிரடி திகில் திரைப்படமான அம்மா ஐ லவ் யூ (2018) போன்ற திரைப்படங்கள் அடங்கும்.[8][9]

இறப்பு தொகு

சூன் 7, 2020 அன்று மதியம் 12 மணியளவில் இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது, இவருக்கு திடீரென நெஞ்சு வலி, வலிப்பு மற்றும் மூளையில் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இவர் மரணம் அடைந்தார்.[10][11]

நடித்த திரைப்படங்கள் தொகு

  இன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2009 வாயுபுத்ரா பாலு சிறந்த அறிமுகத்திற்கான புதுமையான திரைப்பட விருது (ஆண்)[12]
2010 காந்டேதே கிருஷ்ணா
சிர்ரு சிரு
2011 தண்டம் தசகுனம் சூர்யா IPS
கெம்பே கவுடா ராம் சிறப்புத் தோற்றம்
2013 வரதநாயக்கா ஹரி
விசில் ராம்
2014 சந்திரலேகா சந்து
அஜித் அஜித்
2015 ருத்ர தாண்டவா சிவராஜ்
ஆட்டகாரா மிருத்யுஞ்சய்
ராம்-லீலா ராம்
2017 ஆக் அர்ஜூன் / சிவா
பர்ஜாரி ஒரு சிப்பாயாக சிறப்புத் தோற்றம்
2018 பிரேமா பராகா சிறப்புத் தோற்றம்
சம்காரா ஸ்ரீசைலா [13][14]
சீசர் சீசர்
அம்மா ஐ லவ் யூ சித்தார்த்
2019 சிங்கா சிங்கா [15]
2020 காக்கி சிரு [16]
ஆத்யா ஆதித்ய சங்கர் [17]
சிவர்ஜுனா சிவா [18]
ராஜமார்தாண்டா  ராஜா படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது[19][20]
ஏப்ரல்  அறிவிக்கப்படும் படம் எடுக்கப்பட்டு வருகிறது[21][22]
ரணம்  அறிவிக்கப்படும் படம் எடுக்கப்பட்டு வருகிறது[23][24]
சத்ரியா  அறிவிக்கப்படும் படம் எடுக்கப்பட்டு வருகிறது[25]

மேற்கோள்கள் தொகு

  1. "The bona fide actor". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/the-bona-fide-actor/article22456992.ece. பார்த்த நாள்: 7 June 2020. 
  2. 2.0 2.1 "Kannada actor Chiranjeevi Sarja passes away". Deccan Herald. https://www.deccanherald.com/state/top-karnataka-stories/kannada-actor-chiranjeevi-sarja-passes-away-846735.html. பார்த்த நாள்: 7 June 2020. 
  3. "Arjun nephew in 'Vaayuputra' - Kannada Movie News". IndiaGlitz இம் மூலத்தில் இருந்து 13 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110613142736/http://www.indiaglitz.com/channels/kannada/article/34897.html. 
  4. "Chiranjeevi and Meghana Raj got engaged". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/mollywood/231017/cupid-strikes-again.html. பார்த்த நாள்: 7 June 2020. 
  5. "Actress Meghna Raj weds Chiranjeevi Sarja". The Week. https://www.theweek.in/news/entertainment/2018/04/30/actress-meghna-raj-weds-chiranjeevi-sarja.html. பார்த்த நாள்: 7 June 2020. 
  6. "Kannada Actors Meghana Raj And Chiranjeevi Sarja Get Married". NDTV. 3 May 2018. https://www.ndtv.com/entertainment/kannada-actors-meghana-raj-and-chiranjeevi-sarja-get-married-see-trending-pics-1846350. பார்த்த நாள்: 7 June 2020. 
  7. "Kannada Actor Chiranjeevi Sarja Passes Away at 39". News 18. https://www.news18.com/news/movies/kannada-actor-chiranjeevi-sarja-passes-away-at-39-2657907.html. பார்த்த நாள்: 7 June 2020. 
  8. "Chiranjeevi on a Remake Roll". New Indian Express இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011130208/https://www.newindianexpress.com/cities/bengaluru/2014/feb/08/Chiranjeevi-Sarja-on-Remake-Roll-573437.html. பார்த்த நாள்: 7 June 2020. 
  9. "Remembering Chiranjeevi Sarja: 5 popular movies that prove he was a solid performer". Deccan Herald. https://www.deccanherald.com/entertainment/entertainment-news/remembering-chiranjeevi-sarja-5-popular-movies-that-prove-he-was-a-solid-performer-846748.html. பார்த்த நாள்: 7 June 2020. 
  10. "Kannada actor Chiranjeevi Sarja passes away at 39". The Hindu. https://www.thehindu.com/entertainment/kannada-actor-chiranjeevi-sarja-passes-away-at-39/article31772154.ece. பார்த்த நாள்: 7 June 2020. 
  11. "உடல்நல குறைவால் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம்: எடியூரப்பா இரங்கல்". https://www.maalaimalar.com/news/national/2020/06/08092725/1586436/Yeddyurappa-Actor-Chiranjeevi-Sarja-death.vpf.  மாலை மலர் (சூன் 8, 2020)
  12. "Innovative Film Awards, star studded, star oriented". chitratara.com. 3 May 2010 இம் மூலத்தில் இருந்து 20 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131220193929/http://chitratara.com/show-content.php?id=1884&ptype=News&title=INNOVATIVE%20FILM%20AWARDS%20%3FSTAR%20STUDDED%20STAR%20ORIENTED%21. 
  13. "Chiranjeevi Sarja plays a blind action hero in Samhaara" (in en-IN). 2017-11-20 இம் மூலத்தில் இருந்து 6 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191006023440/https://indianexpress.com/article/entertainment/regional/chiranjeevi-sarja-plays-a-blind-action-hero-in-samhaara-4946226/. 
  14. "Hariprriya, Chiranjeevi Sarja talk about 'Yenachariyu' song from their film 'Samhaara' | Kannada Movie News - Times of India" இம் மூலத்தில் இருந்து 9 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190909151046/https://timesofindia.indiatimes.com/videos/entertainment/regional/kannada/hariprriya-chiranjeevi-sarja-talk-about-yenachariyu-song-from-their-film-samhaara/videoshow/62805676.cms. 
  15. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 21 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190721141854/https://bangaloremirror.indiatimes.com/entertainment/reviews/sinnga-movie-review-prems-would-be-proud-of-this-kutty/articleshow/70299266.cms. 
  16. "Chiranjeevi Sarja to play the lead role in 'Khaki' - Times of India" (in en) இம் மூலத்தில் இருந்து 5 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191105225623/https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/chiranjeevi-sarja-to-play-the-lead-role-in-khaki/articleshow/67958367.cms. 
  17. "Sruthi Hariharan, Chiranjeevi Sarja to resume work on the Kannada remake of Kshanam - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/sruthi-hariharan-chiranjeevi-sarja-to-resume-work-on-the-kannada-remake-of-kshanam/articleshow/67572014.cms. 
  18. Shivaarjun Movie Review: The story line and comic scenes fail to impress, retrieved 2020-03-13
  19. "Deepti Sati to play lead in Chiranjeevi Sarja's Raja Marthanda" இம் மூலத்தில் இருந்து 6 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191006023443/http://www.newindianexpress.com/entertainment/kannada/2018/mar/11/deepti-sati-to-play-lead-in-chiranjeevi-sarjas-raja-marthanda-1785592.html. 
  20. "Chiranjeevi Sarja's next is Raaja Marthanda - Times of India" (in en) இம் மூலத்தில் இருந்து 25 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191025161727/https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/chiranjeevi-sarjas-next-is-raaja-marthanda/articleshow/60156162.cms. 
  21. "Chiranjeevi Sarja on board for Rachita Ram's April" இம் மூலத்தில் இருந்து 6 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191006023443/http://www.newindianexpress.com/entertainment/kannada/2019/oct/03/chiranjeevi-sarja-on-board-for-rachita-rams-april-2042492.html. 
  22. "ರಚಿತಾ ರಾಮ್ 'ಏಪ್ರಿಲ್'ಗೆ ಬೆಂಬಲ ಕೊಟ್ಟ ಚಿರಂಜೀವಿ ಸರ್ಜಾ" (in kn). 2019-10-03 இம் மூலத்தில் இருந்து 6 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191006023452/https://vijaykarnataka.com/entertainment/gossip/chiranjeevi-sarja-enters-to-april-kannada-movie/articleshow/71417875.cms. 
  23. "Chiranjeevi Sarja turns encounter specialist in Ranam" இம் மூலத்தில் இருந்து 6 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191006023500/http://www.newindianexpress.com/entertainment/kannada/2018/jul/23/chiranjeevi-sarja-turns-encounter-specialist-in-ranam-1847135.html. 
  24. "Varalaxmi Sarathkumar returns to Kannada cinema with Chiranjeevi Sarja-Chetan-starrer Ranam" இம் மூலத்தில் இருந்து 6 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191006023447/https://www.cinemaexpress.com/stories/news/2019/feb/20/varalaxmi-sarathkumar-returns-to-kannada-cinema-with-chiranjeevi-sarja-chetan-starrer-ranam-10219.html. 
  25. May 30, Bangalore Mirror Bureau | Updated; 2019; Ist, 10:28. "Chiranjeevi Sarja is in Anil Mandya's directorial debut Kshatriya" (in en) இம் மூலத்தில் இருந்து 6 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191006023459/https://bangaloremirror.indiatimes.com/entertainment/south-masala/chiru-is-now-kshatriya/articleshow/69567804.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரஞ்சீவி_சர்ஜா&oldid=3627830" இருந்து மீள்விக்கப்பட்டது