அனுராதா பட்

திரைப்பட பின்னணிப் பாடகி

அனுராதா பட் (Anuradha Bhat) திரைப்படங்களுக்கான ஓர் இந்திய பின்னணிப் பாடகி ஆவார்.[1] இவர் முக்கியமாக கன்னட மொழிப் படங்களில் பாடுகிறார். இவர் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது பாடல்களை பதிவு செய்துள்ளார். மேலும் பல்வேறு இசைத் தொகுப்புகளுக்காக 15 வெவ்வேறு மொழிகளில் 5000க்கும் மேற்பட்ட பாடல்களையும் பதிவு செய்துள்ளார். சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது , இரண்டு முறை பிலிம்பேர் விருது - கன்னடம், சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் - கன்னடம்]], தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள் - தசாப்தத்தின் பெண் பாடகி, ஆர்யபட்டா சர்வதேச விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

அனுராதா பட்
பிறப்பு23 சூலை
பிறப்பிடம்மங்களூர், கருநாடகம், இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை, பக்திப் பாடல்கள், பாவகீதம், குழந்தைகள இசை
தொழில்(கள்)பாடுதல், பின்னணிப் பாடகர்
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்2006–தற்போது வரை

ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும் தொகு

அனுராதா பட், சிறீகிருஷ்ணா பட் - காயத்திரி ஆகியோருக்கு கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் பிறந்தார். அனுராதாவுக்கு அனுபமா பட் என்ற ஒரு தங்கை இருக்கிறார். அவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் நடிகரும் ஆவார். [2] [3]

அனுராதா பட், தனது ஆரம்பக் கல்வியை கார்மல் பள்ளியிலிருந்து இளம் அறிவியல் பட்டத்தையும் கனரா கல்லூரியின் எம்எஸ்என்எம் பெசன்ட் பிஜி மேலாண்மைக் கல்லூரியிலிருந்து வணிக மேலாண்மையில் முதுகலையையும் முடித்தார் (இரண்டும் மங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது).[4] பின்னர் இவர் பெங்களூரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனிதவளத் துறையில் பணியமர்த்தப்பட்டார். கமலா பட் என்பவரிடமிருந்து பரதநாட்டியப் பயிற்சி பெற்றார். மங்களூரு அனைத்திந்திய வானொலியின் மூத்த இசை கலைஞராக பணியாற்றிய எம். ஸ்ரீநாத் மராத்தேவிடம் இருந்து கருநாடக இசையில் குரல், பக்தி, மெல்லிசை பாடுதலுக்கான பயிற்சியும் பெற்றார்.

தொழில் தொகு

மங்களூருவில் மாவட்ட அளவில் நடைபெற்ற அனைவருக்குமான பாட்டுப் போட்டியில் இசை இயக்குனர் குருகிரண் இவரை முதன்முதலில் கண்டறிந்தார். பின்னர் இவரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தனது நிகழ்ச்சிகளில் நிகழ்த்த இவரை அழைத்துச் சென்றார். அனுராதா, தனது கல்லூரி நாட்களில், கன்னட ஈடிவி தொலைக்காட்சி நடத்திய திறமை கண்டறியும் ஒரு நிகழ்ச்சியில் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து , "ஏதி தும்பி ஹதுவெனு - அனவேசனே", என்ற பாடலை பாடித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் புகழ்பெற்ற இசை இயக்குநர் அம்சலேகா இவரை "நெனப்பிறலி " என்ற திரைப்படத்திற்கான பாடல்களைப் பாடத் தேர்ந்தெடுத்தார்.

பின்னணிப் பாடல் தொகு

அம்சலேகாவின் இசையமைப்பில் மீரா மாதவ ராகவா திரைப்படத்திற்காக "வசந்த வசந்தா" என்ற பாடலின் மூலம் அனுராதா பட் ஒரு முழுமையான பின்னணி பாடகியாக உருவெடுத்தார். பின்னர், வி.மனோகர், சாது கோகிலா, ராஜேஷ் ராம்நாத், குருகிரண், மனோ மூர்த்தி, வி. ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் ஜன்யா, இளையராஜா , மணிசர்மா, தமன் , கீரவாணி உள்ளிட்ட மற்ற அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் இவர் பாடினார். மராலி மரேயாகி (சவாரி), ஜம் ஜும் மாயா (வீர மதகரி), எல்லெல்லோ ஓடுவா மனசே (சிட்லிங்கு), ஸ்ரீகிருஷ்ணா (பஜரங்கி), ஓ பேபி (ரிக்கி), அப்பா ஐ லவ் யூ பா (சௌகா) உள்ளிட்ட பாடல்களுக்காக இவர் அறியப்படுகிறார். இதுவரை, இவர் 1500க்கும் மேற்பட்ட கன்னடத் திரைப்படங்களில் பாடியுள்ளார். துளு, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில பாடல்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_பட்&oldid=3704391" இருந்து மீள்விக்கப்பட்டது