மணிக்குயில்

1990இல் வெளியான தமிழ்த் திரைப்படம்

மணிக்குயில் 1993 ஆம் ஆண்டு முரளி மற்றும் சாரதா பிரீதா நடிப்பில், இளையராஜா இசையில், ராஜவர்மன் இயக்கத்தில், ஆர். தனபாலன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4]

மணிக்குயில்
இயக்கம்ராஜவர்மன்
தயாரிப்புஆர். தனபாலன்
கதைராஜவர்மன்
ஏ. வீரப்பன்(வசனம்)
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜி. ராஜேந்திரன்
படத்தொகுப்புஎம். கணேசன்
கலையகம்யாகவா புரொடக்சன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 26, 1993 (1993-02-26)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

முத்துவேலு (முரளி) அவன் தாய் தெய்வானை (கோகிலா) மற்றும் தாத்தாவுடன் (ஏ. கே. வீராசாமி) மலைப்பிரதேச கிராமத்தில் வசிக்கிறான். படித்தவனான முத்துவேலு மலைப்பிரதேச மக்களின் தொழிலான தேன் சேகரித்தலை செய்துவருகிறான். வன அதிகாரி சுந்தரம் (சரண்ராஜ்) முத்துவேலுவுடன் அடிக்கடி சண்டையிடுகிறான். நகரத்திலிருந்து வரும் பெண்ணான காவேரி (சாரதா பிரீதா) முத்துவேலு பாடும் பாடலைக் கேட்கிறாள். அதை ஒளிப்பதிவு செய்து ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்திற்கு அனுப்புகிறாள். முத்துவேலு பாடும் பாடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகு அனைவரும் அறிந்த பாடகனாக புகழடைகிறான். சுந்தரம் முத்துவேலுவுடன் வீண் சண்டையிடுவதால் பணிநீக்கம் செய்யப்படுகிறான்.

முத்துவேலுவும் காவேரியும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்ய காவேரியின் தந்தை ராமசாமி (சண்முகசுந்தரம்) சம்மதிக்கிறார். இதை அறிந்த சுந்தரம் திருமணத்தை நிறுத்தும் வஞ்சக எண்ணத்துடன் ராமசாமியை சந்தித்து தானே முத்துவேலுவின் தந்தை என்று கூறுகிறான். சுந்தரம் தனது கணவன் இல்லையென்று மறுக்கும் தெய்வானையிடம் அவள் கணவன் யார் என்று ராமசாமி கேட்கிறார். அந்த கேள்விக்கு தகுந்த பதில் சொல்ல மறுக்கிறாள் தெய்வானை. இதனால் திருமணத்தை நிறுத்திவிடும் ராமசாமி, சுந்தரத்தை தன் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்துகிறார்.

வீட்டிற்குத் திரும்பியதும் முத்துவேலு தன் தந்தையைப் பற்றி தெய்வானையிடம் கேட்கிறான். தெய்வானை நடந்த உண்மைகளை முத்துவேலுவிடம் கூறுகிறாள். யாருமற்ற அனாதையான தெய்வானை பணக்காரனான ரத்னசபாபதியை விரும்புகிறாள். அவளைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளிக்கும் ரத்னசபாபதியால் அவள் கர்ப்பமாகிறாள். இதையறிந்த ரத்னசபாபதி உறவினர்கள் அவளைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவதால் வேறுவழியின்றி அவ்வூரிலிருந்து வெளியேறுகிறாள். இம்மலைப்பிரதேசத்திற்கு வரும் அவளுக்கு இரக்க மனம் படைத்த முத்துவேலுவின் தாத்தா அடைக்கலம் தந்து அவருடைய மகளைப் போல கவனித்துக் கொண்டதாக சொல்லி முடிக்கிறாள்.

தன் தந்தையைப் பற்றி அறியும் முத்துவேலு அவரைத் தேடிச் செல்கிறான். அவருக்குத் திருமணமாகி மூன்று மகன்கள் இருப்பதை அறியும் முத்துவேலு அதன்பின் என்ன செய்தான்? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் வாலி மற்றும் பொன்னடியான்.[5][6][7]

வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ஊரு நாடோடி மனோ 4:56
2 தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே மனோ, உமா ரமணன் 4:47
3 வெட்டி வெட்டி வேரு அருண்மொழி 4:39
4 அடி மாறிவந்தா மலேசியா வாசுதேவன் 4:39
5 காதல் நிலவே அருண்மொழி, உமா ரமணன் 5:02
6 காதல் என்னும் வேதம் மலேசியா வாசுதேவன் 4:51

மேற்கோள்கள் தொகு

  1. "மணிக்குயில்". http://spicyonion.com/movie/manikuyil/. 
  2. "மணிக்குயில்" இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202100657/http://www.gomolo.com/manikuyil-movie/11766. 
  3. "மணிக்குயில்" இம் மூலத்தில் இருந்து 2004-11-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041122111020/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=1757. 
  4. "மணிக்குயில்" இம் மூலத்தில் இருந்து 2010-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100210181458/http://www.jointscene.com/movies/Kollywood/Manikkuyil/7206. 
  5. "மணிக்குயில் பாடல்கள்". http://play.raaga.com/tamil/album/manikuyil-t0002796. 
  6. "மணிக்குயில் பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202075500/http://mio.to/album/Manikuyil+(1993). 
  7. "மணிக்குயில் பாடல்கள்". http://www.allmusic.com/album/manikuyil-mw0002114587. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிக்குயில்&oldid=3691807" இருந்து மீள்விக்கப்பட்டது