பொன்னடியான்

பொன்னடியான் (Ponnadiyan) என்பவர் தமிழ்க் கவிஞராவார். கவிஞர் பாரதிதாசனின் மாணவராகவும் உதவியாளராகவும் இருந்தவர்[1]. பாரதியார், பாரதிதாசன் ஆகிய இருவரையும் வழிகாட்டிகளாகக் கொண்டவர். "முல்லைச்சரம்" என்னும் இதழின் ஆசிரியர். பாரதிதாசன் தொடங்கிய தமிழ்க்கவிஞர் மன்றத்தை ஐம்பத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்[1]. திரைப்படப் பாடல்களும் இவர் எழுதியுள்ளார். எங்கிட்ட மோதாதே, போடா போடா புண்ணாக்கு, குயில்பாட்டு வந்ததென்ன இளமானே போன்றவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

கவிஞர் பொன்னடியான்
பிறப்புபொன்னடியான்
04-06-1940
இந்தியா தமிழ்நாடு, இந்தியா
பணிகவிஞர், பாடலாசிரியர்

எழுதிய நூல்கள்

தொகு
  • பனிமலர்
  • பொன்னடியான் கவிதைகள்
  • ஒரு கைதியின் பாடல்
  • ஓர் இதயத்தின் ஏக்கம் (பாவியம்)
  • பறக்கத் தெரியாத பட்டாம்பூச்சிகள்
  • நினைவலைகளில் பாவேந்தர்
  • எங்கள் நினைவில் புரட்சிக்கவிஞர்
  • அரங்கேறி வருகின்ற அன்னப் பறவைகள்
  • பொன்னடி பதில்கள்

பெற்ற விருதுகள்

தொகு
  • உனெசுகோ விருது--1969
  • புதுமைக் கவிஞர் விருது--1989 மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேல் வழங்கியது.
  • பாரதிதாசன் விருது ---1990இல் தமிழக அரசு வழங்கியது.
  • கலைமாமணி விருது --2003இல் தமிழக அரசு வழங்கியது.[2]
  • பாரதியார் விருது --2015இல் தமிழக அரசு வழங்கியது.

திரைப்படப் பட்டியல்

தொகு
  1. 1988- ஒருவர் வாழும் ஆலயம்
  2. 1988- சொல்ல துடிக்குது மனசு
  3. 1989- ராஜாதி ராஜா
  4. 1990- பாட்டுக்கு நான் அடிமை
  5. 1991- என் ராசாவின் மனசிலே
  6. 1992- சிங்கார வேலன்
  7. 1993- மணிக்குயில்
  8. 1993- அரண்மனைக்கிளி
  9. 1994- அமைதிப்படை
  10. 1995- எல்லாமே என் ராசாதான்
  11. 1998- கும்பகோணம் கோபாலு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "பொன்னடியான் நேர்காணல்". நக்கீரன் நாளிதழ். Archived from the original on 2010-12-18. பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
  2. கவிஞர் பொன்னடியான்-தமிழ் எழுத்தாளர்கள் இணையதளம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னடியான்&oldid=3816509" இலிருந்து மீள்விக்கப்பட்டது