ஆர். கே. (நடிகர்)
ஆர். கே (ராதாகிருஷ்ணன் சிதம்பரம்) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் ஒரு நடிகர் ஆவார். இவர் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு முக்கிய தொழிலதிபராக இருந்தார், "வெல்கம் சிட்டி" என்ற மணை வணிக நிறுவனத்தை நடத்திவந்தார்.[1]
ஆர் கே | |
---|---|
பிறப்பு | 3 பெப்ரவரி 1959 இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, காரைக்குடி, |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1989-2017 |
தொழில்
தொகுவில்லு பாட்டுக்காரன் (1992), பொய் (2006), தூண்டில் (2008) போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவர் பிறகு, சிந்தாமணி கொல கேஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுஆக்கமான எல்லாம் அவன் செயல் (2008) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார்.[2] இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று, சராசரி வசூலையும் ஈட்டியது.[3][4] வணிகரீதியாக சிறப்பாக வெற்றிபெறாத அழகர் மலை (2009), என் வழி தனி வழி (2014), வைகை எக்ஸ்பிரஸ் (2017) போன்ற படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார், இடையில் இவர் அவன் இவன் (2011), பாயும் புலி (2015) போன்ற படங்களில் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்தார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1989 | வெற்றி விழா | கும்பல் உளவாளி | |
1992 | வில்லுப்பாட்டுக்காரன் | காவல் ஆய்வாளர் | |
1993 | மணிக்குயில் | முத்துவேலுவின் நண்பர் | |
தங்கக்கிளி | |||
1994 | செவத்த பொண்ணு | சுடலைமணியின் நண்பர் | |
1996 | கட்டபஞ்சாயத்து | சிதம்பரம் | |
1997 | நாட்டுப்புற நாயகன் | மருத்துவர் | |
2006 | பொய் | ||
2008 | தூண்டில் | சூம் | |
வாழ்த்துகள் | வெற்றிச்செல்வன் செல்வநாயகம் | ||
எல்லாம் அவன் செயல் | லட்சுமண் கிருஷ்ணா | ||
2009 | மஞ்சள் வெயில் | ராஜேஷ் | |
அழகர் மலை | புகாசெந்தி | ||
2011 | அவன் இவன் | மாட்டு கடத்தல்காரன் | |
புலிவேசம் | முனியன் | ||
2014 | ஜில்லா | மகாலட்சுமியின் மாமனார் | |
2015 | என் வழி தனி வழி | வெற்றிச்செல்வன் | |
பாயும் புலி | அமைச்சர் சிங்கராசு | ||
புலன் விசாரணை 2 | ராகேஷ் கேதன் | ||
2017 | வைகை எக்ஸ்பிரஸ் | ஷராபுதீன் ரஹ்மான் |
குறிப்புகள்
தொகு- ↑ "'For Passion, not for money' - Actor RK". Kollywood Today. 2008-11-23. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
- ↑ "Kollywood Movie Actor R K Biography, News, Photos, Videos". nettv4u.
- ↑ "Review: Ellam Avan Seyal". www.rediff.com.
- ↑ "Winning point -- Ellam Avan Seyal". 5 December 2008 – via www.thehindu.com.