நாட்டுப்புற நாயகன்

ராம நாராயணன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நாட்டுப்புற நாயகன் (Nattupura Nayagan), ராம நாராயணன் இயக்கி, 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். செல்வா, ஸ்வாதி மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த இப்படம், 4 ஜூலை 1997 ஆம் தேதி வெளிவந்தது.[1][2][3][4]

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்கம்

தொகு

கிராமத்தை சார்ந்த கரகாட்ட குழுவின் முக்கிய வித்வான் அல்லிமுத்து (செல்வா). லண்டனில் படித்த ரஞ்சனி (ஸ்வாதி) தனது கிராமத்திற்கு திரும்புகிறாள். அவள் பணக்கார பண்ணையாரின் மகளாவாள். அதிக வேறுபாடுகள் இருந்தாலும், அல்லிமுத்துவும் ரஞ்சனியும் காதலில் விழிக்கிறார்கள்.

அவ்வாறாக ஒரு முறை, டெல்லியில் வாசிக்கும் பொழுது பிரித்தானிய பெண் ஒருத்தியை சந்திக்கிறான் அல்லிமுத்து. ரஞ்சனியை புறக்கணித்து, அந்த பிரித்தானிய பெண்ணுடன் அதிக நேரம் அல்லிமுத்து செலவிடுவதால், மனமுடைந்து போகிறாள் ரஞ்சனி. மேலும் அல்லிமுத்து ரஞ்சனியை காதல் செய்யவில்லை என்று கூறி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுகிறான் அல்லிமுத்து. டெல்லியில் நடந்தது என்னவென்று அந்த பிரித்தானிய பெண் ரஞ்சனியிடம் கூறுகிறாள்.

டெல்லியில் கரகாட்டம் சொல்லிக்கொடுக்கும் பொழுது ரத்தத்துடன் இருமிய அல்லிமுத்துவை மருத்துவர்கள் சோதனை செய்து, ரத்தப் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்தனர். அதை ரஞ்சனியிடமிருந்து மறைக்க முடிவு செய்து, ரஞ்சனி வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டான் அல்லிமுத்து.

பின்னர், லண்டனில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அல்லிமுத்து குணமடைந்தானா என்பதே மீதிக் கதையாகும்.

கங்கை அமரன், ஆர். சுந்தர்ராஜன், கஸ்தூரி ராஜா, அகத்தியன், இ.எஸ். மூர்த்தி, ராம நாராயணன் எழுதிய பாடல்களுக்கு, எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்தார்.

  1. ஆணையிடு - மலேசியா வாசுதேவன்
  2. ஆறுரு வீதியிலே - யுகேந்திரன், தேவி
  3. தூ தூ துபிதூ - அனுபமா
  4. நேத்து புடிச்ச - கே. எஸ். சித்ரா, சுரேஷ் பீட்டர்ஸ்
  5. தேவர் பொறந்த - டி. எல். மகராஜன், தேவி
  6. வெத்தல வெத்தல - மனோ, சுவர்ணலதா

படக்குழுவினர்

தொகு

இயக்கம்/திரைக்கதை - ராம நாராயணன்

தயாரிப்பு - ராம சுப்பையா, கருமாரி கந்தசாமி, ஜே. துரை

வசனம் - புகழ்மணி

ஒளிப்பதிவு - பேபி பிலிப்ஸ்

தொகுப்பு - பாபு ராஜ்

மேற்கோள்கள்

தொகு
  1. "spicyonion.com".
  2. "www.jointscene.com". Archived from the original on 2010-12-23. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "www.cinesouth.com". Archived from the original on 2010-12-25. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "www.indolink.com". Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுப்புற_நாயகன்&oldid=3925278" இலிருந்து மீள்விக்கப்பட்டது