அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)

தமிழ் திரைப்பட இயக்குனர்

அகத்தியன் (Agathiyan) (About this soundஒலிப்பு ) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.

அகத்தியன்
Director Agathiyan and Ameer at Mooch Movie Audio Launch Event (cropped).jpg
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991-2011
வாழ்க்கைத்
துணை
ராதா (2016இல் இறப்பு)[1]
பிள்ளைகள்விஜயலட்சுமி,
நிரஞ்சனா,
கார்த்திகா

வாழ்க்கை வரலாறுதொகு

இவரது இயற்பெயர் கருணாநிதி ஆகும். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி ஆகும். இவர் இராதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜயலட்சுமி, நிரஞ்சனா, கார்த்திகா என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் விஜயலட்சுமி 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்தொகு

திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்தொகு

  • சந்தோஷம்

மேற்கோள்கள்தொகு

  1. "இயக்குனர் அகத்தியனின் மனைவி காலமானார்".புதிய தலைமுறை (21 அக்டோபர், 2016)
  2. "அஜித்துக்கு அகத்தியன் எழுப்பிய 'காதல் கோட்டை'! - 24 ஆண்டுகளாகியும் அசைக்கமுடியாத கோட்டை!". Hindu Tamil Thisai. 2021-11-02 அன்று பார்க்கப்பட்டது.