வாலிப ராஜா

2016 தமிழ்த் திரைப்படம்

வாலிப ராஜா (Vaaliba Raja) 2016இல் வெளிவந்தத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். சாய் கோகுல் ராம்நாத், தயாரிப்பு முரளி. இப்படத்தில் சேது, விசாகா சிங் மற்றும் நுஷ்ராத் பரூச்சா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சந்தானம் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1] இப்படத்தின் தயாரிப்பு சூன் 2013 இல் தொடங்கி மார்ச் 25, 2016 அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து மிகவும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது.[2]

வாலிப ராஜா
சுவரொட்டி
இயக்கம்சாய் கோகுல் ராம்நாத்
தயாரிப்புஎச். முரளி
கதைசாய் கோகுல் ராம்நாத்
கனேஷ் ராஜ்
இசைராதன்
நடிப்புசேது
சந்தானம்
விசாகா சிங்
நுஷ்ராத் பரூச்சா
ஒளிப்பதிவுலோகனாதன் சீனிவாசன்
படத்தொகுப்புசத்யராஜ் நடராஜன்
கலையகம்வன்க்ஸ் விஷன்
வெளியீடு25 மார்ச் 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

2013இல் வெளியான சாய் கோகுல் ராம்நாத் இயக்கிய மற்றொரு நகைச்சுவைத் திரைப்படமான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுவதாக சூன் 2013இல் தகவல்கள் வெளியானது சாய் கோகுல் ராம்நாத் இயக்கிய "ஷிவானி என்ற மற்றொருத் திரைப்படம் வெளியாகவில்லை.இப்படத்தில் சேது, விசாகா சிங் மற்றும் நுஷ்ராத் பரூச்சா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சந்தானம் மனநல மருத்துவர் பாத்திரத்தில் நடித்திருந்தார் [3] 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தப் படம் தொடங்கியது, இந்தி நடிகை நுஷ்ராத் பரூச்சா 2013 ஆம் ஆண்டின் மத்தியில் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.[4][5] 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் படப்பிடிப்பு முடிவடைந்தது, தயாரிப்பாளர்கள் மே 2014 இல் திரைப்படத்தை வெளியிடும் நோக்கத்தை வெளிப்படுத்தினர், ஆனால் அந்த வெளியீடு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.[6]

ஒலித்தொகுப்பு தொகு

ஒலித்தொகுப்பை ராதன் மேற்கொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சூன் 2014 அன்று பாடல்கள் வெளியிடப்பட்டது.[7][8] ஒலிப்பதிவு கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[9]

வாலிப ராஜா
ஒலித்தொகுப்பு
ராதன்
வெளியீடு2014
ஒலிப்பதிவு2014
ஸ்டுடியோதிரைப்பட ஒலித்தொகுப்பு
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்ராதன்
ராதன் காலவரிசை
அந்தால ராக்‌ஷஷி
(2012)
வாலிப ராஜா
(2014)
எவடே சுப்ரமண்யம்
(2015)
 • என்னமோ பன்னுர - ராஜன் ராமீ
 • ஒரு நாள் - போபோ ஷாஷி . வேனா கண்டசாலா
 • வா மதி - பிளேஸ் , முகேஷ்
 • நடுக்கடல - கானா பாலா

வெளியீடு தொகு

2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில்படப்பிடிப்பு முடிவடைந்தாலும், தயாரிப்பாளர்கள் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வரை பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படாதது, பல தேதிகள் அறிவிக்கப்பட்டு, இறுதியாக அது நவம்பர் 27, 2015 இல் வெளியிடப்பட்டது. ஜனவரி 1, 2016 இல் இந்த திரைப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியில் மார்ச் 25, 2016 அன்று இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது, இதனால் 3 ஆண்டுகளாக தாமதமானது.[10][11] இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றது.[12]

குறிப்புகள் தொகு

 1. "Comedy trio is back with `Valiba Raja`!". sify.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
 2. "'Laddu' cast in Vaaliba Raja — The New Indian Express". newindianexpress.com. 
 3. "'Laddu' cast in Vaaliba Raja". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/Laddu-cast-in-Vaaliba-Raja/2013/06/13/article1631821.ece. 
 4. "Santhanam is 'Vaaliba Raja'!" (in en). Sify இம் மூலத்தில் இருந்து 2015-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151124153410/http://www.sify.com/movies/santhanam-is-vaaliba-raja-news-tamil-nkqkdNdaeaisi.html. 
 5. "Nushrat Bharucha debuts in Tamil cinema" (in en). Sify இம் மூலத்தில் இருந்து 2015-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151124164939/http://www.sify.com/movies/nushrat-bharucha-debuts-in-tamil-cinema-news-national-nixtumfebhesi.html. 
 6. IANS. "Comedy is central" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/comedy-is-central/article5893293.ece. 
 7. "Kamal Haasan upset with Santhanam?" (in en). Sify இம் மூலத்தில் இருந்து 2014-06-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140628173545/http://www.sify.com/movies/kamal-haasan-upset-with-santhanam-news-tamil-og2kn2dfjjdee.html. 
 8. IANS. "Kamal Haasan to unveil ‘Valiba Raja’ music" (in en). The Hindu. http://www.thehindu.com/entertainment/kamal-haasan-to-unveil-valiba-raja-music/article6136469.ece. 
 9. "Valeba Raja (aka) Vaaliba Raja songs review". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-04.
 10. Ramanujam, Srinivasa. "Real-life doctor plays patient" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/reallife-doctor-plays-patient/article7652751.ece. 
 11. http://www.indiaglitz.com/santhanam-sethu-vishaka-singh-vaaliba-raja-to-hit-the-screens-on-sep-24-tamil-news-142080.html
 12. https://www.facebook.com/TamilTvChanExp/posts/1207250122686286

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிப_ராஜா&oldid=3670638" இலிருந்து மீள்விக்கப்பட்டது