அஷ்வின் ராஜா

இந்திய நடிகர்
(அஸ்வின் ராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஷ்வின் ராஜா (Ashvin Raja) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் மொழி படங்களில் தோன்றியுள்ளார். [2] இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் மறைந்த வி. சுவாமிநாதனின் மகன் ஆவார்.

அஷ்வின் ராஜா
பிறப்புஅஸ்வின் சுவாமிநாதன்
21 நவம்பர் 1989 (1989-11-21) (அகவை 34)[1]
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
மற்ற பெயர்கள்Raja
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது வரை
பெற்றோர்வெங்கட்ராமன் சுவாமிநாதன்
வாழ்க்கைத்
துணை
Vidyashree (தி. 2020)

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அஸ்வின் ராஜாவின் தந்தை திரைப்பட தயாரிப்பாளரான சுவாமிநாதன் ஆவார். அவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தார். [3] அவர் தயாரித்த சில திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார. வி. சுவாமிநாதன் வி. கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக 10. ஆகத்து, 2020 அன்று காலமானார். அவருக்கு கொரோனா வைரசு தொற்று கண்டறியப்பட்ட பின்னர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கோவிட் -19 காரணமாக இறந்த தமிழ் திரையுலகில் முதல் நபர் அவர் ஆவார். [4] அஸ்வின், தனது காதலி வித்யாஸ்ரீயை 24 சூன் 2020 அன்று திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு மருத்துவர் ஆவார். [5]

தொழில் தொகு

ராஜேசின் நகைச்சுவைத் திரைப்படமான பாஸ் என்கிற பாஸ்கரன் (2010) படத்தில் மாணவர் பால்பாண்டி பாத்திரத்தில் அஸ்வின் அறிமுகமானார். [6] விக்ரம் பிரபு மற்றும் தம்பி ராமையா ஆகியோருடன் யானை மேய்ப்பராக பிரபு சாலமனின் கும்கி (2012) படத்தில் நடித்தது திரைப்பட விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார், மேலும் படப்பிடிப்புக்காக அறுபத்தாறு நாட்கள் நாட்களை ஒதுக்கி இருந்தார். கும்கியின் வெற்றி இவரை "கும்கி அஸ்வின்" என்று குறிப்பிட காரணமாயிற்று. [7] [8] 2013 ஆம் ஆண்டில், இவர் சிறிய வேடங்களில் நடித்தார், குறிப்பாக தில்லு முல்லு மற்றும் தனுசுடன் நய்யாண்டி ஆகிய படங்களில் நடித்தார். [9] மேலும் திகில் படமான மகாராணி கோட்டை (2015), நகைச்சுவை படமான நாரதன் (2016) போன்ற படங்களில் நடித்தார். எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க தயங்க மாட்டேன் என்று இவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். [10] 2019 ஆம் ஆண்டில், ஜோதிகாவின் ஜாக்பாட் மற்றும் ஹரீஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்தார் . [11]

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் பால்பாண்டி
2011 எத்தன்
2011 வந்தான் வென்றான் சிங்கமுத்துவின் மருமகன்
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள்
2012 கும்கி உண்டியல்
2013 சில்லுனு ஒரு சந்திப்பு
2013 தில்லு முல்லு பசுபதியின் நண்பர்
2013 நய்யாண்டி சின்னா வந்துவின் நண்பர்
2014 நெடுஞ்சாலை சூஜி
2014 என்னமோ நடக்குது ஓ.சி.குமார்
2015 காவல்
2015 மகாராணி கோட்டை
2015 சகலகலா வல்லவன் சக்தியின் நண்பர்
2015 சண்டி வீரன்
2015 ஜிகினா
2015 ஈட்டி புகழின் நண்பர்
2016 கணிதன் திருப்பதி
2016 வாலிப ராஜா
2016 நாரதன் பழம்
2016 வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
2016 ஜம்புலிங்கம் 3 டி மனஸ்தான்
2016 உச்சத்துல சிவா குற்றம் சாட்டப்பட்டவர்
2016 தொடரி சரக்கரை தொழிலாளி
2016 விருமாண்டிக்கும் சிவானாண்டிக்கும் வின்சென்ட் செல்வா
2016 அச்சமின்றி
2017 மொட்ட சிவா கெட்ட சிவா கேமரா மேன் அஸ்வின்
2017 சரவணன் இருக்க பயமேன் சரவணனின் நண்பர்
2018 தமிழ் படம் 2 காவலர்
2019 தர்மபிரபு சிறப்புத் தோற்றம்
2019 ஜாக்பாட் மனஸ்தானின் உதவியாளர்
2019 தனுசு ராசி நேயர்களே ஜோசப்
2019 சென்னை 2 பாங்காக் சிறப்பு தோற்றம்
2021 காடன்

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்வின்_ராஜா&oldid=3180483" இருந்து மீள்விக்கப்பட்டது