அச்சமின்றி (திரைப்படம்)

2016 ஆண்டைய திரைப்படம்

அச்சமின்றி (achamindri) 2016 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். "என்னமோ நடக்குது" புகழ் ராஜபாண்டி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருதி டாங்கே, வித்யா பிரதீப், சரண்யா பொன்வண்ணன், ராதா ரவி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ. ராதாகிருஷ்ணன் இத்திரைப்படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார். பிரேம்ஜி அமரன் இத்திரைப்படத்திற்கான இசையை அமைத்துள்ளார் [1][2].இவ்வியக்குனரின் 2014 ல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற "என்னமோ நடக்குது" திரைப்படத்தில் நடித்த பலரே இத்திரைப்படத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வி. வினோத் குமார் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

அச்சமின்றி
இயக்கம்பி. ராஜபாண்டி
தயாரிப்புவி. வினோத் குமார்
இசைஇசை இளவல் பிரேம்ஜி அமரன்
நடிப்புவிஜய் வசந்த்
ஸ்ருதி டாங்கே
சமுத்திரக்கனி
வித்யா பிரதீப்
சரண்யா பொன்வண்ணன்
ராதா ரவி
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புப்ரவீன் கே. எல்.
கலையகம்ரிபிள் வீ ரக்காட்ஸ்
வெளியீடு30 டிசம்பர் 2016
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

இப்படத்தின் கதை 4 நபர்களிடைப்பட்டது. பிற்பொக்கட் சக்தி (விஜய் வசந்த்) நடுத்தர குடும்பப் பெண்ணான மலர்விழியை (ஸ்ருதி டாங்கே) விரும்புகிறான். ஒரு நேர்மையான காவல் அதிகாரியான சத்யாவின் (சமுத்திரகனி) உறவினரே ஸ்ருதி (வித்யா பிரதீப்). இவர்களுள் சத்யா, சக்தி, மலர்விழி ஆகிய மூவரும் ஒரு குழுக்களால் துரத்த படுகிறார்கள். சத்தியா அவனுடைய நண்பனும் காவல் அதிகாரியுமான சரவணனினாலும் (பரத் ரெட்டி) மேலும் சத்யா ஸ்ருதியின் மரணத்தில் உள்ள மர்மங்களையும் வெளிக்கொணர முயலுகிறான். ஒரு தாதாவிடம் காசுப்பையை திருடும் சக்தி, கல்வி அமைச்சரின் உதவியாளரிடம் இருந்து தப்பித்து வரும் மலர்விழி. படத்தின் இரண்டாம் பாதியில் இவர்கள் ஏன் துரத்தபடுகிறார்கள் என்பதற்கான முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. கல்விச்சமுகத்தில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையில் கொண்டு கதை தயாரிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Filmibeat/Timesofindia (2016-05-13). "Achamindri Tamil Movie". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
  2. Triple V Records (2016-05-14). "Achamindri Official Trailer". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சமின்றி_(திரைப்படம்)&oldid=4143249" இலிருந்து மீள்விக்கப்பட்டது