தமிழ் படம் 2 (திரைப்படம்)

சி. எஸ். அமுதனின் இயக்கத்தில் ஜுலை, 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

தமிழ் படம் 2.0 (Thamizh Padam 2.0 ), சி. எஸ். அமுதனின் இயக்கத்தில், எஸ். சசிகாந்த்தின் தயாரிப்பில் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் 2010இல் வெளியான தமிழ் படம் (திரைப்படம்)ன் தொடாராகும், இத்திரைப்படத்தில் சிவா, திசா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவிலும், கண்ணனின் இசையிலும், டி. எஸ். சுரேசின் படத்தொகுப்பிலும், சூலை 2018இல் வெளியாகியது. இத்திரைப்படத்தின் டீசர் சூன் 1ஆம் திகதியன்று வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது.

'தமிழ் படம் 2'
தமிழ் படம் 2.0
இயக்கம்சி. எஸ். அமுதன்
தயாரிப்புஎஸ். சசிகாந்த்
இசைகண்ணன்
நடிப்பு
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புடி. எஸ். சுரேஸ்
கலையகம்ஒய் நாட் ஸ்டூடியோஸ்
வெளியீடுஜுலை 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம், இதுவரை அண்மையில் வெளியான படங்களை அல்லது நடைபெற்ற முக்கிய சம்பவங்களை கலாய்க்கும் படியான கதைக் கட்டமைப்பை கொண்டுள்ளது.

நடிகர்கள் தொகு

படப்பணிகள் தொகு

தமிழ் படத்தினைத் தொடர்ந்து, தமிழ் படம் 2.0 என்று அதன் தொடர்ச்சியை இயக்கினார் சி. எஸ். அமுதன். இப்படத்தில் சிவா , ஒய் நாட் ஸ்டூடியோசைச் சார்ந்த இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். சசிகாந்த் ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2] திசம்பர் 8, 2017இல் இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது, அதன்பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது.[3]

இசை தொகு

இத்திரைப்படத்திற்கு கண்ணன் இசையமைத்து உள்ளார்.

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு