வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் (Velainu Vandhutta Vellaikaaran) 2016 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், எழில் இயக்கத்தில், சி. சத்யா இசையில், விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம், எழில் மற்றும் ராஜன் நட்ராஜின் எழில்மாறன் புரொடக்சன் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியான நகைச்சுவையான தமிழ் திரைப்படம்.[1]
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் | |
---|---|
இயக்கம் | எழில் |
தயாரிப்பு | விஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜ் எழில் |
கதை | எழில் |
இசை | சி. சத்யா |
நடிப்பு | விஷ்ணு விஷால் நிக்கி கல்ரானி சூரி ரோபோ சங்கர் ரவி மரியா ஆடுகளம் நரேன் ராஜேந்திரன் |
ஒளிப்பதிவு | சக்தி |
படத்தொகுப்பு | ஆனந்த லிங்ககுமார் |
கலையகம் | விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எழில்மாறன் புரொடக்சன் |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 3 சூன் 2016 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுமுருகன் (விஷ்ணு விஷால்) சட்டமன்ற உறுப்பினர் ஜாக்கெட் ஜானகிராமனின் (ரோபோ சங்கர்) நண்பன். அவ்வூரில் உணவகம் நடத்திவருபவரின் மகள் அர்ச்சனா (நிக்கி கல்ராணி). காவல்துறையில் ஆய்வாளராக சேர வேண்டும் என்பது அர்ச்சனாவின் லட்சியம். தன் மகளுக்குக் காவல்துறையில் வேலை பெற்றுத்தர முருகனின் உதவியை நாடுகிறார் அர்ச்சனாவின் தந்தை. அவரிடம் 10 இலட்சம் பணத்தை லஞ்சமாகப் பெற்று ஜானகிராமனிடம் கொடுத்து அர்ச்சனாவிற்கு வேலைவாங்கித் தருவதாக உறுதியளிக்கிறான் முருகன். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும் அமைச்சர் சண்முகசுந்தரத்தைக் காணச் செல்லும் அவரின் நம்பிக்கைக்குரிய ஜானகிராமனிடம் தன்னிடமுள்ள 500 கோடி பணத்தை வைத்துள்ள இடத்தைத் தெரிவித்துவிட்டு இறக்கிறார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் ஜானகிராமனிடம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள, அவனைத் துரத்திவருகிறான் பூதம் (ரவி மரியா). அப்போது விபத்தில் சிக்கும் ஜானகிராமனுக்குத் தலையில் அடிபட்டதில் அனைத்தையும் மறந்து, 10 வயது குழந்தை போல நடந்துகொள்கிறான். அர்ச்சனா தன் திறமையால் காவல் துணை ஆய்வாளராகத் தேர்வாகிறாள். தன் தந்தையிடம் வாங்கிய பணத்தை முருகனிடம் திருப்பிக் கேட்கிறாள். முருகன் அதை ஜானகிராமனிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறான். இவை மட்டுமின்றி முருகனின் நண்பனான ஜானகிராமனுக்காக சக்கரை (சூரி) தனக்கு நிச்சயமான பெண்ணை விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததாக நடித்ததில், அவனுடைய திருமணம் நின்றுபோகிறது.
ஜானகிராமனுக்கு பழைய நினைவுகள் திரும்பியதா? 500 கோடி ரூபாய் பணம் என்னவானது? அர்ச்சனாவிற்கு அவளின் பணம் கிடைத்ததா? சக்கரையின் திருமணம் நடந்ததா? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
தொகு- விஷ்ணு விஷால் - முருகன்
- நிக்கி கல்ராணி - அர்ச்சனா
- சூரி - சக்கரை
- ரோபோ சங்கர் - ஜாக்கெட் ஜானகிராமன்
- ஆடுகளம் நரேன் - மருதமுத்து
- ரவி மரியா - பூதம்
- ராசேந்திரன் - கோஸ்ட் மொட்டை குரு
- ஞானவேல் - அர்ச்சனாவின் தந்தை
- விட்டல் - சண்முகசுந்தரம்
- வையாபுரி - வசந்தகுமார்
- கிருஷ்ணமுர்த்தி - சக்கரையின் மாமா
- வெங்கட் - டி.ஜி.பி. சதாசிவம்
- சாமிநாதன்
- சோனியா - செங்கமலம்
- ரேஷ்மா பசுபுலேட்டி - புஷ்பா
- சரவண சுப்பையா
- அஷ்வின் ராஜா
- பாவா லட்சுமணன்
- மாறன்
- நிகேஷ் ராம்
இசை
தொகுபடத்தின் இசையமைப்பாளர் சத்யா.[2] அனைத்துப் பாடல்களும் எழுதி இசையமைத்தவர் யுகபாரதி.
பாடல் வரிசை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "ஆரவல்லி" | வைக்கம் விஜயலட்சுமி, மகாலிங்கம் | 4:08 | |||||||
2. | "குத்தீட்டி" | சத்ய பிரகாஷ் | 4:13 | |||||||
3. | "பப்பரமிட்டாய்" | ஸ்ரீராமச்சந்திர மைனம்படி | 3:54 | |||||||
4. | "ஐயோ பாவம்" | ஜெயமூர்த்தி | 4:00 | |||||||
5. | "குத்தீட்டி" (கரோகி) | 4:13 | ||||||||
6. | "ஐயோ பாவம்" (கரோகி) | 4:00 | ||||||||
மொத்த நீளம்: |
24:28 |
மறுஆக்கம்
தொகுஇப்படம் தெலுங்கில் சில்லி பெல்லோஸ் என்று மறுஆக்கம் செய்யப்பட்டது.[3]