சீனிவாசன் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனராவார். 2013 சனவரி 13 இல் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார்.[2] இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

சீனிவாசன்
பிறப்பு இந்தியா மதுரை, தமிழ்நாடு, இந்தியா

[1]

தொழில் நடிகர், அக்குபஞ்சர் மருத்துவர்
நடிப்புக் காலம் 2010-தற்போது

கைது தொகு

2012 இல் ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார். இரண்டு வாரங்களின் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார்.[3]

2013 ஏப்ரல் 26 இல் மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. இதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகவிருந்தது.[4]

2018 டிசம்பர் 7 இல் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.[5]

2018 டிசம்பர் 13 இல் பவர் ஸ்டாரை கடத்தியது யார் என தெரிந்தது! - திடுக்கிட வைக்கும் பின்னணி![6]

திரைப்பட விபரம் தொகு

ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2010 உனக்காக ஒரு கவிதை
2010 மண்டபம்
2010 நீதானா அவன்
2011 லத்திக்கா
2011 ஆனந்த தொல்லை
2012 நானே வருவேன்
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா
2013 [7]
2013 யா யா [8]
2013 அழகன் அழகி
2013 சும்மா நச்சின்னு இருக்கு [9]
2014 கோலி சோடா கௌரவத் தோற்றம்

சான்றுகள் தொகு

  1. "Power Star goes back to Madurai". Archived from the original on 21 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Santhanam to eat laddu with Power Star Dr. Srinivasan". 10 July 2012. Archived from the original on 23 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 22 ஜனவரி 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Power Star breathes free!". BehindWoods. 28 September 2012. http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-04/power-star-srinivasan-powerstar-srinivasan-28-09-12.html. பார்த்த நாள்: 11 December 2012. 
  4. "‘Power Star’ held for cheating". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/power-star-held-for-cheating/article4656786.ece. பார்த்த நாள்: 26 April 2013. 
  5. "‘Power Star’ gone missing wife filed complaint". இந்நேரம்.காம் இம் மூலத்தில் இருந்து 11 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181211034330/http://www.inneram.com/cinema/19074-actor-missing-wife-filed-case.html. பார்த்த நாள்: 7 Dec 2018. 
  6. "‘Power Star’ kidnap drama". இந்நேரம்.காம் இம் மூலத்தில் இருந்து 17 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181217113336/http://www.inneram.com/cinema/19139-power-star-kidnape-drama.html. பார்த்த நாள்: 13 Dec 2018. 
  7. http://behindwoods.com/tamil-movie-news-1/dec-12-03/shankar-i-16-12-12.html
  8. TNN (Jan 17, 2013). "Powerstar joins Shiva, Santhanam in Ya Ya". Indiatimes. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Powerstar-joins-Shiva-Santhanam-in-Ya-Ya/articleshow/18060531.cms. பார்த்த நாள்: 12 March 2013. 
  9. "Poor boy loves a rich girl, again". Times of India. பார்க்கப்பட்ட நாள் 24 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனிவாசன்_(நடிகர்)&oldid=3554867" இலிருந்து மீள்விக்கப்பட்டது