பிறகு (திரைப்படம்)
பிறகு (Piragu) என். ஜீவா இயக்கத்தில் 2007இல் வெளிவந்த குற்ற பின்புலம் சார்ந்த தமிழ் திரைப்படமாகும். இதில் அம்சவர்தன், கீர்த்தி சாவ்லா மற்றும் சுனிதா வர்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர், இவர்களுடன் வடிவேலு, தண்டபாணி, மலேசியா வாசுதேவன், சபிதா ஆனந்த் மற்றும் எமே போன்றவர்களும் நடித்திருந்தனர். ஆர். சரவணா மற்றும் எஸ். கே. சந்திரசேகர் இப்படத்தைத் தயரித்திருந்தனர். சிறீகாந்து தேவா இசையில் 2007 செப்டம்பர் 21 அன்று வெளிவந்தது.[1][2][3]
பிறகு | |
---|---|
இயக்கம் | என். ஜீவா |
தயாரிப்பு | ஆர். சரவணா எஸ். கே. சந்திரசேகர் |
கதை | என். ஜீவா |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஏ. காசி விஷ்வா |
படத்தொகுப்பு | ஏ. பி. மணிவண்ணன் |
கலையகம் | டிரீம்லான்ட் மூவீஸ் |
வெளியீடு | செப்டம்பர் 21, 2007 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுசத்யா (ஹம்சவர்தன்) தனது கிராமத்தில் வசித்து வரும் நாடக இயக்குனர் ஆவான், மரியாதைக்குரிய கூத்துக் கலைஞரான இவரது தந்தை ராமையா (மலேசியா வாசுதேவன்), மற்றும் அவரது தாயாருடன் வாழ்ந்து வருகிறான். கிராமத்தில் உள்ள அழகான பெண்ணான துளசி (கீர்த்தி சாவ்லா), சத்யாவின் உறவினர், அவளுடைய சிறு வயதிலிருந்தே சத்யாவின் மீது காதல் உள்ளது. சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்பதற்காக சத்யா சென்னைக்கு வருகிறான். அங்கே உடைமைகளை இழந்து விடுகிறான். தற்போது அவனிடம் பணம் ஏதுமில்லை, சிறு விசையுந்து பழுது நீக்கும் கடை உரிமையாளரான சோபியா (சுனிதா வர்மா) அவனுக்கு உணவளித்து அங்கேயே தங்க வைக்கிறாள். இதையொட்டி, சத்யா ஒரு திரைப்படத் தயாரிப்பாளரைத் தேடுவதைத் தவிர்த்து சோபியாவிற்கு உதவுகிறான். பின்னர், சோபியா சத்யாவைக் காதலிக்கிறாள். கடைசியாக, சத்யாவின் கதையால் ஈர்க்கப்பட்ட ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் அவனது கதையைத் திரைப்படமாக எடுக்க நினைக்கிறார். அதே நாளில், உள்ளூர் போக்கிரி கும்பலால் தாக்கப்படும் டேவிட்டை (கராத்தே ராஜா) சத்யா காப்பாற்றுகிறான். அக்கும்பலின் தலைவனான அந்தோணி (தண்டபாணி) சத்யாவை எதிரிக் கும்பலிடமிருந்து தனது சகோதரனை காப்பாற்ற வேண்டுகிறான். அந்தோனியின் திட்டத்தை சத்யா நிராகரித்து அவனது நடவடிக்கைகளைத் தவறாகப் பேசுகிறார். அதன்பிறகு, சத்யனின் பெற்றோரும் துளசியும் சென்னைக்கு வருகிறார்கள்; அவர்கள் சோபியாவின் வீட்டில் தங்குகின்றனர். இதற்கிடையில், அந்தோணி தனது எதிரி கும்பல் தலைவன் அன்னபூரணியுடன் (ஈமே) சமாதானம் செய்து கொண்டு சத்யாவை கொல்ல விரும்புகிறான்.. அடுத்து என்ன நடக்கிறது என்பதை மீதிக்கதை சொல்கிறது.
நடிகர்கள்
தொகு- அம்சவர்தன் - சத்யா
- கீர்த்தி சாவ்லா - துளசி
- சுனிதா வர்மா - சோபியா
- வடிவேலு (நடிகர்) - சமரசம்
- தண்டபாணி - அந்தோனி
- மலேசியா வாசுதேவன் - ராமையா
- சபிதா ஆனந்த் - சத்யாவின் தாயார்
- எமே - அன்னபூரணி
- கராதே ராஜா - டேவிட்
- கானா பாலா
- சித்ரா லஷ்மனண் -தயாரிப்பாளர்
- கிரேன் மனோகர்
- லலிதா பாட்டி - சத்யாவின் பாட்டி
- அஞசலி
- கிங்காங்
- அம்பானி சங்கர்
- செல்லதுரை
- போண்டா மணி
- தம்பி ராமையா
- வாசு
- சம்பத்
- காளிதாஸ்
- ரவி
- சிவநாராயண மூர்த்தி
- விஜயா கனேஷ்
- முத்துக்காளை
- திடீர் கன்னையா
- மார்த்தாண்டம்
- சுப்புராஜ்
- அமிர்தலிங்கம்
- ராஜ்மோகன்
- வெங்கல் ராவ்
- ரகசியா - குத்தாட்டப் பாடல்
- ராபர்ட் - நடன இயக்குனர் (சிறப்புத் தோற்றம்)
தயாரிப்பு
தொகுகதைக்காகச் சில தியாகங்களைச் செய்ய ஒப்புக்கொண்டு தனது தலையை மொட்டை அடித்து நடித்ததாகவும், இறுதியில் படம் நன்றாக வர வேண்டும் விரும்பியதாகவும் நடிகர் ஹம்சவர்தன் கூறினார்.[4]
ஒலித்தொகுப்பு
தொகுபிறகு | ||||
---|---|---|---|---|
ஒலித்தொகுப்பு
| ||||
வெளியீடு | 2007 | |||
ஒலிப்பதிவு | 2007 | |||
இசைப் பாணி | திரைப்படத்தின் ஒலிப்பதிவு | |||
நீளம் | 32:10 | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஃபைவ் ஸ்டார் ஆடியோ | |||
இசைத் தயாரிப்பாளர் | சிறீகாந்து தேவா | |||
சிறீகாந்து தேவா காலவரிசை | ||||
|
இப்படத்தின் ஒலிப்பதிவை சிறீகாந்து தேவா மேற்கொண்டார். ஆறு பாடல்கள் கொண்ட இப்படத்தின் ஒலித்தொகுப்பு 2007இல் வெளி வந்தது. பாடல்களை நா. முத்துக்குமார், பிறைசூடன், தேவகுமார், முத்துமகன் மற்றும் கானா பாலா ஆகியோர் எழுதியிருந்தனர்.[5] நடிகர் கானா பாலா இப்படத்தில் அனாதை பாலாவாக அறிமுகமாகி "பதினோறு பேர் ஆட்டம்" என்ற பாடலை எழுதி அவரே பாடி நடித்துள்ளார்.[6]
வரிசை | பாடல் | பாடியோர் | நேரம் |
---|---|---|---|
1 | "முதலில் சந்தித்தேன்" | ஹரிஷ் ராகவேந்திரா, மெஹந்தி | 5:40 |
2 | "உன்னைப்போலே பெண்ணை" | ஸ்ரீகாந்த் தேவா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி | 5:32 |
3 | "அம்மா அப்பா" | விஜய் யேசுதாஸ் | 5:28 |
4 | "பதினோறு பேர் ஆட்டம்" | கானா பாலா | 5:21 |
5 | "கிட்டவாடா கிட்டாவாடா" | சுசித்ரா | 5:10 |
6 | "ஆசை தோசை" | அனுராதா ஸ்ரீராம் | 4:59 |
வரவேற்பு
தொகுதிரைப்பட விமர்சகர் மாலினி மன்நாத் எழுதியது: வலுவில்லாத திரைக்கதை மற்றும் கதை சொல்வதில் தடுமாற்றம் ஆகியவை இயக்குநரால் தனது கருத்துக்களை திரைக்கு கொண்டு வர முடியவில்லை", மற்றும் நடிகர் ஹம்ஸவர்தன் திரைக்கதையின் அனைத்து குறைபாடுகளையும் மற்றும் அவரது நலிவுற்ற பாத்திரத்தையும் தனது நடிப்பின் தைரியமாக முன்னேற்றி செல்கிறார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Piragu (2007) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
- ↑ "Piragu (2007)". gomolo.com. Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
- ↑ "Find Tamil Movie Piragu". jointscene.com. Archived from the original on 28 பெப்பிரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2017.
- ↑ "Keen to excel is Hamsavardhan". IndiaGlitz. 2007-03-16. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
- ↑ "Piragu (2007)". mio.to. Archived from the original on 2018-07-22. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
- ↑ http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=pastissues2&BaseHref=TOICH%2F2013%2F02%2F10&ViewMode=GIF&PageLabel=39&EntityId=Ar03900&AppName=2
- ↑ Malini Mannath. "Lackluster, Slipshod: Piragu". siliconeer.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.