பிறைசூடன்

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார்
(பிறைசூடன் (கவிஞர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிறைசூடன் (Piraisoodan, 6 பெப்ரவரி 1956 – 8 அக்டோபர் 2021) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.[2] இவர் 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார்.[3][4] தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார்.[5][6]. இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.[7]

பிறைசூடன்
பிறப்புசந்திரசேகரன்
பெப்ரவரி 6, 1956 (1956-02-06) (அகவை 68)[1]
நன்னிலம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு8 அக்டோபர் 2021(2021-10-08) (அகவை 65)
சென்னை, இந்தியா
பணிநடிகர், கவிஞர்
செயற்பாட்டுக்
காலம்
1980-2021

தொடக்கம்

தொகு

பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஷ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார்.[8] அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார்.

இயற்றிய சில பாடல்கள்

தொகு
வரிசை எண் ஆண்டு திரைப்படம் பாடல் பாடியவர்(கள்) இசையமைப்பாளர் குறிப்புகள்
1 1984 சிறை ராசாத்தி ரோசாப்பூவே கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் ம. சு. விசுவநாதன் முதற்பாடல்
2 1991 கோபுர வாசலிலே காதல் கவிதைகள் படித்திடும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா இளையராஜா
கேளடி ௭ன் பாவையே ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்
நாதம் ௭ழுந்ததடி எஸ். ஜானகி
3 1991 இதயம் இதயமே இதயமே உன் ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா இத்திரைப்படத்தில் மற்ற பாடல்கள் வாலி இயற்றியது

பாடலாசிரியர் பணி

தொகு

1980களில்

தொகு

1990களில்

தொகு
  • 1990- கேளடி கண்மணி
  • 1990- அதிசயப் பிறவி
  • 1990- சிறையில் பூத்த சின்னமலர்
  • 1990- பெரிய வீட்டு பணக்காரன்
  • 1990- பணக்காரன்
  • 1990- ராஜா கைய வச்சா
  • 1991- ஈரமான ரோஜாவே
  • 1991- என் ராசாவின் மனசிலே
  • 1991- கேப்டன் பிரபாகரன்
  • 1991- இதயம்
  • 1991- கோபுர வாசலிலே
  • 1992- உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்
  • 1992- உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
  • 1992- ௭ன்றென்றும் அன்புடன்
  • 1992- அமரன்
  • 1992- நாடோடி பாட்டுக்காரன்
  • 1996- தாயகம்
  • 1996- லக்கி மேன்
  • 1997- ஹரிச்சந்திரா
  • 1997- தம்பி துரை
  • 1998- ௭ங்க ஊரு ராசாத்தி

2000த்தில்

தொகு
  • 2001- ஸ்டார்
  • 2001- சிகாமணி ரமாமணி
  • 2004- மனதில்
  • 2006- அமிர்தம்
  • 2007- அடாவடி
  • 2008- கொடைக்கானல்
  • 2008- சிங்கக்குட்டி

2010களில்

தொகு
  • 2010- உனக்காக ௭ன் காதல்
  • 2011- வட்டப்பாறை
  • 2012- நாச்சியார்புறம்
  • 2012- இளமை ஊஞ்சல்
  • 2012- கஜன்
  • 2013- மாசாணி
  • 2013- உள்ளமெல்லாம் தள்ளாடுதே
  • 2013- ஆர்யா சூர்யா

நடித்த திரைப்படங்கள்

தொகு

வசனம் எழுதியது

தொகு
  • 2011:ஸ்ரீ ராமராஜ்ஜியம்

மறைவு

தொகு

உடல்நலக் குறைவு காரணமாக இவர், சென்னையில் 2021 அக்டோபர் 8 அன்று காலமானார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.nadigarsangam.org/member/piraisoodan/
  2. "Behindwoods : Lyricist Piraisoodan returns for Deva". பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
  3. "கம்பீரக் கவிஞன் பிறைசூடன் - Kungumam Tamil Weekly Magazine". http://kungumam.co.in/newkungumam/VArticalinnerdetail.aspx?id=6054&id1=124&issue=20151221. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "றேடியோஸ்பதி:இளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை". http://www.radiospathy.com/2016/02/blog-post.html?m=1. 
  5. "கவிஞர் பிறைசூடன் மகன் இசையமைப்பாளர் ஆனார்". http://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2014/06/11134100/PoetPiraisutanSonComposerBecame.vpf. 
  6. "மங்கலமான சொற்கள் கொண்ட திரைப்பாடல்களும் இலக்கியமே! பாடலாசிரியர் பிறைசூடன் - Dinamani - Tamil Daily News". http://www.dinamani.com/cinema/article1492103.ece. 
  7. "தமிழ்த் புத்தாண்டு விருதுகள் - 2015" இம் மூலத்தில் இருந்து 2015-05-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150511040014/http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=23403. 
  8. "௭ம் ௭ஸ் வி பெயரில் விருது". http://www.magzter.com/news/219/424/082015/fj2qg. 
  9. "பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார் - தினமணி". 8 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறைசூடன்&oldid=4070631" இலிருந்து மீள்விக்கப்பட்டது