ஆயுதம் (2005 திரைப்படம்)

2005 திரைப்படம்

ஆயுதம் (Aayudham) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். முருகேஸ் இயக்கிய. இப்படத்தில் பிரசாந்த், சினேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். வடிவேலு, சுப்பாராஜூ, ராஜேஷ், ஜனகராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்திற்கு தினா இசையமைத்தார். திரைப்பட விமர்சகர்களிடமிருந்து சராசரி விமர்சனங்களுடன் 14 சனவரி 2005 இல் படம் வெளியானது.[1]

ஆயுதம்
இயக்கம்எம். ஏ. முருகேஷ்
தயாரிப்புசூர்யா ராஜ்குமார்
கதைஎம். ஏ. முருகேஷ்
கமலேஷ்குமார் (உரையாடல்)
இசைதினா
நடிப்புபிரசாந்த்
சினேகா
வடிவேலு (நடிகர்)
சுப்பாராஜூ
ராஜேஷ்
சனகராஜ்
ஒளிப்பதிவுஅரவிந்த் கமலநாதன்
படத்தொகுப்புஏ. கே. சங்கர்
கலையகம்மார்ஸ் என்டர்டெயின்மென்ட் குரூப்
மோஷன் பிக்சர்ஸ் பார்ட்னர்ஸ் இன்டர்நேஷனல்
வெளியீடு14 சனவரி 2005 (2005-01-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

சிவா ( பிரசாந்த் ) சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பயில சேர்க்கப்படுகிறான். அவனது தந்தை ( ராஜேஷ் ), ஒரு காவலர். சென்னைக்கு இடமாறுதல் செய்யப்படுகிறார். இது அவர் தனது மகன் மீது ஒரு கண் வைத்திருக்க வசதியாக உள்ளது. சிவா விரைவில் தனது கல்லூரித் தோழியான மகாலட்சுமி ( சினேகா ) மீது காதலை வளர்த்துக் கொள்கிறான். இருப்பினும், மகாவின் பணிப்பெண்ணின் மகனான நாகா ( சுப்பாராஜூ ) மகாவை தனக்கு சொந்தமாக்கிக்கொள்வதில் வெறி கொண்டவனாக இருக்கிறான். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் பின்பகுதி கதையாகும்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இந்த படத்தை இயக்கிய முருகேஷ், இதற்கு முன்பு இன்று முதல் (2003) என்ற படத்தை இயக்கியிருந்தார். படத்தில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க சினேகா தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 2004 இல் படத்தின் வேலைகளைத் தொடங்கினார்.[2] படத்தின் பெரும்பகுதி சென்னை அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் படமாக்கப்பட்டது, சில பாடல்கள் லண்டனில் படமாக்கப்பட்டன.[3] படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது, அங்கு ஏ.வி.எம் படப்பிடிப்புத் தளத்தில் ரூ .40 லட்சம் செலவில் அமைக்கபட்ட ஒரு கட்டமைப்பில் ஒரு நடனத்திற்கான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதில் பிரசாந்த்துடன், ஐம்பது நடனக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இரண்டாவது கட்டப் படப்பிடிப்பானது நாற்பது நாட்கள் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நடன நடன இயக்குனர் தினேஷ் இரண்டு நடங்களுக்கு நடன அசைவுகளை அமைத்தார். அதில் பிரசாந்த் மற்றும் மும்பையின் மினால் ஆகியோர் ஆடினர். மற்றொரு பாடலுக்கு அவர் மும்பை உருமாதிரிக் கலைஞரான ரஸ்னாவுடன் நடனமாடினார்.[4]டிரபல்கர் சதுக்கத்தில் நடந்த ஒரு பாடல் படப்பிடிப்பின் போது பாம்பே ட்ரீம்ஸ் என்ற இசைக்கலைஞர்கள் ஐம்பதுபேர் இடம்பெற்றனர்.[5]

வெளியீடு தொகு

இந்த படம் 2005 சனவரியில் மற்ற மூன்று தமிழ் படங்களுக்கு போட்டியாக வெளியானது. இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[6] தி இந்து [7]

இசை தொகு

திரைப்படதின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தினா மேற்கொண்டார். படத்தின் இசைப்பதிவு 17 திசம்பர் 2004 இல் வெளியிடப்பட்டது. மேலும் இது நேர்மறையான எதிர்வினையைப் பெற்றது, ஒரு விமர்சகர் பாடல்களை "சுவாரஸ்யமானது" என்று குறிப்பிட்டார்.[8]

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் வரிகள்
1 "ஆலகால விஷம்" ஹரிணி விவேகா
2 "ஹார்மோன் சுறக்குது" கே. கே., ஹரிணி பி.விஜய்
3 "கூட்டான் சோறு" அனுராதா ஸ்ரீராம், தினா
4 "நான் ஒரு மாதிரி" பிபி மணி, சிறீமதுமிதா சினேகன்
5 "சரக்கு சரக்கு" கார்த்திக், ஸ்ரீலேகா பார்த்தசாரதி

குறிப்புகள் தொகு

  1. "BizHat.com - Aayudham Review. Prashanth, Sneha, Vadivelu, Mansoor Ali Khan, Janakaraj, Manobala". movies.bizhat.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
  2. "The Hindu : Winning on her own terms". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
  3. "Ayudham Tamil Movie Preview cinema review stills gallery trailer video clips showtimes". IndiaGlitz. 2004-06-29. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  4. "Ayudham". 2005-02-10. Archived from the original on 2005-02-10. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
  5. "Driven by goals, not girls". The Hindu. 2004-08-17. Archived from the original on 2004-09-12. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "rediff.com: Pongal Releases, 2005". specials.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
  7. Moviebuzz (January 13, 2005). "Review : Aayudham". www.sify.com. Archived from the original on 2019-04-24. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
  8. "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". IndiaGlitz.com. Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுதம்_(2005_திரைப்படம்)&oldid=3683378" இலிருந்து மீள்விக்கப்பட்டது